Tuesday 21 April 2015

தாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை...... ( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும் ஓர் எத்தனம்) கட்டுரைத் தொடர் -1

தாய்த் தெய்வத்திலிருந்து
போர்த் தெய்வம் வரை......
( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும்
ஓர் எத்தனம்)
கட்டுரைத் தொடர் -1
_________________________________________________
சி.மௌனகுரு
________________________________________________________
போர்த் தெய்வமான காளியினைப் போற்றிய மரபினை
சோழர் காலப் பின்னணியில் பல்வேறு முறையியல்களுக்கூடாகப் புரிந்து கொள்வது இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது
___________________________________________________________.
முன்னுரை
_______________
சோழர் காலத்தெழுந்த சிற்றிலக்கியங்களுள்
ஒன்று கலிங்கத்துப் பரணி.
குலோத்துங்க சோழ மன்னன் புகழ் பரப்ப இப் பரணியைப் பாடிய ஜெயங்கொண்டாருக்கு
மன்னன் கவிச்சக்கரவர்த்தி பட்டம்
வழங்கிக் கௌரவித்தான் என்ற கதையும் உண்டு.
போர்த் தெய்வமான காளியினைப் போற்றிய மரபினை
சோழர் காலப் பின்னணியில் பல்வேறு முறையியல்களுக்கூடாகப் புரிந்து கொள்வது இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது.
கலிங்கத்துப் பரணி இரண்டு வகையான உலகு பற்றிப் பேசுகிறது
. ஓன்று மானுஸ்ய உலகு.
அங்கு மனிதர்கள் உலவுகிறார்கள். காதல் புரிகிறார்கள்; , வீரம் பேசுகிறார்கள்; , போர் புரிகிறார்கள்,
இன்னொரு உலகு அமானுஸ்ய உலகு
அங்கு பேய்கள் உலவுகின்றன. கூழ் காய்ச்சுகின்றன. ஆடி மகிழ்கின்றன.
மானுஸ்ய உலகத்தி;ல் குலோத்துங்கள் நாட்டிலே கோலோச்சுகிறான்.
அமானுஸ்ய உலகிலே காளி காட்டிலே கோலோச்சுகிறாள்.
படைவீரர் தலைவன் மன்னன்.
பேய்களின் தலைவி காளி.
பேய்கள் போலச் சண்டையிடும் பேய்க் குணம் கொண்ட அரசரும் வீரரும் ஒரு புறம்.
மனிதர் போல் கூழுண்டு மகிழும் மனிதக் குணம் கொண்ட காளியும் கூளிகளும் பேய்களும் மறுபுறம்.
இரு வேறு உலகம.
; இரண்டு உலகத்தையும் இணைத்து நிற்கும் கயிறு போர் ஆகும்.
பிரமாண்டமான கற்பனைகளையும் படிமங்களையும், புலக்காட்சிகளையும் எழுப்பி பிரமிக்க வைக்கிறது கலிங்கத்துப் பரணி
. நம்ப முடியாத கற்பனைகள், குரூரங்கள் கோலங்கள்.
இத்தகைய கற்பனைகளும் கருத்துக்களும் சமூக வாழ் வினடியாகவே எழுகின்றன.
கருத்துக்கள் கற்பiனைகள் வாழ்நிலையினூடாகவே எழுகின்றன. வுhழ்பனுபவங்கள்தான் கற்பனைகளாக வெளிப்படுகின்றன
. படை எடுப்பும் போரும் கண்ணாற் கண்டவை.
பேய்கள் கூழ்சமைத்தமை கற்பனை.
கற்பனைகூட பௌதீக அடித்தளத்தினின்றே உருவாகின்றது. கற்பனையினை சொற்களால் கவிஞன் புலப்படுத்துகின்றான்.
சொற்களையும் கற்பனைகளையும் கட்டுடைத்துப் பார்ப்பின் அக்கற்பனைகளுக்கான பௌதீக அடித்தளத்தினையும் யார் நலத்திற்காக அக் கற்பனைகள் கட்டப்பட்டன என்பதனையும் கண்டுகொள்ள முடியும்.
முதலில் நாம் சோழர்கால அரசியல் சமூக, பண்பாட்டு அமைப்பினைக் கண்டுகொள்வோம்.
சோழர்கால அரசியல், சமயப் பண்பாடு
_______________________________________
கி.பி. 850-1260 வரை 460 வருடங்கள் தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி நிலவியுள்ளது.
கி.பி. 2ம் நூற்றாண்டிலே தஞ்சாவூர்ப் பகுதியில் ஒரு சிறு அரச குலமாக இருந்த சோழர் குலம் கி.பி. 850 க்குப் பிறகு தென்னிந்தியாவில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களினால் பேரசானது.
