Tuesday 21 April 2015

அரங்க ஆய்வு கூடத்தில் Act 4 Theatre for change குழுவினர்

    Act4 Theatre for change குழுவினர் இவ்வாரம் முழுவதும் தெரிந்தெடுக்கப் பட்ட சில பாடசாலைகளில் சிறுவர்துஷ்பிரயோகம் சம்பந்தமானவிவாத அரங்குஒன்றைமேடையிட்டு வருகிறார்கள்.
    இதன்கலையாக்கநெறியாளர்நலிந்தா பிரமரத்னா ஆவார்
    .இவரின்கீழ்விவாதஅர்ங்க்குசம்பந்தமானபயிற்சி பெற்ற 15தமிழ் கலைஞர்கள் இவ்வரங்கை தமிழ்பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.
    விவாத அரங்கின் கண்டுபிடிப்பாளர் பிரேசில் நாட்டவரான
    ஆகஸ்தாபோல் அவர்கள்
    .இவர்அறிமுகம் செய்த அரங்கே அடக்கப் பட்டவர்களுக்கான அரங்காகும்(Theatre of the oppressed)
    இதிலிருந்து கிளை விடுவனவே
    படிம அரங்கு (image theatre)
    ,கட்புலனாகா அரங்கு( invisible Theatre)
    ,Legislative theatre,
    விவாத அரங்கு(fouram Theatre) என்பனவாம்
    இவை ஒன்றுடன் ஒன்று தொடர் பானாவை
    .விவாத அரங்கு பார்வையாளரைப் பங்களராகும் திறன் கொண்டது.இன்நாடகங்கள் பிரச்சனைகளை மையம் கொண்ட நாடகங்களாகும்
    .முதலில் நாடகத்தைநடத்திக் காட்டுவர்
    .பின்னர் இபபத்திராங்க்களில் ஒருவராக அப்பிரச்சனைகளை பார்வையாளர் எதிர்கொள்ளும் விதத்தை பார்வையாளர் பங்கேற்கும்படிஅவர்களைத்தூண்டிஅவர்கள்
    அபிப்பிராயங்களையும்பகிரதூண்டுவர்
    .ஒழுங்க்கமைப்பவர்(Fasilitator)கெட்டித்னம்
    இதில் முக்கியம்.
    நாடகத்தைதொய்வின்றிக் கொண்டு செல்பவர் இவரே
    சிறந்த மேற்கத்தேய விவாத அரங்க நெறியாளர்களிடம்
    பயிற்சி பெற்ற நலிந்தா,பிரதீபன் தலைமையில்
    வந்த இக்குழுவினர் நேற்று அரங்க ஆய்வுகூடம் வந்திருந்தனர்.
    தமதுஅனுபவங்களை ஆய்வு கூடத்தினருடன் பகிர்ந்து கொண்டனர்
    .ஆய்வு கூடத்தினர் தமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து
    கொண்டனர்.
    பரஸ்பர பகிர்தல்
    .கலைஞர் புரிந்துணர்வு.
    அரங்க ஆய்வுகூட மாணவர்களுக்கு இங்கு வந்து
    விவாத அரங்கப் பயிற்சி அளிக்கும்படிநான்விடுத்த வேண்டுகோளை நலிந்தா பிரேமாரத்னா மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
    என்னையும் தம் குழுவினரக்கு பயிற்சி தரும்படி கேட்டுக்கொண்டார்.
    என் அரங்கு வேறு
    அவர்அரங்குவேறு
    எனினும் ஒருவரிலிருந்து இன்னொருவர் பெற விரும்புகிறோம்
    மாணவர்கள்நேற்றைய கலந்துரையாடலில் நிறைந்த பயன் பெற்றனர்
    படத்தில்;1.அரங்கஆய்வுகூடத்தில்Act4Theatreforchangeகுழுவினர்
    2. விவாத அரங்கு பற்றி உரை நிகழ்த்தும்
    நலிந்தா பிரேமாரத்னா

    மௌனகுரு
  • Sanmugam Muttulingam : Mau, THANKS for your valuable explantion ! May you remain young, cheerful, healthy, vibrant, action-packed, people-oriented - as ever ... 'Madman' (visAr MuTHTHAn)
  • Kuppilan Shanmugan எவ்வளவு நல்ல விடயங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
  • Maunaguru Sinniah mikka nanri kuppilaan
  • Tharmaratnam Juvaneswary may god bless you with good health and happiness. Enrenrum pathinaru

1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - MapYRO
    Discover the Borgata Hotel Casino & 광명 출장샵 Spa, 강원도 출장샵 Atlantic City and other places to stay closest to 군산 출장샵 Atlantic City. 청주 출장마사지 Borgata 강릉 출장안마 Hotel Casino & Spa is situated next to Atlantic City Marina

    ReplyDelete