Tuesday 21 April 2015

படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள்

படிப்பறிவுள்ள பாட்டாளியின்
கேள்விகள்
________________________________________________
தஞ்சை இராஜேஸ்வரப்
பெரும் கோயிலைக் கட்டியது யார்?
வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன
ராஜ ராஜ சோழன் பெயர்
அவனா சுமந்து வந்தான்
கட்டிட வேலைகளுக்கான
கற்களை?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக்
கட்டி முடித்ததும், மாலையில்
எங்கே சென்றனர்
கட்டிட வேலையாட்கள்?
இராஜேந்திர சோழன்
இலங்கையை வெற்றி கொண்டான்.
தனியாகவா?
ஓரு சமையற்காரன் கூடவா இல்லை
அவனோடு?
தமிழ் மக்களின்
வரலாற்றுப் புகழ்பெற்ற
கபாடபுரத்தையும், தென்மதுரையையும்
கடல் கொண்ட இரவில்
மரணத்தின் பிடியிலிருந்த
தமிழ் உயர் குடிப் பிரபுக்கள்
அடிமைகளின் உதவியை நாடிக்
கூக்குரலிடவில்லையா?
'மாருதப்புரவீகவல்லி
மாவிட்ட புரக்கோயிலைக் கட்டினாள்!
வரலாற்றுக் கதை இது.
அதனைக் கட்ட கல்லும் மண்ணும் சுமந்த
தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள்
எங்கே நின்று கந்தனை
வணங்கினா?
இலங்கை வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது
நீண்ட ரெயில் பாதைகளைப் போட்டனர்
ஆங்கிலத் தேசாதிபதிகள் என்று.
பாதைகள் போட்ட தொழிலாளர்கள்
இரவில் எங்கே படுத்துறங்கினர்?
என்ன சாப்பிட்டனர்?
மண்ணைத் தோண்டித் தோண்டி
அரண்மனைகளின் அத்திவாரங்களையும்
கோயில்களையும்
நாணயங்களையும்
கல்வெட்டுக்களையும்
உயர் குடித் தமிழர் பாவித்த
அணிகலன்களையும்
தெய்வ விக்கிரகங்களையும்
தேடித் தேடி
நாயாய் அலைகிறார்கள்
அகழ்வாராய்ச்சியாளர்கள்,
வரலாறு எழுத.
மன்னனின் அரண்மனையவிட்டு
வெகு தொலைவில் வாழ்ந்த
அடிமைகளும், ஏழைகளும்
மரங்களின் கீழா வாழ்ந்தனர்?
இலைகளிலா சமைத்தனர்?
மரத்துண்டுகளையா அணிகலன்களாக
அணிந்தனர்?
அவர்கள் பாடவில்லையா?
ஆடவில்லையா?
வாழவில்லையா?
அவர்களுக்கு
வரலாறே இல்லையா?
(பேட்டல் பிரஃடின் கவிதையொன்றினைத்
தழுவி எழுதியது)
.மௌனகுரு
  • You, Krishnaleela Sinnathamby and 25 others like this.
  • அடியவன் க. விக்னேஸ் பிரமீன் இப்படி கேள்விகளை கேட்பவன் படித்த பட்டாளம் என்று செல்வது வீண் இவர்கள் உன்மையில் அறிவு இல்லாதவர்கள் ஒரு குடும்பத்தில் யார் என்ன செய்தாலும் எல்லா புகழும் அந்த தலைவனைத்தான் சாரும் அது போல்தான் இதுவும் அரசனும் மக்களும் ஒரு குடும்பம் போல் தான் ஐயா இந்த அடியவன் கூறியதில் தவறு இருந்தால் மன்னிகவும்
  • Sanmugam Muttulingam Ah ... COMMON SENSE has become extremely UNCOMMON these days ...
  • Sathasivam Sasitharan This is the poem sir,your version based on this is very nice.Thanks.
    A Worker Reads History by Bertolt Brecht
    Who built the seven gates of Thebes?
    ...See More
  • Mohamed Razmi காலம் காலமாய் ஆண்டான் மீது பாய்ந்த ஒளி தான் வரலாறானது. அந்த ஒளியை அடிமை மீதும் பாய்ச்சி உள்ளது இந்தக் கவிதை!
  • Sanmugam Muttulingam : POOR COMMUNICATION
    results
    when
    ...See More
  • Vimalathithan Vimalanathan குறித்த ஒரு செயல் இன்னாருக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடும்போது அது அவருடைய சிந்தனையில் உதித்து செயலாக்கம் பெற்றதாக இருக்க வேண்டும். அதனாலேயே அந் நபருடையதாகின்றது. அரசாங்கம் வீட்டு தொடர்மாடிமனைகள் கட்டித் தருவதை எடுத்துக் கொண்டால், அங்கே அரசிடம் சம்பள...See More
  1. Jawad Maraikar குருஷேவ் (என்று ஞாபகம் ) தாஜ்மஹாலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ' எப்படியிருக்கிறது ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹாலின் அழகு ? ' என்று ஒருவர் கேட்க குருஷேவ் சொன்னாராம் ' நான் தாஜ்மஹாலின் அழகை ரசிக்கவில்லை ;அதனைக் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் ' என்று.
  2. Abdul Haq Lareena அசத்தல்!
  3. Karunchuzhi Arumugham ஐயா பிரான்சில் Eiffel Tower கட்டியவர் யார். கருத்துதான் முதன்மை . கவிகளும் சில நேரம் மயங்கலாம்.
    • Thiagarajah Wijayendran இதேபோல ஒரு கவிதை நானும் எழுதினேன். அதைக் கேட்டு வாங்கிய "இலக்கியப் பிதாமகன்" பிரசுரிக்கவும் இல்லை. திருப்பித் தரவும் இல்லை. ஏன் பிரசுரிக்கவில்லை எனச் சொல்லவும் இல்லை. என்னிடமும் பிரதி இருக்கவில்லை. அப்படி ஆயிற்று கவிதையின் கதை!
    • Kaneshalingam Thirugnanam
      Write a comment...

No comments:

Post a Comment