இவ்வரச குலத்தின் பேரெழுச்சிக்கு அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உருப்பெற்ற பொருளாதார சமூக மாற்றங்களும் காரணமாயின.;
சோழர் கால அரசியல் பற்றியும் சமூக அமைப்பு பற்றியும் நிறையவே ஆய்வுகள் வந்துள்ளன. அக்காலத்தை மகோன்னதமான காலமாகவும் தமிழரின் பொற்காலமாகவும் காட்டுவோர்;. பலர்
சதாசிவ பண்டாரத்தார், நீலகண்டசாஸ்திரி முதலானோர் தொடக்கம் இன்றைய எழுத்தாளா வரை இதற்குள் அடஙகுவர்.
சோழர்கால உற்பத்தி முறையில் சாதி பிரதான இடம் வகித்தது.
நிலத்தின் உடமையாளர்களாக பிராமணர்;களும், வேளாளர்களும் இருந்தனர். ஏனைய சாதிகள் நிலமற்றவர்களாக இருந்தனர்
. இவர்கள் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய நிலையின; சமயங்களும் சமய தத்துவங்களும் நியாயப்படுத்தின
. சாதி முறை இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என சில சமயவாதிகள் நிறுவினர்.
இச்சமய ஞாயப்பாடு அவர்களுக்கு ஒரு கருத்தியில் தடையை விதித்தது.
இது அவர்களைச் சாதிப்பிரிவை ஏற்க ஏற்க வைத்தது.
சுருங்கச் சொன்னால் ஒரு இராணுவத்தின் வேலையை சாதியமைப்பு செய்தது என்ற கெயில் ஓம் வெட்டின் சோழர்காலச் சமூக ஆய்வு வரை இது வரை சோழர்கால சமூக அமைப்பு பற்றிய பல ஆய்வுகள் வந்து விட்டன.
பேட்டன்ஸ்ரைன், நொபுறுகறோஜிமா, சுப்பராயலு, கதலின்கௌ, கெயில் ஓம்வெட், செண்பகலபக்சுமி, எஸ். மீனாட்சி, குணா, கைலாசபதி, சிவத்தம்பி, பத்மநாதன் போன்றோரின் ஆய்வுகள' சோழர்கால அரசியலையும் சமூகத்தையும் புரிந்துகொள்ள ஒளிபாய்ச்சிய ஆய்வுகளாகும்.
சோழர்காலக் கோயில் அமைப்பு சுரண்டல் தன்மை கொண்டது என்றும், கோயிலின் சுரண்டலுக்கு எதிராக சுரண்டுப்பட்ட மக்களின் போராட்டங்கள் நடந்தன என்றும் சோழர்காலப் பொருளாதார அமைப்பின் சுரண்டல் தன்மை காரணமாக உழுதுண்போர் கஸ்ட நிலையிலும், உழுவித்துண்போர் பெரும் வசதிகளுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்தனர் என்றும் ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்
. சோழர் சமூக அமைப்பை மையம் விளிம்பு எனப் பிரித்து மையத்தில் வாழ்ந்தோர் அரசனும் அவனைச் சார்ந்த பிரபுக்களும், பிராமணர்களும் என்றும்
விளிம்பில் வாழ்ந்தோர் சாதாரண உழைக்கும் மக்கள் என்றும்
சகல உரிமைகளும் சுகபோகங்களும் மையத்தில் வாழ்ந்தோருக்கு மாத்திரமே கிடைக்கும் படியான சமூக அமைப்பு நிலவியது என்றும் ஆய்வாளர் நிரூபித்துள்ளனர்.
சுருங்கச் சொன்னால் கடந்த 50 வருடகால ஆய்வுகள் சோழ காலத்தின் உன்னத நிலையை மாத்திரமன்று இன்னொரு பக்கத்தையும் காட்டுகின்றது.
மையத்திலே சைவமதமும்
வைஸ்ணவ மதமுமே பெரும் மதங்களாக நிலவின.
அதிலும் சைவமே அரச மதமாகப் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது
. இவ்வண்ணம் பெரும் சமயங்களும் அது சார்ந்த பெரும் தத்துவங்களும் எழுந்த காலப் பகுதியிலேயேதான் விளிம்பு நிலைத் தெய்வமான காளிக்கு நிதம்ப சூதனி கோயிலை விஜயாலயன் எடுப்பித்தான்.
ஆதன் பின் சோழர் கோயில்களில் துர்க்கை சிலை இடம்பெறுகிறது.
குலோத்துங்க சோழன் காலத்தில் ( கி.பி. 1070- 1120) கலிங்கத்துப்
பரணியில் காளிக்குப் பிரதான இடம் கிடைக்கிறது.
கலிங்கத்துப் பரணயின் காளியைப் புரிந்துகொள்ள
முதலில் பொதுவாக காளி பற்றிய புரிதல் அவசியமானது
.(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment