Tuesday 21 April 2015

தாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை......

தாய்த் தெய்வத்திலிருந்து
போர்த் தெய்வம் வரை......
( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும்
ஓர எத்தனம்)
___________________________________________________________
தாய்த் தெய்வம் ஒன்று போர்த் தெய்வமாக மாற்றப் பட்ட கதையை
இந்து தெய்வங்களுள் ஒன்றான காளியில் காணலாம்
காளி ஒரு வித்தியாசமான தெய்வம்.
ஆணாதிக்கம் மிகுந்த நமது சமூகத்தில், காளி 2000 வருட காலமாகப் பெண்களை அடக்கி ஆளும் ஆண்வர்க்கத்தினருக்கு ஒரு சவாலாக, அடக்க முயன்றும் அடங்காத பெண்போல இன்றும் நிற்கிறாள். போல எனக்குப் படுகிறது

காளியின் தோற்றம் ஏனைய பெண் தெய்வத் தோற்றங்களினின்றும் மிக வேறுபாடுடையது பெண்ணுக்குஇந்தியச் சமூகம் விதித்த விதிகட்கு உட்படாதது. என்பார் David Kingsly எனும் ஆய்வாளர்
.
அவர் அதனை மோசமாகப் பயமுறுத்தும் ஒரு தோற்றம் எனக் கூறி அத் தோற்றத்தினைப்
பின்வருமாறு விளக்குவார்.
"கறுப்பு நிறம்,
நிர்வாணத் தோற்றம்,
நீண்ட விரித்த தலைமயிர்,
புதிதாக வெட்டப்பட்ட தலைகளான மாலை,
வெட்டப்பட்ட கைகளாலான இடுப்புப் பாவாடை,
சிறு குழந்தைகளின் பிணங்கள் காதணிகள்,
பாம்புகள் கைவளையங்கள்,
நீண்ட கூரிய கடைவாய்ப்பற்கள்,
நீண்ட கூரிய நகங்கள்,
இரத்த நிறம் கொண்ட உதடுகள்,
வெளியில் தொங்கவிட்;ட நீண்டு நாக்கு,
யுத்தகளத்தில் எப்போதும் காணப்படுவாள்.
அங்கு தன் எதிரிகளின் ரத்தம் குடிப்பாள்,
மயான பூமியில் திரிவாள்
பிணங்களுக்கு மேல் அமர்ந்திருப்பாள்.
ஆவளைச் சூழ நரிகளும், பேய்களும் நிற்கும்"
காளி பற்றிய எழுத்துக்கள் ( Kali studies)நிறைய உள்ளன.
அதன்படி ஆரம்பத்தில் இவள்
ஒரு இனக்குழு தெய்வமாக இருந்தவள் என்றும்
கி.பி. 3ம் நூற்றாண்டில்
குப்தகாலத்தில் ரத்த தாகமுள்ள
போர்த் தெய்வமாக அறியப்பட்டாள் என்றும்
கி.பி. 6ம் நூற்றாண்டில்
தேவிமாகாத்மியத்தில் அவள்
துர்காவாக அறியப்பட்டாள் என்றும்,
காதம்பரி, மாலதிமாதவம் நாடக இலக்கியம் மூலம்
அவள் சண்டி, சாமுண்டியானாள் எனவும்
கி.பி. 8ம் நூற்றாண்டில்
தாந்திரிகக் கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டாள் என்றும்
லிங்கபுராணம், மூலம்
தாருகளைக் கொல்லச் சிவனுடல் புகுந்து காளியானாள் என்றும்
அதன் பின் சிவனுடன் இணைக்கப்பட்டாள் என்றும் அறிகிறோம்.
சோழர் காலத்திலெழுந்த கலிங்கத்துப் பரணியில்
இக் காளி வருகிறாள்.
மகோன்னதமான சமூகம் எனக் கூறப் படும் அச் சமூகத்துக்கு
ஏன் காளி தேவைப் பட்டாள்?
இவையெல்லாம் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது
4 பகுதிகளாக இக்கட்டுரை வெளிவரும்
ஆர்வமுடையோர் வாசியுங்கள்
அபிபிராயமுரையுங்கள்
மௌனகுரு

No comments:

Post a Comment