Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 5

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை-
கட்டுரைத் தொடர்- 5
________________________________________________________ மௌனகுரு
திராவிடரின் வளர்ச்சி.
________________________
நீர்ப்பாசனம், மிகுந்த வளமுள்ள பகுதிகளில் நிலையாக வாழத் தொடங்கிய திராவிடர் பொருளாதார வளம் பெற்று உயர்ந்தோராகவும்,
விளிம்புகளில் நீர்ப்பாசன வளம் குறைந்த பகுதிகளில் வாழ்ந்தோர் வசதி வாய்ப்புகளில் அவர்கட்கு அடுத்த படியிலும்
இவர்கட்கு அப்பால் தனித்து வாழ்ந்தோர் கீழ்ப்படியிலும் கணிக்கப்பட்டனர்
. இவர்களுக்கிடையே ஓயாத போர்கள் நிகழ்ந்தன.
வெட்சி, வஞ்சி உழிஞைப் போர்கள் இவற்றின் பழைய நினைவுகளையே குறிக்கின்றன.
தமிழ் நாட்டுக்கு இவ்வண்ணம் வந்த திராவிடர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும்
மொசப்பதேமிச நாகரிகம,; பேர்சிய நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும் பலர் முடிவு.
திராவிடரின் வழிபாடான மலையி;ல் முருகனை வணங்கும் வணக்கத்தை சுமேரியாவில் மலைக் கோயில் வணக்கத்துடன் தொடர்பு படுத்துவர்.
அங்கு காணப்பட்ட ஊர் எனும் சொல் தமிழிலும் ஊர் என வழக்கிலுள்ளதுடன் அதே அர்த்தத்தைத் தருவதையும் சுட்டிக் காட்டுவர்.
அங்கு நிலவிய மலைப் பெண் தெய்வ வணக்கமே தமிழர் மத்தியில் தாய்த் தெய்வ வணக்கமாக வந்தது என்பர்.
தமிழர் மத்தியில் வந்த கோயில் தேவதாசி முறையை அக்கோயில் முறையுடன் ஒப்பிடுவர்.
இவ்வண்ணம் சுமேரியருக்கும் திராவிடருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டி இத் திராவிடர் மத்திய தரைக் கடலில் இருந்து இந்தியா வந்தவர் என நிறுவுவர்.
திராவிடரின் தமி;ழ் நாட்டு வருகை
________________________________________
1. தரைவழியாகவும்
2. கடல் வழியாகவும்
நடந்தேறியது.
தரை வழியாக வந்தோர்
ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான்
சிந்துவெளி,
மேற்கு இந்தியாவுக்கூடாக
தென்னிந்தியாவுக்கு வந்து
அங்கு,
மலையாளத்தார்
ஆந்திரர், என நான்கு வகை திராவிட மொழி பேசும் இனங்களாகப் பிரிந்தனர் என்பது தரை வழிக் தமிழர் தெலுங்கர் கொள்கையினர் கருத்து.
திராவிடர் மத்தியதரைக்கடலில் இருந்து கப்பலில் நேரடியாக தென்னிந்தியா நோக்கி வந்து தமிழ் நாட்டில் தம் நாகரிகம் பரப்பினர் என்பது கடல் வழிக் கொள்கையினர் கருத்து
.
இவை இரண்டும் நிகழ்ந்தன என்பதும் சிலர் முடிவு.
திராவிட இனத்தினர் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் குடியேறி நீர்ப்பாசனம் செய்து உபரி கண்டு மென்மேலும் நாகரிகம் பெற்ற காலத்திலே தான் வடநாட்டுத் தொடர்பும் றோம கிரேக்க தொடர்புகளும் இவர்கட்கு எற்பட்டன.
அரிக்கமேட்டு அகழ்வாராய்வுச் சின்னங்கள்.
அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாராய்வுகள் இதற்குச் சான்று பகருகின்றன.
அரிக்க மேட்டில் குளத்தூர், ஆலக்கரை திருக்கம்பிளியூர் எனும் இடங்களில் சிவப்பு, கறுப்பு, மட்பாண்டங்கள் கிடைக்கின்றன
. இவை றோமர் பாவித்த மட்பாண்டங்கள் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
தமிழ் பிராஹ்மிக்கல்வெட்டுக்கள் இங்கு கிடைக்கின்றன.
எழுத்து வளர்ச்சி தமிழில் ஆரம்பித்தமைக்கு இது சான்று.
சமண பௌத்தர்களின் வருகை இக்காலத்தில் தான் நடைபெற்றிருக்கும்.
நகரங்கள் தோற்றம் பெற்ற காலமும் இதுவே
. நகரம் வியாபாரிகளால் உருவாவது.
இதனால் ஒரு வர்த்தக சமூகம் உருவாயிருக்க வேண்டும.;
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சியில் நகரத்தையும் வர்த்தக சமூகத்தையும் பற்றிய செய்திகளைக் காணுகிறோம்.
கலித்தொகை பரிபாடலிலும் நகரங்களின் சிறப்பு பேசப்படுகிறது.
கரூர்தாலுகா
, ஆறு நாட்டார் மலை
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பிராஹ்மி கல்வெட்டுக்கள் பற்றி மகாதேவன், மயிலை சீனிவேங்கடசாமி, சு. நாகசாமி, பன்னீர்;ச் செல்வம் ஆகிய தொல்பொருளாளர் ஆராய்ந்துள்ளனர்.
எழுத்துக்கலை இக்காலத்தில் தோன்றி விட்டது என்றும், தமிழ் ஒரு எழுத்து மொழியான காலம் இக்காலம் எனவும் இவர்கள் கூறினர்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு இவ்வெழுத்துக்கள் உரியன என நிறுவிய இவர்கள் தமிழ், பிராமியைத் தழுவி உருவாயிற்று என்றும் கூறினர்.
முதல் இரண்டாம் நூற்றாண்டுகள் பரிசோதனை நிலையிலிருந்த இவ்வெழுத்துக்கள் பின்னர் நிறுவப்பட்டு ஏற்கப்பட்டு விட்டன என்பர் இவர்.
இக்காலத்திலே தான் வாய்மொழியில் இருந்த பண்டைய இலக்கியங்கள் எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் இக்காலத்தில் இருவகை இலக்கியங்கள் எழுந்தன.
1. பழைய வாய்மொழிப் பாடல்கள் எழுத்தில் எழுப்பட்டன.
2. புதிதாகவும் பல பாடல்கள் எழுதப்பட்டன.
பாணர் - புலவர் என்ற பேதம் ஏற்படுகிறது.
பாணர் என்போர் கல்வி அறிவற்றோர் - பாட்டுப்பாடுபவர்- தலைவர்களைப் புகழ்வோர்
; புலவர் என்போர் அறிவாளிகள். செந்நாப்புலவர் என்ற சொற்பிரயோகம் உருவானது
. அறிவாளிகளே சான்றோர் என அழைக்கப்பட்டனர்.
காவிரிப்பூம் பட்டின அகழ்வு ஆராய்வுச் சின்னங்கள்.
__________________________________________________
காவிரிப்பூம் பட்டினத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு மேலும் பல புதிய தகவல்களைத் தந்தது. அங்கு பின் வரும் புதை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
1. சிவப்பு – கறுப்பு மட்பாண்டம்
2. வட்டக்கிணறுகள்.
3. றோமனிய நாணயங்கள்.
4. பலவகைப்பட்ட அழகான சுடுமண் சிற்பங்கள்
5. செங்கல்லால் கட்டப்பட்ட அணைக்கட்டுக்கள். (கீழையூரில்)
6. நீர் வளங்கள் (வானகிரியில்);.
7. பாதி பெறுமதியான ரத்தினக் கற்கள்.
8. மூன்று புத்த மடலாயங்கள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள வெள்ளையன் இருப்பு (Roman colony)
எனும் இடமும்,
மேற் குறிப்பிட்ட புதை பொருள் சின்னங்களும்
காவிரிபூம்பட்டினம் பிறநாட்டார் குடியிருப்புக்களைக் கொண்ட, வர்த்தகம் இடம் பெற்ற, நகரமயமாகிய ஒரு கலாசார மத்தியஸ்தானம் (Cultural centre)என்பதற்கான சான்றுகளாகும்.
அகம் 110,181,190,
பதிற்றுப் பத்து,
பட்டினப்பாலை,
புறநானூற்றுப் பாடல்கள்
என்பவற்றில் இவற்றிற்கான சான்றுகள் உண்டு.
கபாடபுரம், தென்மதுரை இருந்ததென ஐதீகங்கள் உண்டு
. இது குமரி நாட்டின் ஒரு பகுதி என்பர் சிலர்.
பேராசிரியர் சிவத்தம்பி இவை தாமிரபருணியின் வாயிலில் இருந்த நகர்கள் என்கிறார்;.
தண்ணீர் அடி அகழ்வாய்வு (Under sea archaeology) தான் இதனை மேலும் விளக்கும்

ஆரியர் வருகையும், ஆரியமயமாக்கமும்
_______________________________________
.
சங்க இலக்கியங்களில் பிராமண கருத்துக்களின் செல்வாக்கும், வடமொழிக் கலப்பும் சிறிதளவு காணப்படுகிறது
. நீhப்;பாசன விவசாயம் பெருகி,
வணிகம் வளர்ந்து
நிலவுடமையாளரும் வணிகரும் அதிகாரப் பலம் பெற்ற காலத்திலேதான் ஆரியர் வருகையும் நிகழ்கிறது.
வளர்ச்சி பெற்ற நிலக்கிழாருக்கும்; அரசர்கட்கும,; வணிகர்கட்கும் பிராமணரின் அறிவும் உதவியும் தேவைப்பட்டன.
அவர்களின்யாகம் இங்கு அறிமுகமானது.
அரசர்கள் பகையசரசர்களை வெல்ல இராச யூக யாகம் செய்தனர்.(இராச யூக யாகம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அரசனொருவனுக்குப் பெயர் உண்டு.)
வளம் பெற்ற பிரதேசங்களைக் கொடுத்து அங்கு மன்னர்கள் தமக்கு உதவி புரிய ஆலோசனை கூற வடநாட்டுப் பிராமணர்களைக் குடியேற்றினர்.
இவ்வண்ணம் ஆரியக் குடியேற்றமும் ஏற்படலாயிற்று.
ஏற்கனவே நிலம் படைத்த திராவிட (தமிழ்) நிலக்கிழார் உருவாகியிருந்தனர்.
தற்போது புதிதாக நிலம் பெற்ற ஆரிய (பிராமண) நிலக்கிழாரும் தோன்றி விடுகின்றனர்
. இவ்விரு வகை நிலக்கிழாரும் தத்தம் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு தமிழ் நாட்டு வரலாற்றில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதை வரலாற்றில் பின்னர் காணுகின்றோம்.
ஆரிய நிலக்கிழாரின் நில மேலாண்மையும் அறிவு மேலாண்மையும் தமிழ் சமூகத்தின் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது.
முக்கியமாக ஆரியரின் வேத உபநிடத புராணங்கள் தமிழர் வாழ்வில் ஊடுருவின.
வேத கடவுளர் கிரியைகள் பண்பாடுகள் பெரியவை என ஏற்கப்பட்டன.
தமிழர்கள் ஆரிய மயமாக்கத்திற்குட்படலாயினர்.
தொல்காப்பியத்திற் கூறப்படும் மாயோன், இந்திரன், வருணன், போன்ற தெய்வங்கள் ஆரியத் தெய்வங்களே.
சிலப்பதிகாரத்தில் பின்னாளில் நடைபெறும் இந்திரவிழா, முழுக்க முழுக்க ஆரிய விழாவாகும்.
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காவையில் மாதவி ஆடுகின்ற பதினொரு வகை ஆடல்களும் வடமொழிக் கதைகளில் வரும் கடவுளர்கள் ஆடிய நடனங்களே.
இவ்வாறு தமிழ் நாட்டு வரலற்றுக் காலம் ஆரம்பமாகும் வேளையில் தமிழ் நாட்டில் மூன்று விதமான தமிழர்கள் காணப்படுகிறார்கள்.
1. புராதன தமிழர்கள்
2. திராவிடத் தமிழர்கள்
3. ஆரியத் தமிழர்கள்.
இப்பின்னணியில் சங்க காலம் பற்றி நோக்குவோம். சங்ககாலத்தை அறிய எமக்குதவுபவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டே சங்க காலம் பற்றி ஒரு கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது.
(மீதி நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 6

கட்டுரையின் இறுதிப் பகுதி
சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -6
________________________________________________________
மௌனகுரு
_______________________________________________________
ஒரு கால கட்டத்தின் சமூக அமைப்பினை தெளிவாக அறிகின்ற போதுதான் அந்தக் கால கட்டத்தின் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையம் தெளிவாகவும் பூரணமாகவும் அறிந்து கொள்ள முடியும். துரதிஷ்டவசமாக தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் தமிழிலே மிகவும் குறைவு.
___________________________________________________
மேற்குறிப்பிட்ட சோழர் கால சமூக அமைப்பிலிருந்தும் சோழர் கால அதிகார கட்டமைப்பிலிருந்தும் நாம் சோழர் கால சமூக கட்டமைப்பினால்
அங்கு நிலவிய தொழில் முறைமைகளையும்
சாதி முறைமைகளையும் வைத்துப்
பின்வருமாறு பிரிக்கலாம்.
சமூகத்தின் மேல் நிலையிலே அரசர்களும், அரசர்களைச் சார்ந்த அரச குடியினரும் இருந்தார்கள். இந்த அரச குடியினருக்கு உதவியாக மந்திரிகளாக, கல்வி கற்பிப்பவர்களாக பிராமணர்கள் இருந்தார்கள்.
அரசர்களுக்கு படை உதவி புரிபவர்களாக வேளாளர், நில உடமையாளர்கள் இருந்தார்கள்.
இந்த அரச, பிராமணர், வேளாளர் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு மேல் தட்டு வர்க்கமே மையத்திலுள்ள விளைநிலங்களை தங்களுடைய சொத்துக்களாக வைத்துக் கொண்டு மையத்திலிருந்து ஆட்சி செலுத்தியவர்களாகும்.
படைகளை வைத்துக் கொண்டு அரசர்களும், அரசர்களைச் சார்ந்தோரும் வேளாளர்களும் அதிகாரம் செலுத்தஅந்த அதிகாரத்தினை ஞாயப்படுத்துகின்ற தத்துவங்களையும் நூல்களையும் எழுதி இந்த அதிகாரத்தை மக்கள் ஏற்கும்படியாக செய்கின்ற பணியினை இந்த அறிவாளர்கள் செய்தார்கள்.
பிராமணர்களின் பங்கு இதற்கு முக்கியமாக இருந்தது.
முதலாம் ராஜராஜன் காலத்திலே நிறைய பிராமணர்கள் குடியேற்றப்பட்டார்கள்
வடநாட்டிலிருந்து பிராமணர்கள் இங்கே கொண்டு வரப்பட்டார்கள்
அவர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்ற சிறந்த விளை நிலங்கள் மையப்பகுதியிலே கொடுக்கப்பட்டன.
பிராமண கிராமங்கள் உருவாகியிருந்தன.
அதனை நடத்துவதற்கென பிராமணர்கள் கொண்ட சபைகள் உருவாக்கப்பட்டு தலைவர்களாகப் பிராமணர்கள் இருந்தார்கள்.
இந்த மையத்திலிருந்து பல நிலங்கள் படைத் தலைவர்களாக இருந்த வேளாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தன.
அந்த நிலங்களை வேளாண்வகை என்று அழைத்தார்கள்
இந்த வேளாண்வகை நிலங்களில் அடிமை வேலை செய்வதற்கென மையப்படுத்தப்பட்ட பகுதியின் தூரத்திலே சேரிப்புறத்திலே அடிமைகள் இருந்தார்கள்.
பள்ளர்கள்,பறையர்கள் என இவ்வுழைக்கும் மக்கள் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டனர்.
ஆனால் முழு சுக பாக்கியங்களையும் அனுபவித்தவர்கள் இந்த உழுவித்து உண்பித்தவர்களான வேளாளர்களே.
அதே நேரம் சோழர் காலத்திலிருந்த அரசர்களுக்கு படைத் தலைவர்களாகச் சென்ற பலர் இருந்திருக்கிறார்கள்.
அகமுடையார், பள்ளிகள், கள்ளர், மறவர்,போன்றவர்கள் படைகளில் இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சமூகப் பிரிவினர் படைத் தலமை தாங்கிச் சென்ற போது அரசன் அவர்களுக்கு நிலமானியங்கள் அளித்தான்.
இதன் காரணமாக கள்ளர், மறவர், அகமுடையார், இந்த மூவரும் தங்களை நிலவுடையாளர்களாக மாற்றி தாங்களும் வேளாளர்களோடு சமமானவர்கள் என்ற ஒரு கருத்துருவினை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
'கள்ளர், மறவர், கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆகினரே' என்கின்ற ஒரு கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது.
இவ்வண்ணமாக சமூகத்தின் அரச அதிகாரத்தின் மையப் பகுதியிலே அரசர்களும், அரசரைச் சார்ந்தோரும் அரச குடிகளும் பிராமணர்களும், வேளாளர் ஆகியோரும் அதிகாரம் படைபலமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அமைய ஏனையோர் இந்த நிலமானிய அமைப்பினை இயக்குகின்ற வகையில் பங்களிக்கின்ற குடிகளாக மாறினர்.
சமூகத்தின் இரண்டாவது நிலையில் இருந்தவர்கள் கைவினைஞர்கள் ஆவர்.
நீர்ப்பாசனத்தை நடத்துகின்ற கட்டிடங்கள் வாய்க்கால்களைக் கட்டவும் அரசர்களால் நிர்மாணிக்கப்ட்ட கோயில்களை, அரண்மனைகளைக் கட்டவும், பாதைகளைப் போடவும், ஆன சிற்பிகள் ஆச்சாரிகள் அதாவது கட்டிட நிர்மாணக்காரர்கள்,
விவசாயத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி பண்ணக் கூடிய கொல்லர்கள், தச்சர்கள், கற்தச்சர்கள் நகை வேலை செய்யக் கூடியவர்கள், உலோக வேலை செய்யக் கூடியவர்கள் என்று ஒரு தொழில் பரம்பரையினர் அடுத்த நிலையிலே முக்கியமாக இந்த சமூக அமைப்பிற்கு தேவைப்பட்டனர்.
அவர்களிடம் நிலங்கள் இருக்கவில்லை. நிலமானியம் நிலைப்பதற்கான உதவிகளை அவர்கள் செய்தனர்.
இந்த வகையிலே சமூகத்தின் இரண்டாவது படியாக அவர்கள் கருதப்பட்டனர்.
இந்த நிலங்களிலே உழுதுவதற்கும், பண்ணை வேலை செய்வதற்கும் என பறையர், பள்ளர் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்
இவர்களுக்கு இருப்பதற்கு நிலங்கள், விளைநிலங்கள், கொடுக்கப்படவில்லை
. விளைநிலங்களுக்கு தூரத்திலே இருந்த ஒரு சேரிப்புறத்திலே வசதியற்ற இடங்களில் இவர்கள் விடப்பட்டனர்.
இந்த எல்லோருக்கும் தொண்டு புரிவதற்கென, சேவை புரிவதற்கென வண்ணார், பறையர், அம்பட்டர், போன்ற சாதிகள் வகுக்கப்பட்டன.
கோயிலில் ஓதுவார்கள் கோயிலில் ஆடுபவர்கள், கோயிலில் வேலை செய்பவர்கள், என்று கோயிலுக்கென்று சில சாதியினர் வகுக்கப்ட்டனர்.
இவ்வண்ணமாக ஒரு உயர் நிலையில் இருந்து தாழ்நிலை வரைக்குமான ஒரு சாதி அமைப்பொன்று தமிழர்களிடையே உருவாகின்றது.
இந்த சாதியமைப்பினை கட்டிக்காக்கவும் சாதியமைப்பினை நிலைநிறுத்தவுமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் கலாசாரங்களையும் இந்தக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் பிரசாரம் செய்தன.
'ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே அந்தக் காலகட்டத்தின் ஆளும் கருத்துக்களாக விளங்குகின்றன. அதாவது சமூகத்தின் ஆளுகின்ற பொருளாதார சக்தியாக எந்த வர்க்கம் விளங்குகின்றதோ எந்த வர்க்கம் பொருள் உற்பத்தி சாதனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ அந்த வர்க்கத்தின் கட்டுப் பாட்டிலேயே சிந்தனைகளும் உற்பத்திச் சாதனங்களும் இருக்கின்றன.
அதனாலேயே இத்தகைய சிந்தனை உற்பத்திச் சாதனங்களில் பின்தங்கியவாக்ளாக இருப்பவர்களின் கருத்துக்கள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் கட்டப்பாட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.'
சோழர்காலத்தில் நிலவிய நிலமானிய அமைப்பின் ஆட்சி முறையிலும் சமூக அமைப்பிலும் பிராமணரும், வேளாளரும், நிலம் வைத்திருப்போரும், அரசரும், வணிகரும் ஆளும் வர்க்கமாக இருந்தனர்.
சோழர் காலத்தில் வணிக வர்க்கம் மேலெழும்புகிறது.அதற்கொரு விரிவான தளமும் இருந்தது

மணிகிராமம்,
வளஞ்சியர்,
சூஸகர்
ராஜராஜப் பெருநிரவையார்,
நானா தேச திசை ஆயிரத்து ஐநூற்று
எனப் பல பெயர்களில் வணிகச் சபைகள் இயங்கின.
நிலவுடமையாளரும் வணிகரும் பணப்பலமுடையோராயும்,
பிராமணர் கல்விப் பலம் உடையோராயம்,
அரசர் படைபலமுடையோராயும் இருந்தனர்.
செல்வமும் கல்வியும் வீரமும் இணைந்து அதிகாரம் செலுத்தின.
கல்வியும், செல்வமும்,வீரமும், தமக்குள் சமரசம் செய்து தம் கீழ் உள்ளோரை அடக்கி ஆண்டன.
அச்சமூக அமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலைத் தரும் தத்துவம் கலை, இலக்கியங்கள், பெருவாரியாக வளர இவ் ஆளும் வர்க்கம் பெருமூக்கமளித்தது.
சோழர் காலத்தில் வளர்க்கப்பட்ட வேதக்கல்வி, வேதக்கல்வியை வளர்த்து வடிவமைக்கப்பட்ட வேதப் பாடசாலைகள்
வேதக்கல்வியை வளர்க்கும் பிராமணர்கட்கு அளிக்கப்பட்ட பிரம்மதேயக் காணிகள், ஊர்கள்,
அரசர்களும் நிலப்பிரபுக்களும் போட்டி போட்டுக் கொண்டு எழுப்பிய கோயில்கள், மடங்கள், என்பனவும்,
அரசர்களைப் புகழ்ந்து எழுந்த உலா பரணி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களும்
சாதிப்பாகுபாட்டை மறைமகமாக நிலை நிறுத்தும் மதமும்
சோழர்காலத்தில் ஆளும் வர்க்கம் தமது கருத்தியலை உருவாக்க எடுத்த முயற்சிகளாகும்.
இக்காலகட்டத்தில் இடைநிலையிலிருந்த தொழிலாளத் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, மிக அடித்தள நிலையிலிருந்த உழைக்கும் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, அல்லது அவர்களது வழிபாட்டுமுறைகளோ, சமயச்சிந்தனைகளோ, வாழ்க்கை முறைகளோ,பண்பாடோ, சோழர் கால பெரும் கலை இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. அது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவமில்லை.
இவ்வகையில் சோழர்கால சமூக அமைப்பிற்கும் அக்கால தத்துவம் கலை, இலக்கியங்கட்குமான உறவு தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.
இந்த ஒரு அடக்குமுறையின்பின்னணியில் எதிர்ப்புக் குரல் தந்த மதங்களும் இருந்தன.வைஷ்ணவம் அதில் ஒன்று.அதிலும் இராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தென்கலை வைஷ்ணவ வழி வழிவந்த கம்பன் குரல் முக்கியமானது.
கம்பனின் குரல் அக்காலத்து மன்னார்களுக்கு எதிராக,அக்கால ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்தகலகக்குரல்.
நான் எழுதிய கம்பன் ஒரு கலகக் காரன்
எனும் கட்டுரையில் நான் இது பற்றி விளக்கியுளேன்.
சித்தர்களும் கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.
அதிகாரமும் அடக்கு முறையும் உள்ள
இடங்களில் அதனை மீறுதலும் கலகக் குரல்களும்
எழுதல் இயல்பு
.காலம் தோறும் இது நடை பெறுகிறது
முற்றும்

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 5

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -5
________________________________________________________
மௌனகுரு
சோழ அதிகாரம் அதாவது சோழர் காலத்தில் அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டதா? கூறுபடுத்தப்பட்டதா? என்பது மிகவும் முக்கியமானதொரு விவாதமாகும்
. மையப்படுத்தப்பட்டதென்றே அறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்த போதும் அதன் கூறுபடுத்தப்பட்ட தன்மையினையும் கல்வெட்டுக்கள் மூலமாகவும் இலக்கியங்கள் மூலமாகவும் நாங்கள் அறிய முடிகிறது.
ஆய்வாளர் கேசவன் அவர்கள் இந்த இரண்டு கூற்றுக்களுக்குமிடையில் ஒரு மூன்றாவது ஞாயம் ஒன்றினை வைப்பார்.
அவர், சோழர் காலத்தில் இருந்த அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டும் இருந்தது, கூறுபடுத்தப்பட்டும் இருந்தது. இரண்டிற்கும் ஆதாரங்கள் உண்டு என்று கூறி அதனை அவர் பின்வருமாறு கூறுவார்.
கேசவன் அவர்கள் சோழர் காலத்தினை மூன்று காலமாகப் பிரிப்பா.;
1. எழுச்சிக்காலம் - கி.பி- 850 – 985 வரையுள்ள 185 வருட காலம்
2. வளர்ச்சிக் காலம் - கி.பி - 985 – 1160 வரையுள்ள 175 வருட காலம்
3. பின்னடைவுக் காலம் - கி.பி –1160 –1260 வரையுள்ள 100 வருடங்கள்
எழுச்சிக்காலம்
எழுச்சிக் காலத்திலேதான் விஜயாலய சோழன், பராந்தகச் சோழன் போன்றவர்கள் பல்லவர் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர சோழ அரசை நிறுவி, தொண்டை மண்டலம் , பாண்டி மண்டலத்தினை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்த எடுத்த முயற்சிக்காலம் இதுதான.;
வளர்ச்சிக் காலம்
வளர்ச்சிக்காலம் 1ம் ராஜராஜசோழன் , ராஜேந்திரசோழன், குலோத்துங்கன், போன்ற புகழ் பெற்ற மன்னர்கள் தமிழகத்தினையும் தாண்டி நாடுகளைக் கைப்பற்றி சோழப்பேரரசை விஸ்தரித்த உச்சக்கட்டக் காலம் எனலாம்.
. பின்னடைவுக் காலம்
பின்னடைவுக் காலம் 2ம் ராஜராஜசோழன் 2ம் குலத்துங்கசோழன் போன்ற வலிமையற்ற மன்னர்கள் ஆண்டகாலம். இந்தக் காலத்தில் சோழப் பேரசு வீழத் தொடங்கியிருந்தது. பல மண்டலாதிபதிகளும், குறுநில மன்னர்களும் தத்தம் பிரதேசங்களை மீண்டும் தமக்குள் சுதந்திரமாக உருவாக்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.
பேர்ட்றன் ஸ்ரைன் அவர்கள்
இரட்டை அரசிறமைக் கோட்பாடு
என்கின்ற சொல்லினைப் பாவித்தார்.
அதாவது மையத்திலும் அரசிறமை இருந்தது.
சுற்றியிருந்த இடைநிலையிலும் அரசிறமை இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் அந்தப் பகுதியினையும் ஆண்ட மண்டலாதிபதிகளிடமும் அரசிறமை இருந்தது
. இரண்டு வகையான அரசிறமை இருந்ததினை
இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பர்.
பேர்டன் ஸ்ரைன் கூறுவதைப் போல இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பது இந்த ஆரம்ப காலத்திற்கும் பின்னடைவுக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றதென்று கேசவன் கூறுவார். அதாவது ஒரு அரசு ஆரம்பமாகித் தன்னுடைய அரசு அதிகாரத்தினை நிலைநிறுத்தத் தொடங்கிய காலத்தில் மையத்தில் அரசிறமை இருந்திருக்கும். ஏனைய இடங்களில் மற்றவைகளின் அரசிறமை இருந்திருக்கும். இரட்டை அரசிறமை இருப்பதற்கு அந்தக் காலம் உகந்தது.
பின்னடைவுக் காலத்திலும் இதே நிலமை இருந்திருக்கலாம். அதாவது மையத்தில் சோழப்பேரரசு பலம் இழந்த போது இடைநிலையிலும் விளிம்பிலும் இருந்தவர்கள் தங்களது அரச அதிகாரத்தினை அங்கு வைத்திருக்கலாம். அங்கும் இரட்டை அரசிறமை இருந்திருக்கலாம்.
வளர்ச்சிக் காலத்தில் இரட்டை அரசுரிமை இருக்க ஞாயமில்லை.
ஏனென்று சொன்னால் மிகுந்த படைப்பலத்தடன் சோழ மன்னர்கள் ஆண்டமையினால் மையத்திலே இருந்த அரசுரிமை, அரச அதிகாரம் இடைநிலையினையும் ஆளக்கூடிய அளவிற்கு வலிமையாக இருந்தமையினால் மகாலிங்கம் அப்பாத்துரை நொபுறு கரோசிமா கூறிய அந்த உரிமைத் தன்மை கொண்ட மையமாக்கப்பட்ட அரதிகாரம் இக்காலத்திலே தான் இருந்திருக்கலாம் என்று கேசவன் விளக்குவார்.
கேசவன் கூறுவதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம்
ஏனென்றால் இந்த வலிமையான எழுச்சிக் காலத்திலே தான் புதிய நில அறிமுகம் புதிய பாசன வசதிகளுக்கு திட்டமிடுதல் என்பன நடைபெற்றிருக்கின்றன.
இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது
. புதிய நிலங்களை வெட்டி, ஒழுங்குபடுத்தி விவசாயம் பண்ணவும் பாசன வசதிகளை ஏற்படுத்தவும் இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது.
இடைநிலையிலும் விளிம்புக் கூர்களிலும் உள்ள நதிகளின் தீரமில்லாத நீர்ப்பாசன வசதி குறைந்த பகுதிகளிலுள்ள மனித முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியிருந்தது
. அங்குள்ள மக்களை இந்த நீர்ப்பாசனம், வயல் வேலைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.
இந்த வகையில் அந்தந்த நிலங்களிலுள்ள அதிகாரங்களையும் இணைத்துக் கொண்டு தான் இந்த சோழ அரசை ஆரம்பத்தில் வளர்க்க வேண்டியிருந்தது.
ஆனால் வளர்ச்சிக் காலத்திலே இவையெல்லாம் ஊடறுத்து உற்பத்தியில் கூடுதலான பங்கை வலிந்து கோருவதற்கான அதிகாரத்துவம் செயற்பட வேண்டியிருந்தது
. ஆரம்பகாலத்தில் அதாவது வளர்ச்சிக் காலத்தில் அத்திவாரத்தினையிட்டு
விளைநிலங்களை ஏற்படுத்தி,
விளைநிலங்களை உருவாக்கி,
உற்பத்தியினை உருவாக்கிய பின்னர் இந்த உற்பத்தியிலிருந்து பெறுகின்ற உபரியை வரியாகப் பெறுவதற்கு
அல்லது வேறு வகையில் பெறுவதற்கு
ஒரு பலம் வாய்ந்த அதிகாரம் தேவைப்பட்டது.
இந்த நேரத்திலே தான் வளர்ச்சி பெற்ற சோழப் பேரரசு தன்னுடைய படை வலிமையினால் ஒருமைத் தன்மை கொண்ட அரசதிகாரத்தினை நிறுவி உற்பத்தியில் கூடுதலான பங்கினை வலிந்து மக்களிடம் அல்லது மண்டலாதிபதிகளிடம் கோரத் தொடங்கியது.
பின்னடைவுக் காலத்திலே மனித அடிமைகள் உருவாக்கப்பட்டதும் அதற்கான கருத்தியலை வழங்கும் கலை,இலக்கியம்,சமய கலாசார முயற்சிகள் பெருவாரியாகவும் இக்காலகட்டத்திற்தான் நடந்திருக்க வேண்டும்.
உற்பத்தி சாதனங்களின் பெருக்கமின்மை காரணமாகவும்,
தொழிநுட்பத்தின் தேக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும்,
சமூக உபரியை உற்பத்தித் துறை அல்லாதவற்றில் முதலீடு; செய்தல் காரணமாகவும்
மக்களின் கலவரங்கள் காரணமாகவும்
வலங்கை, இடங்கைப் போர் சாதிப்போர் காரணமாகவும்,
இந்த மையத்திலிருந்த அதிகாரம் குறைந்து அந்தந்தப் பிரதேசத்தில் தலைவர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கிய போது சோழப் பேரரசின் அதிகாரம் என்பது சடங்காசாரமாக பேணப்பட்டது.
இறுதியிலே பாண்டியர்கள் 12ம் நூற்றாண்டின் பின் தலையெடுத்த போது மையப்பகுதியின் அரசிறமை இறுதியில் பாண்டியர்களால் தகர்க்கப்ட்டது.
இத்தகைய ஒரு அரச அதிகாரக் கட்டமைப்பைத்தான் தான் பேர்டன் ஸ்றைன் அவர்களும் நொபுறு கரோசிமா அவர்களும் கேசவன் அவர்களும் எங்கள் முன் வைக்கிறார்கள்.
(நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையம் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 4

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - 4
________________________________________________________
மௌனகுரு
சோழர் காலத்தின் சமூக அமைப்பினை விளங்கிக் கொள்ள அதனுடைய அரசுபற்றியும் அவ்வரசின் அதிகாரக் கட்டமைப்பு பற்றியும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
சோழர் காலத்து அரசு பற்றி எழுதிய மு. அப்பாத்துரை, மகாலிங்கம் போன்றோர் அவ்வரசஅதிகாரத்தினை ஒருமைத் தன்மை கொண்ட மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது மையத்திலே சகல அதிகாரங்களையும் கொண்டு சகல நாடுகளையும் தனது நேரடிப் பார்வையின் கீழ் வைத்துக் கொண்ட ஒருவகையான அரச அதிகாரம் என்று இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்
. ஆனால் இது பற்றி ஆராய்ச்சி செய்த பேர்ட்ரன் ஸ்ரெயின் அவர்கள் சோழ அரச அதிகாரத்தை வேறு வகையாக விளக்குவர்.
சோழ அரசு பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அரச அதிகாரக் கட்டமைப்பு என்று பேர்ட்றன் ஸ்ரெயின் அதனைக் கூறுகின்றார்
. பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட இவ்வரச அதிகார கட்டமைப்பில் மூன்று கூறுகள் காணப்பட்டன.
ஒரு கூறு மையம் ஆகும்.
அடுத்த கூறு மையத்தினைச் சுற்றியிருந்த இடைநிலை ஆகும்
. அடுத்த கூறு இடைநிலையைச் சுற்றியிருந்த விளிம்பு ஆகும்
. ஒவ்வொரு கூறுகளையும் மும்மூன்று கூறுகளாக வகுக்கலாம்.
மையத்தினைக் கூட மையம் இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இடைநிலையினைக் கூட மையம், இடைநிலை,விளிம்பு எனப் பிரிக்கலாம்.
விளிம்பினைக் கூட மையம், இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இவ்வண்ணம் ஒவ்வொரு மண்டலமும் மும்மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று அவர் விளக்குவார்
. மையம் என்பது அரச அதிகாரம் அதிகம் நிலவிய இடம்.
இடைநிலை என்பது அரசஅதிகாரம் குறைவாக நிலவிய பகுதி.
விளிம்பு என்பது அரச அதிகாரம் மிகக் குறைவாக நிலவிய பகுதி.
காவேரிக் கரையையும், அதையொட்டியிருந்த விளை நிலங்களையும் உள்ளடக்கி இருந்த பிரம்மதேய காணிகள், வேளாண்மைக்காணிகள், கோயில் காணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பிரதேசத்தையே மையம் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த மையத்திலேதான் அரசனுடைய மாளிகை இருந்தது. அரசனுடைய முக்கிய காரியாலயங்கள் இருந்தன. அரசனுடைய முக்கியமான படைகள் இருந்தன.
இதைச் சுற்றியிருந்த பகுதியினை அவர் இடைநிலை என்று கூறுவார். இந்த இடைநிலையிலே தான் தொண்டை மண்டலம் பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், நடுவண் நாடுகள், போன்ற நாடுகள் இருந்தன இந்த மண்டலங்களை ஆண்டவர்கள் மண்டலாதிபதிகள.; இந்த மண்டலாதிபதிகள் சோழ அரசர்களின் கீழ் பணிபுரிந்தவர்களாவர். இவர்களுக்கு நிலங்களும் படைகளும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் மைய அரச அதிகாரம் குறைவாக இருந்தது.
விளிம்பிலே இருந்த நாடுகள் தான் கங்கபாடி, நுளம்பாடி, போன்ற நாடுகளாகும். இங்கும் கூட அந்தந்த நாட்டு மன்னர்களே ஆண்டனர். அல்லது அரசர்களினால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் அதனை ஆண்டனர். இங்கு மைய அதிகாரம் மிகக் குறைவாக இருந்தது. இவர்கள் அரசுக்கு திறை செலுத்திவிட்டுச் தத்தம் நாட்டைத் தாமே ஆண்டனர்.
காவேரி ஆறு சோழ ஆட்சியில் முக்கியமாக விளங்கியது.
காவேரி ஆற்றை ஒட்டி மிகுந்த நீர்ப்பாசன வசதி பெற்ற நிலங்கள் இருந்தன. இந்த நீர்ப்பாசன முறைமை அதிக பயிர் விளைச்சலைத் தந்தது. இக்காவேரி நிறைந்து பயன் தரும் பகுதிகள் சோழ மண்டலமாகவும்
, காவேரி அதிகபயன் தராது வற்றி ஓடுகின்ற நீர்ப்பாசன வசதியும் அதிக விளைச்சலும் குறைந்த பகுதிகள் இடைநிலை மண்டலமாகவும்
,காவேரி செல்லாத, நீர்ப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமிகளாகயிருந்த, இங்கு ஒப்பீட்டளவில் விளைச்சல் மிக்க குறைந்த பகுதிகள் விளிம்பு மண்டலமாகவும்
சோழர் ஆட்சியில் இருந்தமையினை நாம் காணுகின்றோம்.
இவ்வகையிலே பேர்ட்டன் ஸ்ரைன் நீர்ப்பாசனப் வசதியும் பொருளாதாரப் பலமும் நிறைந்திருந்த பகுதியினை மையப்பகுதி என்றார். அங்குதான் விளைநிலங்கள் அதிகமாக இருந்தன. அரச அதிகாரம் அங்குதான் வலிமையாக இருந்தது.
அதைச்சூழ இருந்த இடைநிலைப் பகுதியிலே விளைநிலங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. அரசன் அங்கு ஆட்சிபுரியவில்லை. மண்டலாதிபதிகள் ஆண்டார்கள். அங்கே அரச அதிகாரம் பலவீனமாக இருந்தது.
விளிம்பு நிலையிலே விளை நிலங்கள் இடைநிலை விளைநிலங்களை விட மேலும் குறைவாக இருந்தன. அங்கேயும் அரச அதிகாரம் இருந்தது. ஆனால் அது சடங்காசாரமாக இருந்தது.
இவ்வண்ணமாக பேர்ட்டன் ஸ்ரைன் மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்கின்ற மகாலிங்கம், அப்பாத்துரை போன்றவர்களின் கூற்றுக்களை மறுத்து கூறுபட்ட அரச அதிகாரம் அங்கிருந்ததென்று தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
பேர்ட்றன் ஸ்ரைன் இவ்வண்ணம் கூறுகின்ற கருத்துக்களை நொபுறு கரோசிமா என்கின்ற ஜப்பானிய ஆய்வாளர் மறுத்துரைக்கின்றார்.
அவர் முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், போன்ற மன்னர்களின் காலத்திலே மையப்பட்ட அதிகாரம் இருந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றார்.
காரணம்,நாடு,வளநாடு என்பவற்றைத் தாண்டி அதிகாரம் செலுத்துகின்ற நிலமை அதாவது அதிகாரிகளின் குறுக்கீடு இருந்திருக்கிறது என்றும்
முதலாம் இராஜராஜன் காலத்தில் நாட்டிற்கும் மண்டலத்திற்கும் இடையில் வளநாடு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அரச அதிகாரம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றது என்றும்
முதலாம் குலோத்துங்கன் ஜெயம் கொண்ட சோழ மண்டலத்தில் வளநாடு என்கின்ற கூற்றினை அமைத்து அரச அதிகாரத்தினை மையப்படுத்தினான் என்றும்
மண்டலங்களுக்கு ஊடாக அவன் நில அளவை செய்திருக்கிறான். என்றும்
முதலாம் ராஜராஜன் காலத்தில் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அதாவது ராஜராஜேஸ்வரத்திற்கு இலங்கை உட்பட விளிம்பு மண்டலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மானியங்கள் வந்திருக்கின்றன. படைகள் வந்திருக்கின்றன. என்றும் கூறி மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இருந்தது என்று' நொபுறு கரோஷிமா இதனை நிறுவ முயன்றுள்ளார்
.(நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 3

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -3
________________________________________________________
மௌனகுரு
__________________________________________________________
பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென
அழைத்தனர்.
__________________________________________________________
ஆசிய உற்பத்தி முறை என்பது என்ன?
ஆசிய உற்பத்தி முறையில் அரசே நேரடி நில உடமையாளராக இருந்தது. நிலத்திற்கு தனியான உடைமை இல்லை. கூட்டு உடைமையாக இருந்தது.
ஒரு கிராமத்திற்கு நிலம் இருக்குமாயின் இந்த கிராமத்திற்கே நிலம் சொந்தமாக இருக்கும்.
நிலம் அரசுக்கு அல்லது கிராம சமுதாயத்திற்கு உடமையாக இருந்தது. கிராம சமூகத்தில் தனி நபருக்கென சுதந்திரமோ அல்லது விருப்பமோ இருந்ததில்லை.
அது கிராமத்தின் சுதந்திரமாக, கிராமத்தின் விருப்பமாகத்தான் இருந்தது.
வேலைப்பிரிவினையிலிருந்து உற்பத்தி தனித்து இருப்பதால் உற்பத்திப் பொருட்கள் பண்டத்திற்குரிய தன்மையினை இங்கு பெறாது
. இதனோடு கூட கீழ்த் திசைக் கொடுங்கோன்மையின் அரச அதிகாரம், நீண்ட நெடுங்காலம் தேக்கடைந்திருந்த உற்பத்தி நெகிழ்வு, என்பதனையும் சேர்த்துக் கொண்டால் ஆசிய உற்பத்தி முறைபற்றித் தெளிவான ஒரு அபிப்பிராயம் எமக்கு கிடைக்கும்.
கீழ்த் திசைக் கொடுங்கோன்மை என்பது கிழக்கு நாடுகளில் நிலமானிய அரசனின் எல்லையற்ற அதிகாரம் (இவ்வதிகாரம் கொடுமையான ஆட்சிக்கும் அரசனை இட்டுச் சென்றது.)
நெடுங்காலம் தேக்கமடைந்த உற்பத்தி எனில் ஒரேவிதமான உற்பத்தி நீண்டகாலம் நிலவியமை. (உற்பத்தி மாறினால் தான் சமுகம் மாறும். ஓரேவிதமான உற்பத்தியாயின் ஒரே விதமான சமுக அமைப்புத்;தான் நிலவும்.)
ஆசிய உற்பத்தி முறையின் பிரதான அம்சம் என்னவெனில் தன்நிறைவுள்ள கிராமங்களாகும்
. ஒவ்வொரு கிராமமும் தனக்குரிய நிலத்துடன் தனக்குரிய சமூக அமைப்புடன், தனக்குரிய கலை கலாசாரங்களுடன் தனியாகவே வாழுகின்ற சூழலை இந்த ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்தியிருந்தது.
இதனை இவ்வாறு விளக்கலாம்.
ஒரு கிராமத்தினை எடுத்துக் கொண்டால் அங்கே ஒரு பக்கத்தில் உற்பத்தி நிகழும் நிலமும், இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்திக்கான கருவிகள் செய்பவர்களும் இருப்பார்கள்.
இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்தியினைக் கவனிக்கின்ற பிரபுக்கள் இருப்பார்கள்.
அந்தப் பிரபுக்களை வழிப்படுத்த, நெறிப்படுத்த, மதங்களை வளர்க்க ஒரு பக்கத்தில் மதகுருமார் இருப்பார்கள்
. அடிமைவேலைகளைச் செய்ய குடிமக்கள் இருப்பார்கள்.
இவையெல்லாம் இணைந்ததாகத்தான் அந்தக் கிராமம் இருக்கும்.
அங்கே அவர்கள் இன்னொரு கிராமத்தில் அல்லது இன்னொருவரில் தங்கியிருக்கின்ற சூழல் அவர்களுக்கு இல்லை.
இதனைத் தான் தன்னிறைவுள்ள கிராமம் என்று அழைப்பர்.
தன்னிறைவுள்ள கிராமம் எவரிடமும் கையேந்தாது.
உணவு, உடை,பொழுதுபோக்கு, மதம், கலை, எல்லாவற்றையுமே அக்கிராமம் தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும்
. தன்னிறைவுள்ள கிராமம் ஏன் பிறர் தயவை எதிர் பார்க்க வேண்டும்?
. பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென அழைத்தனர்.
சோழர் காலச் சமூகஅமைப்பினை ஆராய்ந்த கத்தலின்கவ், சோழர் கால உற்பத்தி ஆசிய உற்பத்தி முறைமைக்குக் கிட்டதட்ட வருவதாகக் குறிப்பிடுவர்.
ஆனால் இதனைக் குணா, நொபுறு கரோசிமா ஆகியோர் மறுப்பார்கள்.
நொபுறு கரோசிமா அவர்கள் தனிப்பட்ட ஆட்களின் கீழ் நிலம் இருந்தது. என்பதனையும், அவர்களுக்கென்று படை இருந்தது என்பதையும், அவர்கள் மன்னர்கட்குத் திறை செலுத்தினார்கள் என்பதனையும், காட்டி இங்கு நிலம் தனிவுடமையாக இருக்கவில்லைஎன்று நிருபித்து இது ஆசிய உற்பத்தி முறைக்குள் வராது என்று வாதிடுகிறார்.
கெயில்ஒம்பெத் அவர்கள் சோழர்கால நிலப்பிரபுத்துவத்தைச் சாதி நிலப்பிரபுத்துவம் என அழைப்பர்.
அதாவது இந்த உற்பத்தி முறையில் (நிலமானிய முறையில்) சாதி பிரதான இடம் வகித்தது.
நிலத்தின் உடமையாளர்களாக, அதிக நிலங்களைக் கொண்டவர்களாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே காணப்பட்டனர்.
முக்கியமாக பிராமணர், வேளாளர்
. ஏனைய சாதிகள் நிலம் அற்றவர்களாக இருந்தனர்
. இவர்கள் பண்ணை அடிமைகளாக வேலை செய்தனர்.
இவர்கள் சாலியர்,கைக்கோளர், பறையர்,கொல்லர்,தச்சர்,குயவர்,நாவிதர்,வண்ணார்,கணிகையர் எனப்பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சாதிப் பிரிவினையையும், அவர்களுடைய நிலையினையும் சமயங்களும் சமய தத்துவங்களும் நியாயப்படுத்தின
. சாதிமுறை இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை எனச் சில சமயவாதிகள் நிறுவினர்.
இச்சமய ஞாயப்பாடு அவர்களுக்கு ஒரு கருத்தியல் தடையை விதித்தது.
தமது அடிமை நிலை ஞாயமானது என மனதளவில் ஏற்றுக் கொள்ள வைத்தது.
இதனால் அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் கிளர்ந்தெழ முடியவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு இராணுவத்தின் வேலையைச் சாதியமைப்புச் செய்தது என்பர்.
இது ஒரு வகையான பண்பாட்டு அடிமை முறையாகும்.
இராணுவத்தினால் அடக்குவதற்குப் பதிலாக கருத்துக்களால் மக்களை அடக்கி வைத்திருந்தமையாகும்.
இவ்வடக்கு முறைக் கருத்தியலைக் கோயில்களும் மடங்களும் ஊட்டின.
பணக்காரர்களினதும் நிலப்பிரபுக்களினதும் ஆதரவு அபரிதமாகக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏன் கிடைத்தது என்பதற்கான விடையும் இங்குதான் உண்டு
.(நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 4

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர் - 4
__________________________________________________________________

புராதன தமிழர்.
தமிழ் நாட்டில் இப்போது வாழும் தமிழர்களை
மானிடவியல், நோக்கில்
ஆஸ்ரோலயிட், அல்லது நீக்ரோயிட்,
மங்கோலயிட் எனப் பிரிக்கி;ன்றனர்.
கறுப்புநிறம், இடைத்தர உயரம், தடித்த உதடு, சுருட்டை மயிர், கொண்டவர்கள் அஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இனத்தவர் எனவும்
, செம்புநிறம், உயரம், நீண்ட மயிர், மென்மையான உதடு கொண்டவர்கள் மங்கோலயிட் எனவும் பிரித்தனர்.
இவர்கள் அனைவரும் கலந்து பெருகி பல்கிய இனக் குழுமமே இன்று காணப்படும் தமிழ்ச் சமூகமாகும்.
இக்கலப்பில் பலவிதமான தோற்றப்பாடுகள் கொண்டவர்கள் தோன்றியிருக்க வேண்டும்.
பலியோதிக் காலத்திலும், மெசோலிதிக் காலத்திலும் ஆஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இன மக்களே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர்.
நாகரீகம் பெற்ற இரும்புப் பாவனை அறிந்த மங்கோலயிட்டுகளான திராவிடரின் வருகையுடன் நிலைத்த, ஒழுங்கான வாழ்க்கையுடைய சமூகம் இயங்க ஆரம்பிக்கின்றது.
பலியோதிக் காலத்திலும், நியோலிதிக் காலத்திலும் சங்க இலக்கியங்களிற் கூறப்படும் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் நிலமக்கள் வாழ்ந்தனர்.
இவர்களே தமிழ் நாட்டின் மிகப் பழைய மூதாதையர் ஆவர்.
இவர்கள் நாடோடி இனத்தவராகவும் இடம் பெயர்ந்து வாழ்பவர்களாகவும் இருந்தனர்.
இவர்களிற் சிலரை நாம் இலங்கை வேடர்களுடனும் ஒப்பிடலாம்.
வேடர் என்போர் வேட்டைத் தொழில் புரிபவர்கள்.
தென்னிந்தியாவின் சில பகுதிகளில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் மீனவர்களும் வாழ்ந்தனர்.
இன்று நீலகிரி மலைப்பகுதிகளில் ஒதுங்கி வாழும்
இருளர்,
தொதுவர்,
படகர்,
போன்றோரும்,
வேடர்,
மீனவர்,
குறவர்,
பறையர்,
போன்றோரும் தமிழ் நாட்டுப் பழங்குடிகளின் வழித்தோன்றல்களே.
பின்னாளில் வந்த மங்கோலயிட் இனக்குழுவினரான திராவிட மொழி பேசும் மக்கள் இவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ளாமையினால் இவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வெளித்தள்ளப்பட்ட சாதியினராகி விட்டனர்.
(பறையர் தமிழ் நாட்டில் தம்மை ஆதித்திராவிடர் என்றே அழைத்தனர்.)

திராவிடர் வருகை.
நியோலிதிக் காலத்தில் திராவிட மொழி பேசும் மக்களின் வருகை தமிழ் நாட்டில் நடந்தேறுகிறது.
இவர்கள, புதுப்பண்பாட்டைக் கொண்டு வருகிறது.
மட்பாண்டம்,
புதிய கருவிகள்,
தாய் வணக்கம்,
முருக வணக்கம்,
இறந்தவர்களைப் மட்பாண்டத்திற்குள் போட்டுப் புதைத்தல், ஆவியுலக நம்பிக்கை,
நெல் பயிரிடுதல்,
நீர்ப்பாசன முறை
போன்ற பல புதிய பண்பாடுகளை இவர்களே தமிழ் நாட்டுக்குக் கொணர்கின்றனர்.
இப்பண்பாட்டை மானிடவியலாளர்கள் பெருங்கற்காலப் பண்பாடு என்று அழைப்பர்.
ஆல்ச்சின் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்துள்ளார்
. ஜெர்மனியரான Jagoe 1876 இல் பாளையம் கோட்டைக்கு 12 மைல் தொலைவிலுள்ள தாமிரபருணி ஆற்றங்கரையிலிலமைந்த ஆதிச்ச நல்லூரில் செய்த அகழ்வாராய்ச்சி புதிய தகவல்களைத் தந்துள்ளது.
இப்பகுதியில்
புதை தாழிகளையும்,
கறுப்பு, சிவப்பு மட் பாண்டங்களையும்
பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய தடயங்களையும் இவர் கண்டு பிடித்தார்.
இவரைத் தொடர்ந்து Alexandra Rea,Louse Lapicque போன்றோர் 1899,1904 ஆண்டில் நடத்திய ஆராய்ச்சிகள் மேலும் பல தகவல்களைத் தந்தன.
இவர்கள் இங்கே மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடந்த சில பொருட்களைக் கண்டெடுத்தனர்.
அவற்றுள் ஒன்று தங்கத்திலான தலை வட்டமாகும்.
இதே போன்ற சாமான்கள் மைசினியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எட்கார் தேஸ்டன் கூற்றின்படி இத்தகைய தலைவட்டம் இறந்தவர்களுக்கு இட்டுப் புதைக்கப்படுவதாகும்
. ஆதிச்ச நல்லூரில் காணப்படும் புதைகுழிகள் மெகதிலிக் காலத்தை அப்படியே ஒட்டியதில்லை. பெரிய கற்கள் குழிகளைச் சுற்றிக் காணப்படாமை அதிலொன்று.
ஆதிச்ச நல்லூரில் கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. செம்பிலான மோதிரம,; வளையல்கள் என்பன கிடைக்கின்றன. தங்கத் தலைவட்டம், ஊதுகுழல் என்பன கிடைக்கின்றன. செம்பிலான வேல், சேவல், என்பன கிடைக்கின்றன. இதன் காரணமாக ஆதிச்ச நல்லூரில் முருக வணக்கம் இருந்தமை தெரிய வருகிறது.
(பழனியில் காவடி எடுத்துச் செல்கையில் ஊதப்படும் குழல் இதன் தொடர்ச்சியேயாகும்.)
புராதன மனிதர்களின் கலை முயற்சிகளை வெளிப்படுத்தும் குகை ஓவியங்களையும் புதை பொருளாய்வாளர் கண்டெடுத்துள்ளனர்.
சென்னை, பெங்களுர், சாலையில் அமைந்துள்ள பாகூர் கிராமத்தில் மலைக்குகையில் சில ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பல மனிதர்கள் இருவர் குதிரையில் சவாரி செய்வது போன்ற ஓவியம் அது.
அவை இயற்பண்பு சார்ந்ததாயில்லை. ஒரு மனிதன் கையில் வாளை உயர்த்திய படி சவாரி செய்வது போன்றும் ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகாமையில் உள்ள கீழ்க்கலை எனும் சிறு கிராமத்தில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல குழு மனிதர்களை அவை பிரதிபலிக்கின்றன.
சக்கரம், பல குறியீடுகள்
என்பன ஓவியத்தினருகிற் காணப்படுகின்றன
. இவை எழுத்துக்கள் அல்ல.
அவை குலக்குழுச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவ்வக் குலங்களைச் சேர்ந்த ஓவியர்கள் இவற்றை வரைந்திருக்கலாம்
ஆல்ச்சின் எனும் புதைபொருள் ஆராய்சசியாளர் இவ் ஓவியங்களை நியோலிதிக் காலத்துக்குரியன என்கிறார்.
இதை விட மதுரையிலுள்ள, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் புராதன ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
உருவங்களின் புறப்பகுதிகளே (Out line) இவற்றில் வரையப்பட்டுள்ளன.
இவை ஆயுதம் தாங்கிய மனிதர்களைக் காட்டுகின்றன.
குதிரை,
கடிவாளம்,
அதற்கான தோல் ஆடைகள்,
ஆயுதம், என்பன மெகதலிக் காலத்தை இவை சேர்ந்தன, என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மெகதலிக் காலத்திற்குரியவர்களும் பெருங்கற் பண்பாடெனும் புதிய பண்பாட்டைக் கொண்டவர்களும் மங்கோலாயிட் இனத்தினரும் திராவிட மொழி பேசுபவருமான நாகரிகம் வாய்ந்த திராவிடர் ஆற்றங்கரைகளிலும் வளமான நிலப்பகுதிகளிலும் குடியேறினர்.
இக்குடியேற்றத்தினை புராதன தமிழ் நாட்டு மக்கள் எதிர்த்துப் போரிட்டிருக்க வேண்டும்.
ஆனால் வலுவும், நாகரிகமும், ஒழுங்கும் மிக்க திராவிட மக்கள் அவர்களை வென்றனர்.
இவ்வெல்லுகை மூன்று விதமான தமிழ் மக்களைத் தமிழ் நாட்டில் உருவாக்கிற்று.

1. புராதன தமிழ் மக்கள்
2. திராவிடருடன் கலந்த உருவாகிய கலப்பின மக்கள்
3. திராவிட மக்கள்
இத்தகைய பிரிவே திராவிட மக்களிடையே தோன்றிய சாதிப்பாகுபாட்டிற்கும் சமூகவேறுபாட்டிற்கும் அடித்தளமாயிற்று.
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 3

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 3
__________________________________________________________________
பழங்கற்காலச் சின்னங்கள்.
புராதன இந்திய வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் றொபட்புறூஸ் பூட் என்ற மண்ணியியலாளர் 1863 இல் சென்னைக்கருகில் பலியோதிக்காலக் (பழங்கற்காலக்) கைக்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார்
அவர் அதனைக் 2லட்சம் வருடங்களுக்கு முந்தியது. என்று கணிப்பிட்டார்.
பஞ்சாப்பின் சோன் பள்ளத்தாக்கிலிருந்த கற்கால மக்களை விட முன்னேறிய மக்களாக சென்னை மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று இவர் கருத்துரைத்தார்.
சோன் பள்ளத்தாக்கு மக்கள் தமது எதிரிகளைத் துரத்த மாத்திரமே கல்லை உபயோகித்திருந்தனர். என்றும் சென்னைப் பழம் மக்களோ ஒரு காரியத்திற்காகக் கல்லை மாற்றம் செய்துள்ளனர் ஆதலால் அவர்களைவிட இவர்கள் முன்னேறியவர்கள் என்பதும் இவர் கருத்து.
சென்னைக்கு வடக்கே கோட்டையர் (Kottaiyar) ஆற்றுப்படுக்கையில் பழங்கற்காலச் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
தென் சென்னையிலுள்ள அதிராம் பக்கத்தில் (அச்சிறுபாக்கம்) கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன்படி பழங்கற்கால மனிதர் நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவராக அன்றி அலைந்து திரிபவர்களாகவும் காய்கனிகள், மிருக இறைச்சி உண்டு வாழ்வராகவும் இருந்தனர்.
இக்காலமனிதர் எதனையும் உற்பத்தி செய்யவில்லை. சூழ என்ன உண்டோ அதனையே உணவாக உண்டு உயிர் வாழ்ந்தனர்.

இடைக்கற்காலச் சின்னங்கள்.
மெசோலிதிக்கால (இடைக்கற்காலம்) மனிதர்கள் வாழ்ந்த தடத்தினை இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளிலும்
மதுரைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் கண்டுபிடித்தனர்.
இங்கும் கற்காலத்திற்குரிய கைக்கோடரிகள் சில கண்டெடுக்கப்பட்டன.
இங்கு Agate,Jaspan போன்ற பல்வேறு கற்களினாலும் செய்யப்பட்ட பல கருவிகள் கிடைத்தனர்
இங்கு கற்களை ஈட்டி நுனி, கம்புநுனிகளுக்குப் பயன்படுத்திய சான்றுகள் கிடைத்துள்ளன.
இத்தடயங்கள் சில திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சோயபுரத்திலும் கிடைத்துள்ளன.
சென்னர் என்னும் ஆய்வாளர் இதனை கி.மு 4000 ஆண்டுக்குரியதெனக் கணிப்பிடுவர். (இத்தகைய கற்கருவிகள் தமிழ் நாட்டிற் பாவனையில் இருந்த காலத்தில் எகிப்தில் பிரமிட்டுக்களைக்கட்டும் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.)

புதியகற்காலச் சின்னங்கள்.
நியோதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) வேகமான வளர்ச்சி மனிதர் கையாண்ட கருவிகளில் ஏற்பட்டுள்ளது.
இது மனிதரின் வாழ்க்கை முறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இக்காலத்தில் மனிதர் மந்தைகளைப் பழக்க ஆரம்பித்திருந்தனர்.
தானியங்களை, பூண்டுகளை நாட்டி அதிலிருந்து பயன்பெறும் முறையை அறிய ஆரம்பித்திருந்தனர்.
விவசாயத்தின் ஆரம்ப நிலையில் இம்மக்கள் இருந்தனர்.
நெருப்பைக் கண்டுபிடித்து உபயோகிக்கத் தொடங்கியதும் இக்காலத்திலே தான் எனலாம்.
இந்நாகரிகம் உருவான பகுதியினையும் கருவிகளையும் புறூஸ் பூட்டே கண்டுபிடித்தார்.
மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட
கைக்கோடரி
, சுத்தியல்,
ஆகிய கருவிகளை சேலம் பகுதியிலுள்ள சிவோரி (Shevory) மலைப்பகுதியில் இவர் கண்டெடுத்தார்.
வட ஆர்க்காட்டுப் பகுதியில் திருந்திய நிலையிலிருந்த மண்வெட்டிகளை னுசு.S.R. ராவ் கண்டெடுத்தார்.
மட்பாண்டமும் இங்கு கண்டெடுக்கப்பட்டது.
மட்பாண்டம் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது. சேமிப்பின் அடையாளம் அது.
விவசாயத்தாலும் கால்நடை வளர்ப்பாலும் ஏற்பட்ட உபரி சேகரிக்கப்படும் பாத்திரம் அது
.
புதியகற்கால மட்பாண்டத் தயாரிப்பு.
நியோதிலிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) இரண்டு விதமான தொழிற்சாலைகளும்( Factories) தொழிலுற்பத்தியும் (Industry) இருந்தன என ஆய்வாளர் கூறினர்.
(தொழிற்சாலை, தொழிலுற்பத்தி என்பதனை இன்றைய அர்த்தத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது) அவையாவன.
1. பானை தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்
2. கருவிகள் தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்.
சிவப்பு, கறுப்பு, பிறவுண், நிறங்களில் வித்தியாசமான மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த மட்பாண்டங்களில் சிறிதளவு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
இம்மட்பாண்டங்கள் கைகளினாலேயே செய்யப்பட்டிருந்தன.
(சக்கரம் போன்ற கருவி பாவிக்கப்படவில்லை.)
புதியகற்காலத் (நியோலிதிக்காலத்) தமிழர் 18 விதமான முறையில் 67 வகையான மட்பாண்டங்களைத் தயாரித்திருந்தனர் எனத் தொல்பொருளியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பலவகையான மட்பாண்டக் கருவிகளுக்கும் அப்பால் பல வகையான கைக்கருவிகளையும் நியோலிதிக் காலத் தமிழர் உற்பத்தி செய்தனர். எனத் தொல்பொருளியலாளர் கண்டு பிடித்துள்ளனர்.
கோடரிகள்,
சுற்றியல்கள்
கூர்மையான ஆயுதங்கள்,
என்பன இவற்றுட் சில
இவை யாவும் நியோலிதிக் கால மக்கள் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகின்றன.
பலியோலிதிக் காலத்தில் (பழங்கற்காலத்தில்) உணவு தேடி வாழ்ந்த தமிழர் மெசோலிதிக் காலத்தில் (இடைக்காலத்தில்) உணவைச் சேகரிக்கத் தொடங்கி நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவு தேடுதல், வேட்டையாடும் காலம் (Food Hunting)
உணவைச் சேகரித்தல் உணவு சேகரிக்கும் காலம் (Food gathering stage)
இது சற்று வளர்ச்சி பெற்ற காலமாகும்
. உணவை உற்பத்தி செய்தல் (Food productionj) இன்னும் வளர்சசி பெற்ற காலமாகும்.
வேட்டையாடும் காலத்திலிருந்து
உணவு உற்பத்தி செய்யும் காலத்திற்கு
புராதன தமிழர் உடனே வந்து விடவில்லை.
இடைக் காலத்தில் அவர்கள் செய்த
மந்தை மேய்ப்பு,
வீட்டுப் பிராணிகளை (ஆடு, மாடு, கோழி, பன்றி என்பனவற்றை) உணவுக்காகவும் வேலை செய்வதற்காகவும் வளர்த்தல்
இவற்றைப் பாதுகாக்க நாயை வளர்த்தல்
என்பனவெல்லாம்
வேட்டையாடும் காலத்திலிருந்து உணவு உற்பத்தி வரை மனித குலம் தாம் வளர எடுத்த முயற்சிகளாகும்.
உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னரேயே புராதன தமிழர் முன்னேற்றத்தின் முதற்படியில் கால்வைக்கின்றனர்.
ஆரம்பத்தில் புராதன தமிழர் சமவெளியில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேட்டுப் பாங்கான பகுதிகளிலேயே மேற் கொண்டனர். எனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர்.
இந்த நியோலிதிக் காலத்திலேதான் தமிழ்நாட்டுக்கு இரும்பு அறிமுகமாகின்றது.
நியோலிதிக் காலத்தின் தனித்துவமும் இதுவே.
தமிழ் நாட்டின் சிந்துவெளி நாகரிகம் போல செம்புக்காலம் இருக்கவில்லை
. புதிய கற்காலத்தையடுத்து நேராக இரும்புக் காலத்துக்குள் தமிழ் நாடு சென்று விடுகிறது
.
இந்நியோலிதிக் காலம் மிக நீண்ட காலம் நிலவியது என்பர்
தொல்வியலாளர்கள் கி.மு3000லிருந்து கி.மு 1000 இன் நடுப்பகுதி வரை (ஏறத்தாழ 2500 வருடங்கள்) இக்காலம் நிலவியது என்பர்.

இந்நியோலிதிக் காலத்தைத் தொல்லியலாளர்கள் மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
1. கி.மு 2800 – 200
2. கி.மு 2000 – 1800
3. கி.மு 1800 - 500
நியோலிதிக்கின் மூன்றாவது காலகட்டத்திலே தான் உலோகத் தொழினுட்பத்தில் முக்கியமான வளர்ச்சிகள் ஏற்பட்டன.
இக்காலகட்டத்திலே தான் இலக்கியங்கள் எழுந்தன
. எழுத்து வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.
பலியோதிக்,
மெசோலிதிக்
, நியோலிதிக்,
இம்மூன்று காலகட்டங்களிலும்
தமிழ் நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் யாவர்?
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 2

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 2
_____________________________________________________________
தமிழர்களின் புராதன வரலாறும் இப்பின்னணியில் எழுதப்படும் போதுதான் ஏற்புடமை ஏற்படும்.அல்லாவிடில் நாம் ஐதிகக் கதைகளில் வாழுகின்ற ஓர் இனமாகவே கணிக்கப்படுவோம்.
_______________________________________________________________
மானிடவியலாளரின் மனித சமூக வரலாறு பற்றிய கருத்து.
19ம் நூற்றாண்டின் பரிணாமவாத மானிடவியலாளர்கள்
மார்கன்,
எட்வர்ட்,பி டைலர்,
ஹென்றி,
ஹேர்பட் ஸ்பென்சர்,
போன்றோர்.
இவருள் முக்கியமானவர் மார்கன.
1877இல் இவர் தமது நூலில் பரிணாமவாத மானிடவியற் கருத்தை முன் வைத்தார்
. இவர் மனித சமூக வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்தார்.
அவையாவன.
அ. காட்டுமிராண்டி நிலை.
ஆ. அநாகரிக நிலை
இ. நாகரிக நிலை
காட்டுமிராண்டி நிலை மூன்று வகைப்படும்.
அவையாவன
முதற்கட்டம்,
இரண்டாம் கட்டம்,
மூன்றாம் கட்டம்.
முதற்கட்;டத்தில் காட்டுப்பொருள் சேகரிப்பும்,
இரண்டாம் கட்டத்தில் மீன்பிடிப்பும், தீ கண்டு பிடிப்பும்,
மூன்றாம் கட்டத்தில் வேட்டையாடலும் அதற்கான கருவி தயாரித்தலும் நடைபெற்றுள்ளன.
காட்டுமிராண்டிக் காலத்தில் குடும்ப அமைப்பு, தோற்றம் பெறவில்லை.
மந்தைக் கூட்டங்கள் போலவே மக்கள் வாழ்ந்தனர்.
தாயை மாத்திரமே பிள்ளைகள் அறிவர்.
தகப்பனை அறியாதிருந்தனர்.
இதனைத் தாய் வழிச் சமூக அமைப்பு என்பர்.

அநாகரிக நிலைக் காலமும் மூன்று வகைப்படும்.
முதற்கட்டத்தில் மட்பாண்டம் கண்டுபிடித்தனர்.
இரண்டாம் கட்டத்தில் விலங்குகளைப் பழக்கவும் சிறியளவு விவசாயமும் செய்யவும் ஆரம்பித்தனர்.
மூன்றாம் கட்டத்தில் இரும்புப் பாவனை வருவதுடன் மொழியின் வரிவடிவமும் வந்து விடுகிறது.
இக்காலகட்டத்தில் வெளிக்குழு மணமுறை, உருவாகிவிடுகிறது.
தனிச்சொத்து தோன்றிவிடுகிறது.
தந்தை வழிச் சமூகம் உருவாகக் குடும்பமும் தோன்றி விடுகிறது.
மூன்றாவது கட்ட நாகரிக நிலையில் அரசு ஒரு நிறுவனமாகி சகல அதிகாரமும் கொண்டதாகி விடுவதுடன் அதிகாரம் பெற்ற கூட்டங்களே அரசின் அங்கங்களாகி விடுவதுடன் விவசாயமும் வியாபாரமும் பெருக ஆரம்பித்து விடுகின்றன.
. வரலாறும் தோன்றி விடுகிறது.
மாக்ஸும், ஏங்கல்ஸும் மார்கனைப் பின்பற்றிக் தொழினுட்பப் பரிமாணங்களைக் கட்டமைத்தனர்.
கீழ்வரும் முறையில் மனித சமூகம் தொழினுட்பத்தில் முன்னேறியது என்பர் அவர்கள்.
1. உணவுச் சேகரிப்பு
2. மீன்பிடிப்பு
3. வேட்டையாடுதல்
4. மட்பாண்டம் வனைதல்
5. விலங்குகளைப் பழக்கல்
6. விவசாயம்
7. உலோக வேலை
8. இரும்புப் பாவிப்பு.
இப்பரிமாணவாத மானிடவியல் பற்றிச் சில விமர்சனங்கள் இருப்பினும் பொதுவாக இப்பிரிவுகள் ஏற்கப்படுகின்றன
. இப்பின்னணி அகழ்வாய்வினை விளங்கிக் கொள்ள உதவும்
சரித்திரவியலாளர்களின் பகுப்பு.
சரித்திரவியலாளர் தொல்பொருள்களின் துணை கொண்டு சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அறிய முயற்சி செய்துள்ளனர்.
அம்மனிதர்கள் விட்டுச் சென்ற கருவிகள் இதற்குத் துணைபுரிகின்றன.
கல்லிலான ஆயுதங்களைக் கையாண்டு மனிதர் இயற்கையை வென்று வளர்ந்த அந்தக் காலத்தைக் கற்காலம் என அழைத்த மானிடவியலாளர் அதனை
பலியோதிக் காலம் (பழைய கற்காலம்)
மெசோலிதிக் காலம் (இடைக்கற்காலம்)
நியோலிதிக்காலம் (புதிய கற்காலம்)
என மூன்றாக வகுத்தனர்.
பழங்கற்காலத்தில் மனிதர் கையிற் கிடைத்த கற்களை மிருகங்களைத், தாக்க, தம் காரியங்களை ஆற்றப் பயன்படுத்தினர்.
ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கிடைத்த கூரிய கற்கள் இவ்வாறு அவர்கட்கு உதவின
. இடைக்கற்காலத்தில் அக்கற்களைக் கூராக்கி அல்லது துளையிட்டு உபயோகிக்கக் கற்றுக் கொண்டனர்.
புதிய கற்காலத்தில் அவற்றை மேலும் கூராக்கி கம்பின் நுனியிலும் அம்பின் நுனியிலும் பொருத்தி நீண்ட தூரம் ஏவக்கற்றுக் கொண்டனர்.
பின்னரேயே உலோகங்களை, முக்கியமாக இரும்பைக் கண்டு பிடித்தனர்.
அதன் பின்னர்தான் மனித நாகரிகம் விரைவாக முன்னேறத் தொடங்கியது.
உலக வரலாற்றில் நாகரிகமடைந்த இனங்களின் வரலாறுகள் யாவும் இப்பின்னணியில் விளக்கப்பட்டுள்ளன
.
தமிழர்களின் புராதன வரலாறும் இப்பின்னணியில் எழுதப்படும் போதுதான் ஏற்புடமை ஏற்படும்
. அல்லாவிடில் நாம் ஐதிகக் கதைகளில் வாழுகின்ற ஓர் இனமாகவே கணிக்கப்படுவோம்.
மேற்குறிப்பிட்ட பின்னணியில் தமிழ் நாட்டில் நடந்தேறிய அகழ்வாராய்வுகளில் முக்கியமான சிலவற்றை முதலில் நோக்குவோம்.
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 6

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர் -6
_______________________________________________________
மௌனகுரு
சங்க இலக்கியங்கள்.
_________________________
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்கள் எட்டுத் தொகை நூல்களாகும்.
திருமுருகாற்றுப் படை, பொருனராற்றுப்படை, சிறபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை கூத்தராற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, ஆகிய நூல்கள் பத்துப் பாட்டு நூல்களாகும்.
தொகுத்த விதம்.
_____________________
இவை யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே தொகுக்கப்பட்ட நூல்களாகும்.
தொகுப்பெனில் ஏற்கனவே உள்ள பாடல்களைத் தொகுத்தலாகும்.
தொகுக்கும் போது தொகுத்தோர்கள்
1. அடிவரையறை
2. பொருள் மரபு
என்பன கொண்டு சங்க இலக்கியங்களைத் தொகுத்தனர்.
தொகுக்கும் போது குறுகிய அடிகள் கொண்டவற்றை எட்டுத் தொகைக்குள்ளும்
நீண்ட அடிகள் கொண்டவற்றைப் பத்துப் பாடல்களுகளுக்குள்ளும் அடக்கினர்.
அகப்பாடல்களின் தொகை முறைமைக்கு அவற்றின் அடியளவு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
ஐங்குறு நூறு 3-6 அடிகள்
குறுந்தொகை 4-8 அடிகள்
நற்றிணை 9-12 அடிகள்
அகநானூறு 13-31 அடிகள்
புறப்பாடல்களுக்கு அடிவரையறை கொண்ட ஒரு தொகை முறை பேணப்படவில்லை.
எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு அகநானூறு கலித்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், என்பன புறத்திணை சார்ந்தவை.
இவற்றுள் பதிற்றுப் பத்து சேரமன்னர்கள் பற்றியது. புறநானூறு எல்லா மன்னர்களையும் பற்றியது
.
பத்துப் பாட்டினுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை, நெடுநல்வாடை, என்பன அகத்திணை சார்ந்தவை ஆறு ஆற்றுப்படை நூல்களும் புறத்திணை சார்ந்தவை, (அரசர்கள் தலைவர்கள் பற்றியவை.)
மதுரைக்காஞ்சி நிலையாமை கூறுவது.
மதுரைக் காஞ்சியை நிலையாமை கூறும் காஞ்சித் திணையுள்ளும் நெடுநல்வாடையை, சுட்டிஒருவர் பெயர் கூறுவதால் புறத்திணையுள்ளும் அடக்கும் மரபு பிற்கால உரையாசிரியர்களால் ஏற்படுத்தப்பட்டது.
இத்தொகுப்பு முயற்சி மிக முக்கியமானதாகும்.
இலக்கியத்தினைத் தொகுக்கும் அல்லது கோவைப்படுத்தும் முயற்சி கடந்த கால, சமகால இலக்கியம் பற்றிய பிரக்ஞையின் வெளிப்பாடே.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த கால இலக்கியத் தேட்டத்தைத் திண்ணமாக நிலைபேறுடையதாகக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சி சங்க இலக்கியத் தொகுப்பு என்பர்.
எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்னும் பெயர்கள் பிற்காலத்தில் வழக்கில் வந்தவையே.
பத்துப்பாட்டு என்னும் சொற்றொடர் 11ம், 12ம், நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படும் பன்னிரு பாட்டியலிலேதான் முதலில் வருகிறது.
சங்க இலக்கியப் பாடற் தொகைகளைக் குறிக்கும் வகையில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் தொடர்கள் பயன்படுத்தப்படுவதை முதன்முதலில் தொல்காப்பியம் பொருளதிகாரம் 362,392,ஆம் சூத்திரங்களுக்காக 13ம் நூற்றாண்டில் பேராசிரியர் எழுதிய உரையிலும்
நன்னூல் 387ம் சூத்திரத்திற்கு 14ம் நூற்றாண்டில் மயிலை நாதர் உரையிலுமே காண்கிறோம் என்பார். கமில் சுவெலபில்.
தமிழிலே எழுத்து உருவான காலத்தில் பண்டைய வாய்மொழிப் பாடல்களை எழுத்தில் எழுதினர்.
அதன் பின்னர் அவை யாவும் தொகுக்கப்பட்டன
. புதிதாக எழுத்தில் எழுதிய பாடல்களும் தொகுக்கப்பட்டன.
தமிழ் நாட்டின் எழுத்து ஆரம்பத்திற்கும் சங்க இலக்கியத் தொகுப்பிற்குமிடையே நிறைந்த உறவுண்டு.
சங்க இலக்கியத்தைச் சமூக நோக்கில் விளங்க முனைபவரின் பெருங்கவனத்திற்குரிய முக்கியமான தகவல் இத்தொகை நூல்களைத் தொகுத்த புலவர்களது பெயரும் தொகுப்பித்த மன்னர்களது பெயரும் கிடைப்பது ஆகும்.

தொகுத்தோன் தொகுப்பித்தோன் விபரம் கீழே தரப்படுகிறது.
தொகுத்தோர், தொகுப்பித்தோர் தன்மை.
அகநானூறு – தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
தொகுத்தோன் - மதுரைஉப்பூரி கிழான் மகன் உருத்திரசன்மன்;.
குறுந்தொகை - தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை
தொகுத்தோன் - புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
கலித்தொகை - தொகுப்பித்தோன் பெயர் தெரியாது
தொகுத்தோன் நல்லந்துவனார்.
நற்றிணை - தொகுப்பித்தோன் பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் பெயர் தெரியாது.
பதிற்றுப் பத்து இவற்றினைத் தொகுத்தோர் தொகுப்பி;தோர் தெரியாது. பதிற் றுப்பத்து முற்று முழுதாகச் சேரமன்னர் பற்றியதாதலால்
புறநானூறு சேர மன்னர் அனுசரணையுடன் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
ஏனையவற்றைத் தொகுப்பதிலும் மன்னர் ஆதரவு இருந்திருக்கும்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை உத்தேசமாக கி.பி 210க்கும் 230க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்திருக்கலாம் என்பர்.
பன்னாடு தந்த மாறன் வழுதி உத்தேசம் கி.பி 215க்கு உரியவன் என் கொள்ளப்படுகிறான்.
இவ்வகையில் இத்தொகுப்பு கி.பி 2ம் நூற்றாண்டில் இடம் பெற்றது என்பது தெளிவாகின்றது.
தொகுப்பு நூல்களுக்கு அரசர்கள் ஆதரவு தருவதைக் இங்கு நாம் காணுகின்றோம்
தொகுத்தோர் கூட ஊர்க்கிழார், கிழான் மகன் என்று அழைக்கப்படுகின்றனர்.
கிழான் என்பது உரிமையுடையவர்கள.;
தொகுத்தோர் நிலக்கிழார்களாக இருந்திருக்கலாம்.
மருத நில நாகரிகம் வளர்ச்சியுற்ற போது நிலக்கிழார்கள் தோற்றம் பெறகிறார்கள.
; நிலக்கிழார்களிடமிருந்து அரசர்கள் உருவாகிறார்கள.
; தமிழ் நாட்டின் அரசுருவாக்கம் பற்றிய சில ஆய்வுகள் வந்துள்ளன.
இங்கு ஓர் அரசியல் முக்கியத்துவம் முதன்மைப்படுத்தப்படுகின்றது.
எழுத்தறிவு பரவாத - அரசு முளைவிடும் காலகட்டங்களில் அரசர்கட்கு பிரசாரம் புரிய புலவர்கள் தேவைப்பட்டனர்.
புலவர்கள் அரசர்களின் வமிசாவழியை நிலை நிறுத்தவும்,
மன்னனின் ஆட்சியை சட்ட அதிகார வன்மையுடையதாக்கவும்;,
அவன் நடத்திய போர்களை ஞாயப்படுத்தவும் வேண்டியிருந்தது.
இவ்வரசர்கள் தம் நாட்டு நிலத்தையும், நிலத்துக்குரித்தாளரான நிலக்கிழாரையும் தம் படை வலியால் பாதுகாத்தனர்.
இதனால் பண்டைய வீர இலக்கியப் பாடல்களுக்கு ஒரு நிகழ்கால அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
அரசின் நிலை பேற்றுக்குப் பண்டைய அரசர்கள் பண்டைய நிலக்கிழார்கள் அவர்கள் வாழ்க்கைகள்; அவசியமானவை.
எனவே தான் அரசு வளர்ச்சி காலத்தில் சங்க இலக்கியத் தொகுப்புகளை அரசர்கள் ஊக்குவித்திருக்கின்றனர்.
இப்படித் தொகுக்கப்படும் போது தொகுத்தோன் தொகுப்பித்தோனின்; சொந்த விருப்பு வெறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
நிகழ்கால வாழ்வுக்கு, அரசுக்கு, அச்சுறுத்தல் தரும் - நிகழ்கால விழுமியங்கட்கு மாறானதாகக் கருதப்படும் - பல பாடல்கள் விடுபட்டிருக்க கூடிய வாய்ப்புண்டு.
தமது அரசு நிலை பேற்றுக்கும், தம் கொள்கைகட்கும் உகந்தனவற்றையே தொகுப்பித்தோர் தொகுத்திருப்பார்கள்
. ஏனைய எத்தனையோ பாடல்கள் இருந்திருக்கும். ஆனால் அவை தொகுக்கப்படவில்லை.
புறத்;திணைக்குரியவற்றுள் மூவேந்தருக்குரிய பாடல்களே முதனிலைப் படத் தொகுக்கப் பட்டிருப்பதனைப் புறநானூற்றின் அமைப்பிலிருந்தும் பதிற்றுப்பத்திலிருந்தும் கண்டுகொள்ளலாம் என்பர் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
இத்தொகுப்புகட்கும் வளர்ந்து வந்த எழுத்து வழக்குக்கும் தொடர்பிருத்தல் கூடும்.
எந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இத் தொகுப்பினைச் செய்தனர் எனபதும் ஒரு முக்கிய வினாவாகும்.

இவ்வண்ணம் அரசின் வளர்ச்சிக் காலத்தில் –
நிலக்கிழார் வலிமை பெற்றவர்களாக உருவான காலத்தில் வணிகம், பெருகிய காலத்தில் –
ஆரியச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் –
எழுத்து தமிழ் நாட்டிற்கு அறிமுகமான காலத்தில்
வளர்ந்து வந்த அதிகாரம் மிகுந்த அரசர்களும் நிலக்கிழார்களும் தம் அதிகாரத்தை நிலைநிறுத்த இத்தகைய தொகுப்புக்கள் அவசியம் எனக் கருதியிருக்க வேண்டும்.

இத்தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்டே பின் வந்த இலக்கணக்காரரும் அதற்கு உரை வகுத்த உரைகாரரும் சங்க இலக்கியம் பற்றிய கருத்துருவைப் பின்னாளில் உருவாக்கினார்கள்.
சங்ககால இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் ஆதாரமாகக் கொண்டு சங்க இலக்கியங்கள் பற்றி எழுந்த கருத்துருவம்
சங்க இலக்கியங்களின் தோற்றமும் தொகுப்பும் கி.பி 100க்கும் 250க்கும் இடையில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர்.
சங்க இலக்கியங்களை வைத்துக் கொண்டு ஒரு இலக்கியக் கோட்பாட்டைஅறிமுகம் செய்த தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்டு 250 வருடங்களின் பின் கி.பி 500 இல் தோன்றுகின்றது.
தொல்காப்பியர் தம்காலச் சிந்தனை முறைகளை வைத்தே சங்க இலக்கியங்களை வகுத்து இலக்கணமும் செய்தார்.
தொல்காப்பியத்திற்குப் பின்பு கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் சங்க இலகக்pயம் தோன்றி 1000 வருடங்களுக்குப் பின்னர் தொல்காப்பியரை ஆதாரமாக வைத்து சங்க இலக்கியம் பற்றிய கருத்துருவம்; அமைத்தார்.
அதன்பின் வந்த நச்சினார்க்கினியர் சங்க இலக்கியம் தோன்றி 1600 வருடங்களின் பின் கி.பி 16ம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு எழுதிய உரை மூலம் இளம்பூரணரின் கருத்துருவத்தை மேலும் இறுக்கினார்.
19ம் நூற்றாண்டில் தமிழறிஞர்கள் சங்க இலக்கியம் பற்றிய ஒரு கருத்துருவத்தை உண்டாக்கி விடுகிறார்கள.;
இன்றுவரை அக்கருத்தே மேலாண்மை மிக்க கருத்தாக நிலவி வருகிறது
. அக்கருத்துக் கட்டமைவு சுருக்கமாகக் கீழே தரப்படுகிறது
.
சங்ககாலம், சங்க இலக்கியம் பற்றிய கட்டமைப்பு.
______________________________________________________
1. தமிழ் நாடு ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளையுடையது. அவையாவன மலைப்பிரதேசம், காட்டுப்பிரதேசம், நீர்வளமும் நிலவளமுள்ள வயற்பிரதேசம,; கடற்கரைப்பிரதேசம், வறண்ட நிலப்பிரதேசம்.

2.இந்நிலங்களில் காணப்படும் தாவரங்களால் இந்நிலங்கள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,; பாலை, எனப் பெயர் பெற்றன.
3. இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்வு அக வாழ்வு புறவாழ்வு எனப் பிரிக்கப்பட்டிருந்தது. அகவாழ்வு பிராயமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதல் ஒழுக்கமாகும் புறவாழ்வு இது தவிர்ந்த ஏனையவை. முக்கியமாக போரையே புறமென்றனர்.

4.ஐந்து நிலத்திற்கும், ஐந்து அகவாழ்வும், ஐந்து புறவாழ்வும் உண்டு ஐந்து நிலத்திலும் நடைபெறும் ஒழுக்கமே தூய காதல் ஒழுக்கம், (அன்பின் ஐந்திணை),
.
5. அகத்தினுள் வரும் கைக்கிளை பெருந்திணை என்பன தூய அகம் ஒழுக்கமன்று. அவை எல்லா நிலத்திற்கும் வரும்
6. ஐந்து நிலத்திற்கும் ஐந்து புறஒழுக்கம், உண்டு.
7.காஞ்சி, நிலயாமை, என்பன தூய புற ஒழுக்கமன்று. அவை எல்லா நிலத்திற்கும் வரும்
. கீழ்வரும் அட்டவணை இதனைக் காட்டுகிறது
.
அகப்புறத் திணைக்கட்டமைப்புப் பற்றிய அட்டவணை.
________________________________________________________

அகத்திணை
_______________
_________________________________________________________________
பூ பிரதேசம் பழக்கவழக்கம்
___________________________________________________________________
குறிஞ்சி மலைநாடு புணர்தல்
முல்லை காடு(மேய்ச்சலுக்குரியநிலம்) இருத்தல்
மருதம் வயல் (பண்படுத்தப்பட்ட நிலம் ) ஊடல்
நெய்தல் கடற்கரை பிரிதல் (இரங்கல்)
புhலை வரண்ட நிலம் பிரிதல்
கைக்கிளை - எல்லா நிலமும்
பெருந்திணை - ஒருதலைக் காதல்
பொருந்தாக்காதல்
அல்லது அளவு மீறிய காதல்


புறத்திணை
________________
________________________________________________________________
பூ பிரதேசம் பழக்கவழக்கம்
_______________________________________________________________
குறிஞ்சி மலைநாடு ஆநிரை கவர்தல்
முல்லை காடு (மேய்ச்சல்நிலம்) ஆநிரை காத்தல்
மருதம் வயல்(பண்படுத்தப்பட்ட நிலம்) கோட்டை பிடித்தல் (அரண் அமைத்துப் பேணல்)
நெய்தல் கடற்கரை களம் குறித்துப் போர் செய்தல்
பாலை வரண்ட நிலம் களவு எடுத்தல்

பாடாண் எல்லா நிலங்களும் ஆணைப் பாடுதல்
காஞ்சி எல்லா நிலங்களும் நிலையாமையைப் பாடுதல் .

தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை அடியொற்றியும் உரையாசிரியர்களின் கூற்றை அடியொற்றியும்
சங்ககாலத் தமிழர்
வாழ்க்கை,
தொழில் பண்பாடு
பற்றிய பின்வரும் கருத்துரையாடல்கள் தோன்றின
. மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 7

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- -7
_________________________________________________________________
சங்ககாலம் பற்றிய கருத்து.
1. ஐந்து நிலங்களாக பிரித்து ஜந்து வகை ஒழுக்கங்களை ஓம்பித் தமிழர் வாழ்ந்த காலமிது.
2. தமிழர்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு சமத்துவமாக வாழ்ந்த காலம் இது.
3. சான்றோர்கள் வாழ்ந்த காலம் இது.
4. வீரமும் காதலும் வாழ்க்கையை நிறைத்திருந்த காலம் அது.
5. சோழ, சேர பாண்டியத் தமிழ் மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்டதுடன் தமிழ் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது.
. தமிழர்கள் பிற நாட்டார் தலையீடின்றி சமத்துவமாக சந்தோஷமாக, காதல் புரிந்து, வீரச் செயல்களைப் புரிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த புராதன காலம் என்றும் ஒரு வகையில் அது ஒரு பொற் காலம் என்றும் கருத்துருவம் ஒன்று இவற்றை வைத்துக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.
சங்க இலக்கியங்களை உ.வே.சாமிநாதையரும் ஏனையவர்களும் கண்டெடுத்து பதிப்பித்த பின்னர் அவை அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசியற் சூழலில் இத்தகைய கட்டமைப்பு உருவானது.
சங்க இலக்கியத்தினை ஆதாரமாக் கொண்டு தொல்காப்பியர் வகுத்த திணைக் கோட்பாடு சங்க காலத்தை விளங்க எமக்குக் கிடைக்கும் முக்கியமானதொரு திறவு கோலாகும்.
இத்திணைக் கோட்பாட்டுக்குத் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர், நச்சினார்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தம் காலச் சிந்தனைப் போக்கிற்கும் தம் உலக அறிவு அனுபவங்களுக்கும் ஏற்ப விளக்கம் அளிக்க முனைந்துள்ளனர்
. அவர்களின் விளக்கங்களை அடியொற்றி எழுந்த ஒரு வகை விளக்கமே நாம் முன்னர் குறிப்பிட்ட ஒரு வகைக் கருத்தியற் கட்டமைப்பாகும்.
இக் கட்டமைப்புக்கு மாறான கருத்துக்கள் 20ம் நூற்றாண்டில் எழத் தொடங்கின
. வளர்ச்சி பெற்று வந்த
அகழ்வாராய்ச்சியியல்,
சரித்திரவியல்
மானிடவியல்,
அரசியல்,
பொருளியல்
, நாணயவியல்,
சமூகவியல்,
போன்ற பல்துறைகளின் பின்னணியில் தமிழ் ஆய்வியலும் நடைபெறலாயிற்று.
இதனால் இத்துறைகளில் பயிற்சியும், ஓரளவு புலமையும் கொண்ட தமிழ் ஆராய்வாளர் திணைக் கோட்பாடுகளுக்கு வேறு விளக்கம் தந்தனர்.
சங்க காலம் பற்றிய கருத்துக் கட்டமைப்பு
பற்றி எழுந்த விமர்சனங்களும், விமர்சகர்களும்.
__________________________________________________
பண்டிதர் இராக வையங்கார்
P.T ஸ்ரீனிவாசஐயங்கார்,
ராமச்சந்திரதீஷிதர்,
கமில்ஸ்லபில் ,
தனிநாயக அடிகள்
, சிங்காரவேலு
, N.சுப்பிரமணியம்
கா.சிவத்தம்பி
,
கைலாசபதி
முதலான தமிழ் அறிஞர்கள் சங்ககாலம் பற்றிய பழைய கட்டமைப்புக்கு மாறான கருத்துக்களை வைத்துள்ளனர்.
பின்னாளில் தமிழ் வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆய்வு செய்த பேர்ட்டன் ஸ்ரெயின் போன்றோரும் இன்று ஆய்வு செய்யும் செண்பகலக்சுமி, சுப்பராயலு, நொபுறு கறோசிமா போன்றோரும் ஏனைய இளம் ஆய்வாளரும் வித்தியாசமான கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
பண்டிதர் இராக வையங்கார்
“ பொருளதிகார ஆராய்ச்சி” எனும் நூலில் சங்ககால மக்களின் நடத்தைக்கும் பிரதேசத்திற்குமிடையே இருந்த தொடர்பை வெளிப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்.
P.T. ஸ்ரீனிவாசஐயங்கர்,
History of Tamils up to 600 A.Dயு எனும் நூலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்கின்ற திணைகளை நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி என விளக்கம் தந்துள்ளார்.
குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழர் முல்லையில் மந்தை மேய்ப்பவராக மாறி நிலைத்த வாழ்க்கை பெற்று நெய்தலில் கடல்கடந்து வியாபாரம் செய்பவராக வளர்ந்தனர் என்பது இவர் விளக்கம்.
ராமச்சந்திர தீஷிதர்
தமது Studies in Tamil Literature and History என்னும் நூலில் புரதான கால மனித வாழ்க்கையின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்ற ஐந்து வித்தியாசமான படிமுறைகள் இவை என்று விளக்கம் தந்துள்ளார்.
கமில் சுவலபில்
Tamil poetry 2000 years ago எனும் தமது நூலில் திராவிடருக்கு முந்திய தமிழரின் மூதாதையர் மலைப்பகுதியிலிருந்து செழிப்பு வாய்ந்த நிலப்பகுதிகட்கும், கடற்கரைப்பகுதிக்கும,; மலைப் பகுதிகளிலிருந்தும் காட்டுப் பகுதிகளிலிருந்தும் சரித்திரபூர்வமாகச் செய்த இடப் பெயர்வு என்று இதனைக் கூறியுள்ளார்.
நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த புராதன வேட்டைக்காரத் தமிழர்கள் இடைநிலையிலிருந்தும் மந்தை மேய்ப்பைத் தாண்டி உழப்பட்ட நிலத்தையும் மீன்பிடிப் பகுதியையும் நோக்கி பரிணாமம் பெற்றனர் என்று கூறுகிறார்.
தனிநாயக அடிகள்
தமது Landscap and poetry எனும் நூலில் ஐந்திணை பற்றிக் குறிப்பிடுகையில் மனித நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அது எனக் குறிப்பிடுவார். வேட்டை நிலையிலிருந்து (குறிஞ்சி) வேளாண்மை செய்யும் நிலைக்கு (மருதம்) தமிழர் வளர்ச்சி பெற்றமையை இது சுட்டுகிறது. என்பதே அவரது அபிப்பிராயம்.
சிங்கார வேலு
தமது Social life of Tamils எனம் நூலில் இதனை பரிணாம வளர்ச்சி என ஒப்புக் கொண்டு அதனை மானிடவியல் ரீதியாக விளக்கியுள்ளார். தனது Sangam polity நூலில் பெரிய இடத்திற்குச் சொன்ன பரிணாம வளர்ச்சி சின்ன இடத்திற்குப் பொருந்தாது என வாதித்துள்ளார்
.
கைலாசபதி
தனது Heroic poetry எனும் நூலிலும் தமிழர் வாழ்வும் வழிபாடும் எனும் நூலில் எழுதிய தனிக்கட்டுரைகள் சிலவற்றிலும் இப்பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே சங்க இலக்கியங்களையும் சங்ககாலத்தையும் நோக்கியுள்ளார்.
வேட்டையாடிய, மந்தை மேய்த்த குறிஞ்சி முல்லை, காலத்திலிருந்து நிலைத்த வாழ்வு பெற்று நிலம் திருத்தி வேளாண்மை செய்த மருதநில காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகவே அவர் குறிஞ்சி, முல்லை, மருத, நில நாகரீக வளர்ச்சியைக் காணுகிறார். அவரது பேய்மகளிர், கொடி நிலை கந்தழி, முதலிய கட்டுரைகள் சில, புராதன தமிழர்கள் பற்றிக் கூறுபனவே.
புதைபொருள் ஆய்வாளர்களான ஆல்ச்சின், சுப்பராவ் போன்றோர் சமூக வளர்ச்சிப் போக்கில் சமாந்திரமற்ற வளர்ச்சி ஏற்படும் என்பதனை ஏற்றுக் கொண்டு தமிழ் நாட்டை இதற்குரிய பகுதியாக இனம் கண்டு புவியியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழ்நாடு சமாந்திரமற்ற வளர்ச்சியுடைய பகுதி என்று தமது எழுத்துக்களில் நிறுவியுள்ளனர்.
சிவத்தம்பி
தனது இயக்கமும் இலக்கியமும் எனும் கட்டுரையில் இக்கோட்பாட்டை ஆதரித்ததிலிருந்து இக்கோட்பாட்டின் பின்னணியிலேயே சங்க காலத்தை ஆராய்ந்துள்ளார்.
அவரது Drama in ancient Society எனும் நூலில் புராதன தமிழ் நாடக வளர்ச்சியை (சங்க கால நாடக வளர்ச்சியை) இக் கோட்பாட்டின் பின்னணியிலிருந்து விளக்கியுள்ளார். தனது Studies in ancient Tamil society Economy,Society and State formation என்னும் நூலில் இக்கோட்பாட்டின் பின்னணியிலிருந்து சங்ககால மக்களின் பொருளாதார வாழ்வு சமூக அமைப்பு அரசுருவாக்கம் என்பனவற்றை ஆராய்ந்ததுடன் சங்ககாலத்தில் சமனற்ற சமூக பொருளாதார வளர்ச்சி இருந்தது. என்கிற சிந்தனையை அழுத்தமாக முன் வைத்துள்ளார்.
நா.வானமாலை,
ஆ.சிவசுப்பிரமணியம்
,
சுப்பராயலு,
கேசவன்,
அ.மார்க்ஸ்,
ராஜ்கௌதமன்,
செண்பகலக்சுமி
, போன்ற தமிழ்நாட்டு ஆய்வாளர்களும்
பேட்டன் ஸ்ரைன்,
நொபுறு, கறோசிமா
,
கதலின் கௌ
போன்ற தமிழ் ஆய்வு செய்த பிற நாட்டவரும் இப்பரிணாமக் கருத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் ஆய்வு செய்த ஆய்வாளர்களாவார்கள். .
இவர்களைப் பின்பற்றி இன்று பல இளம் ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளைக் தொடருகின்றனர்.

தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்த விதம்.
______________________________________________
பொருளதிகாரத்தில் அகத்திணையியலில் தொல்காப்பியர் பாடலுள் வரும் விடயங்களை மூன்றாகப் பிரிக்கின்றார். அவையாவன
முதற்பொருள்,
கருப்பொருள்,
உரிப்பொருள்,
தொல்காப்பியம் அகத்திணையியல் சூத்திரத்தில்
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே.
பாடலுள் பயின்றவை நாடும் காலை
என்பார் தொல்காப்பியர்.
இவற்றுள் உரிப்பொருளே முக்கியமானது.
உரிப்பொருள் என்பது அந்நிலத்தில் நிகழும் அகஒழுக்கமாகும்.
அதாவது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே (தலைவனுக்கும் தலைவிக்குமிடையே) வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் புணர்வு, பிரிவு, காத்திருப்பு, இரங்கல், ஊடல், ஆகிய மன உணர்வுகளாகும்.
இவ்வுரிப் பொருளைச் சிறப்பிக்கவே முதற்பொருளும், கருப்பொருளும் உதவும்.
முதற்பொருள் என்பது அந்த ஒழுக்கம் நிகழும் நிலமும், பொழுதும் ஆகும்
. இவ்வண்ணம் நிலம் பற்றிக் கூறிய தொல்காப்பியர் அந்நிலத்தை காடுறை உலகம் (முல்லை)
மைவரை உலகம் (குறிஞ்சி)
தீம்புனல் உலகம்(மருதம்)
பெருமணல் உலகம் (நெய்தல்)
என நான்கு நிலமாகப் பிரிக்கின்றார்.
பாலை நிலம்
___________________
.
பாலை நிலம் பற்றித் தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை
. பாலை பற்றிக் கூறப்படுவது சிலப்பதிகாரத்திலே தான்.
சிலப்பதிகாரத்தில் காடு காண்காதையில் 60-66வரையுள்ள வரிகளில் பாலை நிலம் பற்றிக் கண்ணகிக்கும், கோவலனுக்கும் கவுந்தியடிகள் கூறுவதாக இளங்கோவடிகள் இவ்வாறு கூறுகிறார்.
கோத் தொழிலாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியலிழந்த வியனிலம்போல
வேனலங்கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து
நல்லியல்பிழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாவை என்பதோர் படிவம் கொள்ளும்.

இவ்வரிகளுக்கு ந.மு வேங்கடசாமி நாட்டார் பின்வருமாறு உரை கூறுவார்.
“அரசியல் தொழிலினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் செங்கோல் செலுத்தாமல் விடுதலாலேயே அரசின் இயல்பை இழந்த அகன்ற நிலத்தைப் போல வேனிலாகிய அமைச்சனொடு வெல்லிய கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன் நலம் வேறுபடுதலால் தமது இயற்கை கெட்டு முல்லை குறிஞ்சி எனும் இரு திணையும் முறைமை திரிந்து தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோர் நடுங்கும் வண்ணம் துன்பத்தினை உறுவித்து பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும்.”
இதன்படி வேனிற் காலத்தில் குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் பாலை நிலமாக மாறுகின்றன என்பது தெரிய வருகிறது.
வேனிற் காலம் வந்ததும் (சித்திரை வைகாசி) சூரியனுடைய வெப்பம் அதிகம் ஏற்படும்.
வேனிற் காலமும் சூரிய வெப்பமும் இணைய மழை ஏற்படாது நிலம் வரளும். இந்நிலையில் செழிப்பாயிருந்த குறிஞ்சி, நிலமும் பசுமை நிரம்பிய காட்டு நிலமான முல்லை நிலமும் தமது செழிப்பு, குளிர்ச்சி என்ற இயல்பினின்றும் மாறி வரட்சி மிக்க பாலை நிலமாகி விடும்.
இப்பாலை மற்றவர்க்கு துன்பம் தரும் நிலமாகும.;
இக்காலத்திலே தான் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொரு குடியிருப்புக்கு மக்கள் செல்வர்.
உடன் போக்கு (பெண்ணைக் ஆண் கூட்டிக் கொண்டு ஓடுதல்) பொருள், வயிற்பிரிவு என்பன இக்காலத்திலேதான் நிகழும். இதனாலேயே பாலைக்கு பிரிவு என்பது வந்தது.
மீண்டும் வேனிற் காலம் போய் மழைகாலம் தோன்றியதும் பாலை நிலம் மாற்றமடைந்து தன்னியல்பான குறிஞ்சி, முல்லை, நிலமாகி விடும்.
இதன்படி பாலை என்ற ஒரு நிலமில்லை.
அது காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் ஒரு நிலம் என்பது தெளிவாகிறது.
பாலை என்ற மரம் இங்கு முக்கியமானது. (மட்டக்களப்பிலே பாலை மரம் உண்டு. சித்திரை மாதத்தில் பாலைப்பழம் இங்கு அதிகம்) பாலை மரம் பக்க வேர்களைக் கொண்டதல்ல. நீண்ட ஆணி வேரைக் கொண்டது. அதன் ஆணிவேர் மைல் கணக்கில் கீழே சென்று நிலத்தின் ஆழத்திலுள்ள அடி நீருடன் உறவாடும் தன்மை கொண்டது. எந்த வரட்சியும் பாலை மரத்தைப் பாதிக்காது. தாவரவியலுடன் இம் மரங்களை இணைத்துப் பார்க்கையில் தான் இத் தெளிவினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நிலத்தை நான்காக வகுத்தார் தொல்காப்பியர். அந்நிலத்தில் வழங்கும் கருப்பொருள்களை
தெய்வம்,
உணா,
மா,
மரம்,
புள்,
பறை,
செய்தி,
யாழ்
என்று பிரித்தார்.
இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கியர் அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலத்திற்கும் உதாரணம் தந்தார்.
அத்தோடு கருப்பொருள்களுள்; பூ, நீர், ஊர், என்பனவற்றையும் சேர்த்துக் கொண்டார்.
கீழ்வரும் அட்டவணை நமக்கு இதனைத் தெளிவாக உணர்த்தும்.
நச்சினார்க்கினியர் தரும் விபரம். –
அட்டவணை.
நிலம்
ஊணா மா (விலங்கு)
மரம்
புள்
பறை
செய்தி(தொழில்)
யாழ்
பூ
நீர்
ஊர்
குறிஞ்சி
_____________
ஐவன நெல்லு, தினை. மூங்கிலரிசி,
புலி யானை கரடி பன்றி
அகில் ஆரம் தேக்கு திமிசு வேங்கை
கிளி மயில்
முருகியம் தொண்டகப் பறை
தேன் அழித்தல் தினை முதலிய விளைவித்தல் கிளி காத்தல்
குறிஞ்சி யாழ்
காந்தள் வேங்கை சுனைக் குவளை
அருவி சுனை கான்யாறு

முல்லை
____________
வரகு சாமை முதிரை
உழை, புல்வயல், முயல்
கொன்றை குருந்து
கானக் கோழி சிவல்
ஏறுகோட் பறை
நிரை மேய்த்தல் வரகு முதலியன கட்டலும் கடா விடுதலும்
முல்லை யாழ் முல்லை பிடதள
கான்,யாறு
மருதம்
____________
செந்நெல் வெண்ணெல்
.
எருமை, நீர்நாய்
. மருதம் வஞ்சி காஞ்சி
தாரா நீர்க் கோழி
மணவுழவும் நெல்லரி கிணையும்
நடதல் களைகட்டல் அரிதல் கடா விடுதல்
. மருத யாழ்
தாமரை குழுநீர்
ஆற்றுமனைக் கிணறு, பொய்கை

நெய்தல்
______________
மீன், உப்பு
உமண் பசடு (முதலை, சுறா, மீனாதலின், மா என்பது மரபன்று.)
புனை ஞாழல் கண்டல்
அன்னம் அன்றில்
மீன் கோட்டறை
மீன் பிடித்தல் உப்பு விளைவித்தல் அவை விற்றல்
. நெய்தல் யாழ்
மணக்கிணறு உருவாக்குதல் குழி வெட்டுதல்
.
நிலம் ஊணா மா (விலங்கு) மரம் புள் பறை செய்தி
(தொழில்) யாழ் பூ நீர் ஊர்
பாலை
__________
ஆற வைத்த சூறை கொண்ட எல்லா உணவும்.
வலியிழந்த யானை ஆமை புலி செந்நாய்.
வற்றின இருப்பை ஊழிஞை.
கழுகு பருந்து புறா.
சூறை கோட்பறை நிரை
. ஆறவைக்கம் சூறை
பாலை யாழ். கோடல்
மரா குரா பாதிரி
ஆற்று நீர்க் கூவல், சுனை.

இந்நிலங்களுக்குரிய ஊர் பற்றிக் கூறும் நச்சினார்க்கினியர் பின்வருமாறு கூறுவார்.
_____________________________
குறிஞ்சி – ஊர்ப்பெயர் - சிறுகுடி, குறிச்சி
முல்லை – ஊர்ப்பெயர் - பாடி, சேரி
மருதம் - ஊர்ப்பெயர் - ஊர்
நெய்தல் - ஊர்ப்பெயர் - பட்டினம், பாக்கம்
பாலை – ஊர்ப்பெயர் - பறந்தலை
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள செய்தி (தொழில்) உணா, என்பனவும் பின்னாற் குறிப்பிடப்படும் ஊர்பற்றிய செய்திகளும் என்பனவும் மிகுந்த அவதானத்திற்குரியன.
நிலமும், தொழிலும், உணவும், வாழிடமும்.
___________________________________________________
குறிஞ்சி,நிலத்தில் வாழ்ந்தவர்கள்
தேன், அழித்து கிழங்கு அகன்று தினை விளைவிக்கிறார்கள். அவர்களது உணவு ஐவன, நெல்லு, தினை, மூங்கிலரிசி, என்று மிகப் புராதன உணவாக இருக்கிறது. இவர்கள் உணவு தேடும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் இடம் சிறுகுடி, குறிச்சி, என்று அழைக்கப்படுகிறது. (குறிச்சி எனும் பெயர் இன்று தாழ் நிலையிலுள்ளோர் இருக்கும் இடங்கட்குப் பாவிக்கப்படுவது மனம் கொள்ளத்தக்கது.)
முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள்
நிரை மேய்த்து வரகு முதலிய சிறு தானியங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வேட்டையாடி கிழங்கு அகன்று, உணவு தேடி வாழ்ந்த(food hunting) குறிஞ்சி மக்கள் அல்ல.
உணவு உற்பத்தி செய்யும் (Food producing)நிலையில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்கள்.
அவர்களின் உணவு, வரகு சாமை, முதிரை என்று உற்பத்தி செய்து உண்ணும் உணவு வகைகளாக குறிஞ்சி நிலத்தைவிடச் சற்று முன்னேறிய உணவு வகைகளாக உள்ளன.
அவர்கள் வாழும் இடம் பாடி,சேரி என்றழைக்கப்படுகிறது. இது குறிச்சியை விடச் சற்று வளர்ச்சி பெற்ற இடமாகக் காணப்படுகிறது. (ஆயர்பாடி, பறையர்சேரி, என்ற வழக்கு இன்னுமுண்டு,)
மருத நிலத்தில்
வாழ்ந்தவர்கள் நடுதல், களை கட்டல், அரிதல் முதலிய தொழில்களைச் செய்கிறார்கள் இங்கு வேளாண்மைச் செயல் தொடங்கியிருக்கிறது. நடுதலும், களைகட்டலும், வளர்ந்த பின்னர் அதனை அரிதலும், நடைபெறுகிறது இங்கு திட்டமிட்ட உணவு, உற்பத்தி நடைபெறுகிறது. இவர்கள் சாப்பிடுகிற உணவு, செந்நெல்லும், வெண்நெல்லும்;, ஆகும்.
கிழங்கு, அகன்று சாப்பிட்ட குறிஞ்சி மக்களை விட,
வரகு சாமை, சாப்பிட்ட முல்லை மக்களை விட
, இவர்கள் வயிறார வாயாரச் சாப்பிடும், வளர்ச்சியடைந்த மக்களாயுள்ளனர்.
அவர்கள் வாழ்ந்த இடம் ஊர் என்று அழைக்கப்படுகிறது
. நிலைபதியாக மக்கள் வாழும் இடமே ஊர் ஆகும்
. வேளாண்மை செய்ய ஆரம்பித்ததும் மந்தை மேய்த்துக் கொண்டு நாடோடியாகத் திரிந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து விடுதல் இயல்பு. மருதநில வளர்ச்சியுடன் தமிழர் வாழ்வும் நிலைத்து விடுகிறது. தமிழர் நிலைத்து வாழ்ந்தமைக்கு அடையாளம் இது.
நெய்தல் நிலத்தில்
வாழ்ந்த மக்கள் மீன் பிடிக்கிறார்கள். உப்பு விளைவிக்கிறார்கள். அவர்கள் உணவு உப்பும் மீனும். தமிழர் உணவில் மீனும் உப்பும் சேர்ந்து விடுகிறது. அவர்கள் கடலை வளமாக்கி உப்பும், மீனும் சேர்க்கும் மக்கள். கடலை வழியாக்கி கடல் வாணிபம் செய்த மக்களும் இங்கு வாழ்ந்தனர்.
ஏனைய நாட்டவர்களை கடற்கரையோரத்தில் இம்மக்கள் சந்தித்ததில் கலாசார பரிவர்த்தனை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு.
வாணிபம் இதனால் வளர்ச்சியுற்றது. வாணிக வளர்ச்சியும் செல்வப் பெருக்கும் நகர்ப்புறங்களைத் தோற்றுவிக்கும்.
நகரமே அரசரது தலை நகராகும்.
அதுவே அதிகாரத்தின் மையமும் ஆகும்.
இவர்கள் வாழும் இடம் பட்டினம், பாக்கம், என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்நானிலம் பற்றி மாத்திரமே தொல்காப்பியர் கூறினார். தொல்காப்பியர் இவை ஒவ்வொன்றையும் ஒரு உலகமெனக் கண்டார்.

மாயோன் மேய காடுறை உலகம்
சேயொன் மேய மைவரை உலகம்.
வேந்தன் மேய தீம்புனல் உலகம்
வருணன் மேய பெருமணல் உலகம்
.
என ஒவ்வொரு நிலத்தொகுதியும் ஒவ்வொரு உலகமாகத்தான் அவருக்குத் தெரிகிறது.
அவற்றிற்கு அவர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிடுகிறார்.
அவர் தொல்காப்பியத்தை இயற்றியது மருதநில நாகரிகம் வளர்ச்சி பெற்று விட்ட காலப்பகுதியில் என்பதனை நாம் மனம் கொள்ள வேண்டும்.
அவர் காலத்தில் அவர் பார்வையில் இந்
நானிலங்களும் புவியியல் அடிப்படையில் தனித்தனி உலகங்களாகத்தான் இருந்தன.
பாலை நிலம் எவ்வாறு இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டது என்று முன்னரேயே கூறப்பட்டுள்ளது
. பாலை, நிலத்தில் வாழ்ந்த மக்கள் களவெடுத்தலையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.
நாட்டின் சனம் குறைந்த வரண்ட நிலை ஏற்பட்ட பின்னர் அப்பாலையினால் செல்லும் மக்களிடமிருந்து தான் இவர்கள் உணவைப் பறித்தெடுத்தனர். களவெடுத்தலில் கிடைத்த எல்லா உணவுகளும் இவர்களின் உணவுகளாயின. இவர்கள் வாழ்ந்த இடம் பறந்தலை என்றழைக்கப்பட்டது.
தொல்காப்பியர் கி.பி 5ம் நூற்றாண்டில் தன் கால நிலையிலிருந்து சொன்ன சூத்திரத்திற்கு
கி.பி 12ல் வாழ்ந்த நச்சினார்கினியார் மேற்கண்டவாறு ஒரு வளர்ந்து வந்த வரலாறுகளுடன் இதனை ஒப்பிடுவதன் மூலமும் நாமும் சில முடிவுகளுக விளக்கம் தந்தார்.
இவ்விளக்கத்தை ஆராய்ந்து பார்த்தல் மூலமும்உலக இனங்களின் நாகரீக வளர்ச்சியுடன் தமிழர் நாகரீக வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கலாம் .
இந்த விளக்கத்திலே வேட்டையாடுதலிலும்
கிழங்கு அகழ்தலிலும் இருந்து
மந்தை மேய்த்தலுக்குக்கூடாக
நிலம் பண்படுத்தி விவசாயம் செய்து செந்நெல்லும,; வெண்நெல்லும் சாப்பிட்டு
பட்டினம் கண்டு வாணிபம் செய்து வளர்ச்சி பெற்றதுவரை
ஒரு பரிணாம வளர்ச்சியைக் காணுகிறோம்.
இப்பரிணாம வளர்ச்சிக்கூடாகவே
தமிழர் சமூகம் வளர்ந்திருக்க வேண்டும்.
சங்க கால இலக்கியங்களிலே இதற்கான தடையங்கள் பலவற்றை நாம் காணுகிறோம்
.
மேற்குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியிலே
மருதம் பின்னாளில் வருகிறது.
மருத நிலத்திலே தான் விவசாயச் சமூகமாகத் தமிழகம் உருப்பெற்றது
.(இக் கட்டுரையின் இறுதிப் பகுதி நாளை இடம் பெறும்) .
மௌனகுரு

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 8

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- -8
_________________________________________________________________
மௌனகுரு
பண்டைய மக்களின் பொருளாதார நிலையும், கருத்துக்களும்
-------------------------------------------------------------------------------------------------.
குறிஞ்சி (மலைப்பிரதேசம்), முல்லை (காட்டுப் பிரதேசம்) ஆகிய நிலங்களில் இனக் குழுச் சமூகமே வாழ்ந்தது.
இந்நில மக்கள், புராதன இனக் குழுச் சமூக மக்கள். குறிஞ்சி நிலமக்கள் வேட்டையாடினர்;;;
கிழந்து அகழ்ந்தனர்,
தேன் எடுத்தனர்.
ஒரு வகையில் உணவு தேடும் நிலையில் வாழ்ந்தனர்
. முல்லை நில மக்கள் ஆடு, மாடு மேய்த்தனர்
. சிறிய முறையில் விவசாயம் செய்தனர். (தானியம் விளைவித்தனர்.)
ஒரு வகையில் உணவு உற்பத்தி செய்யும் நிலையில் வாழ்ந்தனர்.

உணவு தேடும் நிலையிலிருந்து உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறுதல் ஒரு வளர்ச்சி நிலையாகும்.
குறிஞ்சி நிலத்து வேடுவர்களும், முல்லை நிலத்து ஆயர்களும் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ் மக்களே
.
குறிஞ்சி நிலமான மலைப்பகுதியில் வளர்ச்சி குறைவு. மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தின் வளர்ச்சி குறிஞ்சியை விடச் சற்று அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்கள் ஆடு, மாடுகளை வைத்திருந்தனர். குறிஞ்சி நில மக்களை விட வசதி பெற்றிருந்தனர்.
வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்களிடம் இருந்து, குறிஞ்சி நில மக்கள் விவசாயம் செய்யும் முறையைக் கற்றிருக்க வாய்ப்புண்டு.
இவ்வகையில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த புராதன இனக்குழுச் சமூகங்களிடையே விவசாய முறையும் இருந்தது.
ஆனால் அது வளர்ச்சி பெறாத விவசாய முறை.
இப் புராதன இனக்குழுவுக்கு பின்னாளில் வளர்ச்சி பெறப்போகின்ற நீர்ப்பாசன முறை தெரியாது.
அவர்கள் நீர்ப்பாசனத்தை நம்பியிராது மழையை மாத்திரமே நம்பியிருந்தனர்.
அவர்களின் விவசாயக் கருவிகள் மிகப் பழைமையானவையாகவிருந்தன.. (இரும்பு வராத காலம் அது)
அவர்களின் சாகுபடி முறை உற்பத்தித் திறன் குறைந்ததாக இருந்தது.
இவர்கள் இடம் விட்டு இடம் பெயரும் சாகுபடி முறையினையே மேற் கொண்டிருந்தனர்.
ஒரு இடத்தில் காட்டை வெட்டித் துப்பரவு செய்து, தினை அல்லது, வரகு விதைத்துப் பயன் எடுத்த பின்னர் மண்வளம் குறையும் எனக் கண்டு அடுத்த இடத்திற்குக் குடி பெயர்ந்து, அங்கு துப்பரவு செய்து சாகுபடி செய்தனர். இதனால் பண்டைய இனக்குழு விவசாயத்தில் ஒரு நாடோடித் தன்மைக் காணப்பட்டது.
இப்புராதன இனக்குழு மக்கள் குறிஞ்சி நிலத்திலே தினை விளைவிக்கிறார்கள்
. அது மழையை நம்பி விளையும்., அல்லது விளைவிக்கும் தினை
. இத்தினைப் புனம் காவல் காக்க ஊர்ப்பகுதிகளிலிருந்து பெண்கள் சென்றமையையும், அவர்களுடன் வேறு பெண்களும் (செவிலி, தோழி) சென்றமையையும், தினை விளைவித்தமையையும், குருவி ஓட்டியமையையும், அத் தினைப்புனத்தில் நடைபெற்ற காதல் நாடகங்களையும், தலைவன், தலைவி சந்திப்பையும் சங்க இலக்கியக் குறிஞ்சிப் பாடல்களில் காணுகிறோம்.
அந் நிலத்திற்குரிய ஒழுக்கமாகப் புணர்ச்சி ஒழுக்கம் கூறப்படுகிறது.
முல்லை நிலத்தில் வரகு முதலிய தானியங்களை விளைவிக்கிறார்கள். இங்கு களை கட்டலும் நடைபெற்றதாக நச்சினார்க்கினியார் கூறுகிறார்.
இங்கும் நீர்ப்பாசனம் இருக்கவில்லை. ஒரு வகையில் விவசாயத்தை நன்கு இன்னும் அறியாத புராதன மக்களின் புராதன விவசாய முறை
இது. ஆனால் குறிஞ்சி நில விவசாயத்தைவிடக் கூடியளவு பயன் தந்த விவசாயமாக இது இருந்திருக்க வேண்டும்.
இவ்விவசாய வசதிபெற்றோரிடம் இருந்து, வசதி குறைந்த குறிஞ்சி நில மக்கள் அவர்களின் ஆநிரைகளைக் கவர்ந்தனர். வேட்டையாடி மிருகம் கொல்வதை விட ஆநிரைகளைக் கவர்வது வேட்டுவருக்கு குறைந்த கஷ்டத்தையும், அதிக பயனையும் தந்தது. ஆநிரை கவர்தல் வெட்சி என்ற பெயரில் புறத்திணையில் பின்னாளில் ஒரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது. (கொள்ளை அன்று தீய ஒழுக்கமாகக் கொள்ளப்படவில்லை. போர் அன்றைய சமூகத்தில் ஓர் அவசியமான ஒழுக்கமாகக் கருதப்பட்டது.)
தம்மிடமிருந்த நிரைகளைக் குறிஞ்சியில் வாழ்ந்த வேடரான பகைவரிடமிருந்து பாதுகாக்க முல்லை நில மக்கள் செய்த பாதுகாப்புப் போர் வஞ்சி என்று புறத்திணையில் ஒரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது.
இந்த வேட்டுவரையும், ஆயரையும் நாம் பின்னாளில் கலித்தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் காணுகின்றோம்.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும், குன்றக் குரவையிலும் இப்பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வும், வழக்கும், ஆடலும், பாடலும் இளங்கோவடிகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கூறப்படும் போர் ஒழுக்கங்கள் தத்தம் பொருளாதார நலன்களைக் காப்பதாக அமைந்துள்ளது.
(உதாரணம்.) மாடு பிடித்தல் (குறிஞ்சி நிலம்.) வெட்சி.
மாட்டைக் காத்தல் (முல்லை நிலம்.) வஞ்சி.
இம் முல்லையும், குறிஞ்சியும் வேனிற் காலத்தில் (சித்திரை, பங்குனி) சூரிய வெளிச்சத்தால் பாலை நிலமாகும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இக்கால கட்டத்திலே பாலை நிலத்திற்கூடாகச் செல்லும் மக்களிடம் அவர்கள் கொண்டு செல்லும் பொருள்களைக் கொள்ளையடிக்க எயினர், மறவர் ஆகிய குறிஞ்சி நில மக்கள் நடத்தும் போர் வாகை என்று ஓரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது.
புராதன தமிழ்ச் சமூகத்தில் ஆரம்பத்தில் கூட்டு வாழ்க்கை முறையே நிலவியது.
உள்ளோர், இல்லோர் என்ற பேதம் இருக்கவில்லை.
கிடைத்ததைப் பகிர்ந்து உண்டனர். அல்லது பட்டினி கிடந்தனர்.
உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டனர்;,
அலைந்தனர்.
உணவு தேடுதலில் கூட்டாக ஈடுபட்டனர்
. தலைவரும், வீரரும் இருந்து சமமாக உணவு உண்டனர், கள் அருந்தினர், இறைச்சி சாப்பிட்டனர், ஆடினர், பாடினர். அவர்களின் அன்றைய எளிய உணவு முறைகள் பற்றிய பாடல்கள் குறிஞ்சி பற்றிய சங்ககாலப் பாடல்களிற் காணப்படுகின்றன.
இப்புராதன இனக்குழுக்கள் மலைப் பகுதிகளிலும் (குறிஞ்சி), காட்டுப் பகுதிகளிலும் (முல்லை) வாழ்ந்தனர். இவர்களிடம் கூட்டு வாழ்க்கையே நிலவியிருக்க வேண்டும்.
கூட்டு வாழ்க்கையின் பிரதி பலிப்பே வீரன்( Hero) என்ற படிமமாகும்.
இனக்குழுவுக்குத் தலைமை தாங்கி அக்குழுவுக்குரிய உணவு, இடம், பாதுகாப்பு என்பனவற்றைத் தருபவனே வீரன் எனக் கருதப்பட்டான்.
இனக் குழுமத்தின் கூட்டு அதிகாரத்தையே collective power) வீரன் பிரதியீடு செய்தான்
. புறநானூற்றில் வரும் வீரர்கள் இவர்களே.
வீரன் உருவாக்கத்திற்கு முன்னர் இனக்குழுச் சமூகம் சமத்துவமுடையதாயிருந்தது
. அங்கு தாயே தலைவியாக ஏற்கப் பட்டிருந்தாள்.
வீரன், தலைவன் உருவாவது தமிழ்ச் சமூக வளர்ச்சியின் இரண்டாம் கட்டம் எனலாம்.
வீரன் உருவாக்கத்திற்கும் முல்லை நிலத்திற்குமிடையே உறவுண்டு.
முல்லை நிலத்தில் தனிச் சொத்துத் தோற்றம் பெறுகிறது. உரிமையாளனாக அவன் காட்சி தருகிறான்.
அவனுக்குப் பின்னால் அவன் சொத்து அவனது வாரிசுக்குப் போக வேண்டும்.
அதற்கு அவனுக்கு ஒரு மனைவி தேவை.
அம் மனைவி பிற ஆடவருடன் செல்லாது கற்பு நெறி பேண வேண்டும்.
அப்போது தான் தலைவனின் சொத்து அவனது மகனுக்குச் செல்லும்
. இவ்வகையில் முல்லை நிலத்தில் தலைவன் வரும் வரை காத்துக் கொண்டிருக்கும் கற்பு நெறி, சமுதாய விதியாகி விடுகிறது. (குறிஞ்சி நிலத்துக்குக் களவும், முல்லை நிலத்துக் கற்பும் ஏற்றிக் கூறுதல் தமிழ் மரபு. முல்லை சார்ந்த கற்பு.)
வீரனின் (ர்நசழ) தோற்றத்திற்கும், இனக் குழுச் சமூகத்தின் கலைப்புக்கும் உறவுண்டு.
வீரனின் தோற்றத்திற்கும், தனிச் சொத்துரிமைக்கும், கற்புக்கும் தொடர்புண்டு.
நாம் முன்னரே குறிப்பிட்ட இனக்குழு விவசாய முறையின் ஆரம்பத்திற்கும், அதனையொட்டி உருவான ஆரம்பகால வணிகத்திற்கும், வீரனின் தோற்றத்திற்குமிடையே உறவுண்டு.
இவை யாவற்றையும் சங்க இலக்கியத்தில் வரும் குறிஞ்சி, முல்லை சம்பந்தமான பாடல்களும், புறநானூற்றுப் பாடல்களும் பிரதி பலிக்கின்றன.
மருதநில நாகரிகமும், பொருளாதார வளர்ச்சியும்.
மருத நிலம் வளர்கையில் அங்கு ஒரு புது விவசாய முறை உருவாகி விடுகிறது.
அவர்கள் ஆற்றோரங்களில் விவசாயம் செய்தனர்.
காவேரி
, வைகை,
தென்பெண்ணை,
தாமிரபருணி,
பாலாறு
என்பன முக்கிய
ஆறுகளாயின.
முக்கியமாக காவேரி ஆற்றுப் படுகை வளம் மிக்கதாயிருந்தது
. இதனால் நீர்ப்பாசன முறையைக் கண்டு பிடித்தனர். மழையை மாத்திரம் நம்பியிராது ஆற்று நீரின் துணை கொண்டு எப்போதும் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். எப்போதும் விவசாயம் செய்தமையினால் இடம்விட்டு இடம் பெயரும் தன்மை இவர்களிடம் காணப்படவில்லை.
நிலைத்த வாழ்க்கை ஒன்று ஏற்பட்டது. கோட்டை, குடியிருப்பு என்பன கட்டி நிலைபதியாக வாழ்ந்தனர். இவ்வண்ணம் மருதநில நாகரிகம் உண்டாயிற்று.
மருதநிலம் வளர்ச்சி பெற்ற காலத்தில் இரண்டு பிரதான சமூகங்களைத் தமிழகத்திற் காண்கின்றோம்.
அ. பழைய முறையில் வேட்டையாடி, மந்தை மேய்த்து, மழையை நம்பி பழைய முறையில் விவசாயம் செய்து வாழ்ந்த இனக்குழுக்கள்.
ஆ. புதிய முறையில் நீர்ப்பாசனம் செய்து புதிய உற்பத்திக் கருவிகளைக் கையாண்டு சாகுபடி செய்து மிக அதிக பயன் பெற்றுச் செல்வம் பெறும் நிலவுடமைச் சமூகம்
.
புதிய நிலவுடமைச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உருப் பெறுவதற்கு இக்கால கட்டத்தில் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இரும்பு பெரும் உதவி புரிந்தது.
பழைய இனக் குழுக்களுக்கும், புதிய நிலவுடமையாளர்கட்குமிடையே முரண் உருவானது.
இத்தகைய முரணில் ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை அழித்தொழிக்கும் அல்லது உட்செரிக்கும்.
இவ்வழித்தொழிப்பிலும், உட்செரிப்பிலும் கடும் மோதலும், ஆயுதம் தாங்கிய கலவரங்களும் இருக்கும்.
புதிய விவசாய பழைய சமூகம், பழைய இனக்குழச் சமூகங்களை அழித்தே உருவாகின்றது. புதிய விவசாய மயமாக்கலுடன் மருத நிலத்தின் வளர்ச்சியுடன் வேந்தும் உருவாகின்றது. வேந்துருவாக்கத்துடன் வடநாட்லிருந்து தமிழகத்திற்கு வந்த பிராமணியமும் இணைந்திருந்தது. கலித்தொகையில் இதற்கு ஆதாரமுண்டு.
ஒரு பகுதியில் மலை அல்லது வெளி சார்ந்த புன் செய் நில மக்கள் வாழ்ந்தனர். (Hilly and dry land)இப்பகுதிகளில் தினை, வரகு, சாமை என்பன செய்யப்பட்டன.
முல்லை நில மக்கள் இங்கு வாழ்ந்தனர்.
இன்னொரு பகுதியில் தாழ்நிலைச் சமவெளி மக்கள் வாழ்ந்தனர். (டுழற டயனெ) இங்கு நெல்லு சாகுபடி செய்யப்பட்டது.
வளர்ச்சி பெற்ற மருத நில மக்கள் வளர்ச்சி பெறாத குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலமக்களை உட்செரிப்பதில் வெற்றிகளைக் கண்டனர்.
பேர்ட்டன் ஸ்ரைன் தென்னிந்தியாவில் உட்செரிப்பதில் இழுபறி அதிக காலம் நீடித்தது என்பர்.
இதற்கான காரணங்கள்.
அ. மலைத்தொடர்கள், புவியியல் தன்மைகள் காரணமாக பழங்குடியினை மருத நில மக்கள் இலகுவாகத் தாக்கியழிக்க முடியவில்லை.
ஆ. விவசாயச் சமூகத்திலிருந்து தம்மை முற்றாகப் பழங்குடியினர் துண்டித்துக் கொள்ளவில்லை. இரு பிரிவினருக்குமிடையே ஒரு அருகாமை இருந்து வந்தது.
இ. தாக்குதல்களுக்கு வாய்ப்பான சிதறுண்ட விவசாயச் குடியிருப்புகளாகவே அவை அமைந்திருந்நதன.
பாரியின் பறம்பு மலை மீது மூன்று தமிழ் வேந்தர்களும் படை எடுத்தமையையும், அப்பறம்பு மலை மன்னர்களின் முற்றுகைக்கு அடிபணியாது நின்றமையையும் இப் பின்னணியிலேதான் நோக்க வேண்டும்.
மேலாண்மைக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவே இது இருந்து வந்தது
. புறநானூற்றுப் போர்கள் பலவற்றை இதன் பின்னணியிற் பார்ப்பின் தெளிவு பிறக்கும்.
மருத நில மக்கள் இனக்குழுக்களை வென்று உட்செரித்து நிலைபேறாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவர்களின் நிறைவேற்றுக்காக, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துப் பொது ஆட்சி முறை நிலைநிறுத்துவதற்கான கருத்தியல் பின்னணி தேவைப்பட்டது.
இக்கால கட்டத்திலேதான் தமிழகத்தில் புத்த, சமண வருகை நிகழ்கிறது. றோம நாட்டுடன் தொடர்பு ஏற்படுகிறது. சங்க இலக்கியத்திற்கும் றோம வணிகத் தொடர்பு பிரதிபலிப்பதை அல்ச்சின் கண்டு கூறியுள்ளார். (நெடுநெல் வாடையில் றோம நாட்டுத் தொடர்புக்குச் சான்றுண்டு.)
இவற்றால் தமிழகத்துக்கு எழுத்து முறை அறிமுகமாகின்றது
புத்த, சமண வருகையினால் தமிழகத்துக்கு எழுத்து முறை வந்தது எனக் கூறும் ஐராதவதம் மகாதேவன் கி.மு 2ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டதை உறுதி செய்துள்ளார்
.
மயிலை சினி வேங்கட சாமியும் சங்ககால பிராமி கல்வெட்டுக்கள் பற்றிக் கூறியுள்ளார். (பிராமி எழுத்துக்கள் வருமுன் தமிழில் எழுத்துக்கள் இருந்ததா? இல்லையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது.)
எழுத்துக்களின் வருகையும், வேந்துருவாக்கவும் அரசியல் தேவையும் இணைந்த பொழுதுதான் பழைய பாடல்களைத் தொகுக்கும் வேலைகளும் ஆரம்பமாயின. சங்க இலக்கியப் பாடல்களில் மூன்று பிரிவுகள் உள்ளது போற் தோன்றுகின்றன.
அ. நினைவிலிருந்த பழைய பாடல்களை எழுத்தில் வடித்தமை.
ஆ. பழைய பாடல்களைப் போன்ற இனநினைவுகளைப் பாடல்களாகப் பாடியமை.
இ. தம் காலத்தைப் பிரதிபலிக்கும் புதிய பாடல்கள் யாத்தமை.
இத் தொகுப்பு முயற்சியின் போது தான் பழைய இனக் குழு மக்களின் வாழ்க்கை முறை கூறும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் பற்றிய பாடல்களும், அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற மருத நில மக்கள் பற்றிய பாடல்களும் தொகுக்கப்படுகின்றன.
தொகுப்புக்கு ஏற்கனவே நாம் கூறியபடி ஒரு நோக்கமுண்டு. அந்நூல்களைத் தொகுக்க உதவி புரிந்தோர் அக்காலத்து அதிகார, பலம் பெற்றோர், ஆட்சியாளர், தொகுப்பித்தோர்கள், அவர்களது தயவில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள்.
சமாந்திரமற்ற வளர்ச்சி.
___________________________________
மருதநிலம் வளர்ச்சி பெற்று அரசுகள் தோன்றி செழிப்பு வாய்ந்த வாழ்வினை தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர் வாழ ஆரம்பித்த அக்கால கட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்நிலை இருக்கவில்லை. இவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட அல்லது கவனிக்காது விடப்பட்ட ஏனைய நிலங்கள் வளர்ச்சியற்று இருந்தன.
, வளர்ந்த செழிப்பான நிலம் நோக்கி பிற மதத்தினரும், பிற நாட்டினரும் பிராமணர்களும், கைவினைஞர்களும் வருதல் இயல்பு. அவர்களின் வருகை மருத நிலத்தை மேலும் வளரச் செய்தது. ஏனைய நிலங்கள் இன்னும் தாழ்ந்தன.
இவ்வகையில் இப்பரிணாம வளர்ச்சிப் போக்கில் ஏனைய நிலங்கள் வளர்ச்சி குன்றின. இவ்வகையில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு சமாந்திர வளர்ச்சியின்மையினைக் (ருநெஎநn னுநஎநடழிஅநவெ) காணுகிறோம்.
சிறுபாணாற்றுப்படை இதனைத் தெளிவாகக் கூறுகிறது. பாணன் பாட்டுடைத் தலைவனைச் சந்திக்கச் செல்லும் வழியினை ஆற்றுப்படுத்தும் இச்செய்யுளில் கீழ்வரும் தரவுகள் தமிழ்ச் சமூகத்தின் சமாந்திரமற்ற வளர்ச்சியினை எமக்குக் காட்டும்.
143 _ 163 வரிகள் - எயிற்பட்டிமை.
164 _ 177 வரிகள் - வெல்லூர்.
178 _ 195 வரிகள் - நன்னன்மலை.
46 _ 92 வரிகள் - காஞ்சி.
147 _ 196 - கணவாய். மாடு மேய்ப்போர் வாழும் இடம்.
196 _ 192 - (நீர்ப்பாசனம் குறைந்த அளவில் உள்ள இடம்.)
213 _ 283; - உள் ஊர் மீனவர். குளத்தில் மீன் பிடிப்போர் வாழும் இடம்.
284 _ 351; - கடற்கரைப் பட்டினம். நீர்பாயும் இடம்.
371 _ 392; - திருவேக்கா.
மருதநிலம் உருவாகிவிட்ட காலத்தில் இத்தகைய சமனற்ற மாநிலங்கள் தமிழ் நாட்டில் இருந்தமையை சிறுபாணராற்றுப்படை காட்டுகிறது.
புவியியல் ரீதியாக மாத்திரமின்றிப் பொருளியல் ரீதியாகவும் தமிழ் நாடு சமனற்ற வளர்ச்சி கொண்டதாகவே இருந்தது.
புவியியல் ரீதியாக 4 நிலங்களே தமிழகத்தில் முன்பு இருந்தன
இவற்றைத் தொல்காப்பியர் பின்வருமாறு கூறுகிறார்.
காடுறை உலகம் (காட்டுப்பகுதி)
மைவரை உலகம் (மலைப்பகுதி)
தீம்புனல் உலகம் (வயற்பகுதி)
பெருமணல் உலகம் (கடற்கரைப்பகுதி)
என்று இந்தப் புவியியல் பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு உலகம் என்று தொல்காப்பியர் அழைப்பது கவனத்திற்குரியது. அவருக்குத் தமிழ்நாடு ஒன்று அன்று, பலது. தமிழர் ஒருவர் அன்று பலர்.
பாலை நிலம் பின்னால் வந்தது என்பது முன்னரேயே கூறப்பட்டது. இளம்பூரணர் பாலைக்குத் தனி நிலப்பகுதி இல்லை என்கிறார். சங்க இலக்கியங்களில் பாலைக்குக் குறிஞ்சி நிலப் பின்னணி தரப்பட்டுள்ளது.
பெரும்பாணாற்றுப்படையில் வேட்டையாடுவோரின் குடும்பம் விபரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எயினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எயினர் பாலை நில மக்கள்.
முல்லை நிலத்து ஆயர்களும்,
குறிஞ்சி நிலத்து வேட்டுவர்களும் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ் மக்களே.
குறிஞ்சி நிலமான மலைப் பகுதியில் வளர்ச்சி குறைவு. மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தின் வளர்ச்சி குறிஞ்சியை விட சற்று அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற மேய்ச்சல் (முல்லை) மக்கள் ஆடு, மாடுகளை வைத்திருந்தனர். குறிஞ்சி நில மக்களைவிட வசதி பெற்றிருந்தனர். இவ்வசதி பெற்றோரிடமிருந்து வசதி குறைந்த குறிஞ்சி நில மக்கள் ஆநிரைகளைக் கவர்ந்தனர். ஆநிரைகளைக் கவர்தல் அக்காலத்தில் வெட்சி என்று புறத்திணையில் அழைக்கப்பட்டது.
தம்மிடமிருந்த ஆநிரைகளை குறிஞ்சியில் வாழ்ந்த வேடரான பகைவரிடமிருந்து பாதுகாக்க முல்லை நில மக்கள் செய்த பாதுகாப்புப் போர் வஞ்சி என்று புறத்திணையில் அழைக்கப்பட்டது
.
இந்த வேட்டுவரையும், ஆயரையும் நாம் பின்னாளில் கலித்தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் காணுகிறோம்.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும், குன்றக் குரவையிலும் இப் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வும் வழக்கும், ஆடலும், பாடலும் இளங்கோவடிகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வளர்ச்சி பெற்ற மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தை விட நீர்ப்பாசன வசதி பெற்ற மருதநிலம் மிக அதிக வளர்ச்சி பெற்ற நிலமாக இருந்தது.
மருத நிலத்தில் ஓடிய ஆறுகள் முன் கூறியது போல அதற்கு வளர்ச்சியைத் தந்தன. நிலம் விளைந்தது. நெல் மிகுந்தது. வாணிபம் பெருகிற்று. செல்வம் மலிந்தது. இச் செல்வத்தைக் கட்டிக் காக்க படைகளும், அரசும், கோட்டை கொத்தளங்களும் வேண்டியிருந்தன. எனவே தான் மருதத்தில் நடக்கும் போரினை புறத்திணையில்உழிஞை என்று அழைக்கும் மரபு தோன்றிற்று.
உழிஞை என்பது காவற்காட்டை அழித்து முன்னேறி கோட்டையைப் பிடிக்கும் போர். புறத்திணை வெண்பாவில் இது பற்றிய விபரங்களுண்டு.
அரசு வளர்ச்சி பெற்றுப் போர் முறைகளும் வளர்ந்த பின் திட்டமிட்டு வியூகம் அமைத்துச் சண்டை செய்யும் போர் நுணுக்கங்கள் தோன்றின. அதற்கு மிக அகன்ற நிலம் தேவைப்பட்டது. கடற்கரை அதற்குப் பொருத்தமாக அமைந்தது. இதனால் களம் குறித்து போர் செய்யும் இடமாகக் கடற்கரை அமைந்தது. அப்போர் தும்பை என அழைக்கப்பட்டது.
புறத்திணையிற் கூறப்படும் போர் முறைகள் ஒவ்வொருவரும் தத்தம் பொருளாதார நலன்களைக் காப்பதாக அமைந்துள்ளது.
உதாரணம்.
மாடு பிடித்தல் (குறிஞ்சி நிலம்) வெட்சி.
மாட்டைக் காத்தல் (முல்லை நிலம்) வஞ்சி.
அரணமைத்தல். (மருதநிலம்.) உழிஞை.
களம் அமைத்துச் சண்டை (நெய்தல்) தும்பை.
முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் சூரிய வெளிச்சம் காரணமாகவும், காலநிலை காரணமாகவும் பாலையாக மாறும் என்று முன்னர் கூறப்பட்டுள்ளது.
இக்கால கட்டத்திலே பாலை நிலத்திற்கூடாகச் செல்லும் மக்களிடம் கொள்ளையடிக்க எயினர், மறவர் ஆகிய குறிஞ்சி, முல்லை நில மக்கள் நடத்தும் போர் வாகை என்று அழைக்கப்பட்டது.
இவ்வண்ணம் ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு சமூக அமைப்பை, வாழ்க்கை முறையினை, வழிபாட்டினை, போர் முறைகளை வைத்திருந்தனர். எனவே தான் தொல்காப்பியர் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு உலகம் என்று அழைத்தனர்.
திணைக் கோட்பாடு புராதன தமிழர் வாழ்வை, சமூக அமைப்பை அறிய உதவும் திறவுகோல் என்பார். கா.சிவத்தம்பி
திணை என்பதற்கு அர்த்தம் என்ன?
____________________________________
திணை என்றால் என்ன என்று தொல்காப்பியர் வரைவிலக்கணம் தரவில்லை
. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு உயர்ந்த குடி, உயர்வு அல்லாத குடி என்ற அர்த்தத்திலேயே வழங்கப்பட்டது.
நச்சினார்க்கினியர் ஆரம்பத்தில் திணையினை நிலமாகக் கொண்டார். பின்னால் அதனை ஒரு குழுவுக்குரிய பெயராகக் காண்கிறார்
. திணை நிலைப் பெயரிலிருந்து திணை என்ற சொல் ஒரு குழுவைக் குறித்தது என்று அறிகிறோம்.
மருத நிலத்தின் வளர்ச்சியுடன் தமிழ் நாட்டில் மெகதலிக் காலம் ஆரம்பமாகிறது.
இரும்புப் பாவனை அதில் ஒன்று
எலியட் அவர்கள் போனீசியர் ஐரோப்பாவுக்கு இரும்பை அறிமுகம் செய்தது கி.மு. 800 இல் என்பர்.
ஹைமண்டோவ் திராவிட மெகதலிக் கலாசாரத்தை உருவாக்கிய திராவிட மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது. கி.மு. 500 இல் என்பர்
. இவர்கள் மத்திய தரைக் கடற்பகுதியைச் சார்ந்தவர்கள் என்பர் ஹைமன்டோவ்
. இவ்விடப்பெயர்வு
கி.மு. 322 – 500 க்கும் இடையில் நடந்திருக்கலாம் என்பர்.கோடன்.
இரும்புப் பாவனையுடன் திராவிட கலாசாரம் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கிறது.
இரும்பு ஆயுதங்கள் காட்டை அழிக்கப் பயன்படுகிறன்றன
. கற்கால மனிதனும், புராதன தமிழர்களும் முல்லையிலும், குறிஞ்சியிலும் வாழ்ந்தார்கள்.
மருதநிலத்தின் உடமையாளர்களாகத் திராவிடர் மாறியதும்
பண்டைய தமிழர் பலர் குறிஞ்சியில், ஒதுங்கிவிடச்
சிலர் திராவிடருடன் இணைந்திருக்கவும் வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியும், வேந்துருவாக்கமும்.
முல்லை நிலம் விவசாயத்திற்குரிய நிலமாக்கப்பட்டது.
முல்லை மருதமானது.
முல்லை நிலத்தவர்கள் விவசாயிகளானார்கள்.
முல்லையில் குடியேற்றங்கள நிகழ்ந்தன
. நிலைபதியான வாழ்க்கை ஏற்பட்டது.
விவசாயம் குடியிருப்புக்களை வேண்டி நின்றது.
அதிகளவு குடியிருப்புக்கள் ஏற்பட்டன.
விவசாய விளைச்சல்களைச் சேமித்து வைக்கும் முறைகள் தோன்றின
. ஆயர்கள் அரசர்களானார்கள்.
இதன் விளைவாக மன்னன் தோற்றம் பெறுகிறான்
. குறிஞ்சியில் தலைவன் கிழவன் என்றழைக்கப்பட,
முல்லையிலே மன்னன் என்றழைக்கப்படுகிறான்
. முல்லை மருதமாகிய பொழுது தலைவன் அரசன் என்ற பெயர் பெறுகிறான்.
மருத நிலத் தலைவன் ஏனைய நிலங்களையும் வென்று பேரரசனாகின்ற பொமுது வேந்தன் என்ற பெயரும் பெறுகிறான்.
கிழவன் (குறிஞ்சி),
மன்னன் (முல்லை),
(மருதம்), வேந்தன் (பெருநிலப்பரப்பு)
என்ற பெயர்களின் வளர்ச்சிப்படி முறைகள் ஒன்றினின்று ஒன்று வளர்ந்த முறைமையைக் காட்டுகின்றன
. அரசனுக்குரிய கடமைகளுள் ஒன்று விவசாய விளைநிலங்கள் அமைந்த நாட்டின் எல்லைகளை மீறிப் பகைவர் வராமல் பாதுகாத்தல் ஆகும்
.இம்மன்னர்களின் அரசுரிமை அவர்களின் திறமை, வீரம், செல்வம் என்ற அடிப்படையில் உருவாகின்றது.
புறநானூற்றிலே
18 சேர மன்னர்களும்,
13 சோழ மன்னர்களும்
, 12 பாண்டிய மன்னர்களும்
, 47 தலைவர்களுமாக
90 மன்னர் பெயர்கள் வருகின்றன.
இவர்களுள் வேளிர்கள் சிறு நிலப்பகுதியை ஆண்டவர்கள்.
ஒதுக்கமான காவலரண் உள்ள பகுதியில் இவர்கள் இருந்தார்கள்.
மூவேந்தர்கள் ஆற்றுப்படுக்கை நிலங்களில்
உள்ள தலை நகரங்களில் இருந்து ஆட்சி புரிந்தார்கள்.
தமிழர்களிடையே ஆதிகாலத்தில் அரசுருவான
முறைமையை கா. சிவத்தம்பி தனதுThe development of aristocrasy in ancient Tamil Nadu என் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
அரசின்மையிலிருந்து அரசுருவாக்கம் ஏற்பட்டு
அரசு நிலை பெற்றமையை
அதாவது அரசின்மை,
அரசுருவாக்கம்,
அரச நிலைபேறு
என்பவற்றை இலக்கிய ஆதார மூலம் அவர் நிறுவுகிறார்.
திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு
தலைவன்
, இறை
, கோ,
மன்னன்,
வேந்து,
வேந்தன்,
அரசு,
அரசன்,
குரிசில்
, கொற்றம்
என்ற சொற்களுக்கூடாக வரலாற்றில் பின்நோக்கிச் சென்று
இப் படிமுறை வளர்ச்சியை அவர் நிறுவுகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசின்மை, அரசுருவாக்கம், அரசு நிலைபெற்றமை என்பன அவ்வக்காலச் சமூக பொருளாதார நிலைமைகளின் விளைவாகவே அமைந்துள்ளன.
வள்ளுவர் அரசுக்குப்
படை,
குடி,
கூழ்,
அமைச்சு,
நட்பு,
அரண்
என்பன இருக்க வேண்டுமென்று திட்டமாகக் கூறுகிறார்
. மிகுந்த வளர்ச்சி அடைந்த அரசின் தன்மை இது.
இத்தகைய அரச அங்கங்களை உடையோரே வேந்தர்கள் எனக் கருதப்பட்டனர்.
வேந்துருவாக்கத்திற்கு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக அதிகாரம் பெற்ற வேளாளர் (நிலவுடமையாளர்)
, கலத்திலும்,, காலிலும் சென்று வாணிபம் செய்து பொருளீட்டி பொருளாதார பலம் பெற்ற வணிகர்கள்.
அறிவில் அதிகாரம் கொண்டு மேனிலை பெற்ற பிராமணர்கள்
ஆகிய சமூகங்களின் உருவாக்கங்களும் உதவுகின்றன.
அரச நிலைபேற்றுக்கு
பிராமணிய,
பௌத்த
கருத்தியல்களும் உதவுகின்றன.
வேந்துருவாக்கமும்,
புதிய சமூகமாக விவசாய சமூகம் உருவாகியமையும்
, தமிழரை நாகரிகத்தின் வளர்ச்சியின்
ஆரம்ப நிலைக்குக் கொண்டு வருகின்றது.
விவசாய சமூக உருவாக்கத்துடன் தமிழரிடையே சமூக வேறுபாடுகளும், சாதி வேறுபாடுகளும் தோன்றி விடுகின்றன. ஆரம்பத்தில் நிலங்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் பின்னர் ஒவ்வொரு நிலத்திலும் தொழில் அடிப்படையிலும் ஏற்படலாயிற்று.
மேற்குறிப்பிட்ட தகவல்களின் பின்னணியில்
திராவிடர் வருகைக்கு முற்பட்ட தமிழகத்தினைக் கட்டமைக்க முயல்வோர்
காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலையிலிருந்து
மருத நில நாகரிக நிலைக்கு தமிழ் மக்கள் வந்தமையை
முன்னர் கூறிய தகவல்கள் மூலம் அறியலாம்.
இந்த நிலைகளைக் கடந்து வர தமிழ் நாட்டில் குறிஞ்சியிலும்,
முல்லையிலும் பின்னாளில் மருதத்திலும்
வாழ்ந்த மக்களிடையே ஓயாத போர்கள் நடைபெற்றன.
இனக் குழுத் தலைவர்கள் வீரர்களாயினர்
. மார்பில் வேல் தாங்கி இறத்தல்
, போரில் புறமுதுகிடாமை,
விழுப்புண் தாங்குதல்,
தலைவனுக்காகத் தன்னுயிர் நீத்தல்,
சிறு பையனைப் போருக்கு அனுப்புதல்,
வீர மக்களைப் பெறுதல் என்று
போரே வாழ்வின் பிரதான அம்சமாக அமைந்தது.
வீரம் போற்றப்பட்ட இந்த காலகட்டம் வீரயுகம் என்றழைக்கப்படுகிறது.
ஓயாத இந்தப் போர்களுக்கூடாகவே
ஆரம்பகால நிலவுடமை தோற்றம் பெறுகிறது.
நிலத்தைச் சாகுபடி செய்யும் உழவர் தோன்றுகின்றனர்.
இவற்றைப் பாதுகாக்கக் குறு நில மன்னரான வேளிர்கள் தோற்றம் பெறுகின்றனர்.
வேளாண்மைச் செய்கை வாழ்வோடு இணைகிறது.
உற்பத்தி காரணமாக ஏற்பட்ட உயர்வும்,
கைத்தொழில்களும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வியாபாரம் செய்யும் வணிக சமூகத்தையும் உருவாக்கி விடுகிறது.
இவ்வண்ணமாக வீரயுகம் (Heroic age)
ஆரம்ப கால நிலவுடமையுகம், (Early feudal age)
ஆரம்பகால வணிக யுகம் (Early mercantile age) என்ற யுகங்களினூடாக நாகரிக நிலைக்குள் புராதன தமிழர் சமூகம் காலடி எடுத்துவைக்கிறது.
உலகின் சகல இன மக்களும் இந்த வரலாற்று விதிமுறைகளுக்கு இயையவே ஆரம்பகாலத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.
உலக சரித்திர ஆய்வு இதனையே காட்டுகிறது
. தமிழ் மக்களும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளமைக்குச்
சங்க இலக்கியம் எனப்படும் இலக்கியங்களிலேயே சான்றுகளுள்ளன.
அச் சான்றுகள் தொல்லியல் ஆய்வுகளாலும் உறுதி செய்யப்படுகின்றன.
சங்க காலத் தமிழகம் என அழைக்கப்பட்ட தமிழகம் பற்றிய புதிய கட்டமைப்பு ஒன்றைச் செய்யவும் முடிகிறது.
(கட்டுரைத் தொடர் முடிந்தது)