Tuesday 21 April 2015

தாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை...... ( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும் ஓர் எத்தனம்) கட்டுரைத் தொடர் -3

தாய்த் தெய்வத்திலிருந்து
போர்த் தெய்வம் வரை......
( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும்
ஓர் எத்தனம்)
கட்டுரைத் தொடர் -..3....
________________________________________________
மௌனகுரு
________________________________________________

நம்முன்னுள்ள கேள்விகள் இவைதாம்
1. பெரும் சமயங்கள் ( வைணவம், சைவம்) கோலோச்சிய
முக்கியமாகச் சைவம் உன்னத நிலையில் இருந்த ஒரு சூழலில்
சிறு தேவதையாகக் கருதப்பட்ட காளியை
முதன்மைப்படுத்தி ஒரு இலக்கியம் தோன்றியமைக்கான காரணம் என்ன?
2. மென்மை,
நுண்மை,
இங்கிதம்
கொண்ட உணர்வுகளை ஏனைய இலக்கியங்கள் மூலமும் இசை, நடனம் நாடகம் மூலமும் இரசித்த மன்னனும் அரசவையினரும், உயர் குழாத்தினரும்
குரூரத்தை அழகாகக் கூறும் ஒரு இலக்கியத்தை மனம்விட்டு ரசித்த காரணம் யாது.
3. கள்ளர்
, நாடார்
போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் தெய்வமான காளிக்கு
விஜயாலயன் நிதம்ப சூதனி கோயில் கட்டியதும்,
துர்க்கையின் உருவச் சிலைகள் பெரும் கோயில்களில் பரிவார தெய்வங்களாக வைக்கப்பட்டதற்குமான காரணம் என்ன?
4. சுடுகாட்டிலும்
, மிகவும் தாழ்த்தப்பட்ட சண்டாளர் மத்தியிலும்
அமைக்கப்பட்ட காளி கோயில்
நகரத்தின் ஊர்களில் அமைக்கப்பட்டதோடு
அக்காளி பற்றிப் பாடும் ஓர் இலக்கியம்
அரசவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னணி என்ன?
5. விளிம்பு நிலைத் தெய்வம் ,
மைய நிலைக்குள் இழுக்கப்பட்டமை ஏன்?
இவ் வினாவுக்கான விடைகள்
மானுடவியல்
வரலாற்றியல்,
சமூகவியல்,
மெய்யியல்,
உளவியல்
பெண்ணியல்
ஆகிய துறைகளுக்கூடாகப் புகுந்த புறப்படும் போது
கிடைக்க வாய்ப்புக்கள் ஏற்படலாம்
..(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment