Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 2

  • சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -2
    ________________________________________________________
    மௌனகுரு
    சோழர் காலத்தில் நிலவிய சமூக அமைப்பினை வரலாற்றாசிரியர்கள் நிலமானியச் சமூக அமைப்பு என வர்ணிப்பார்கள.
    ; பேராசிரியர் நீகண்டசாஸ்திரி போன்றவர்கள் இந்த நிலமானிய அமைப்பினைப் பற்றி விதந்து கூறுவர். இந்த நிலமானிய அமைப்புத் தான் இந்து சமயத்தினை, அதாவது சைவசித்தாந்தத்தினை இந்தியாவிற்கு அளித்தது என்பர்.
    பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் இந்துமதம் தென்னிந்தியாவிற்கு அளித்த இரண்டு பெரும் கொடைகள் கோயிலும், மடமும் என்று கூறுவர்.
    சோழர் காலத்திலே தான் இம்மடமும் கோயிலும் வளர்ந்தன என்று கூறி பொதுமக்களின் கற்பனையை இவை கவர்ந்தன, பணக்காரர்களின் ஆதரவினை பெற்றன என்று அவர் மேலும் கூறுவார்.
    பணக்காரர்களின் ஆதரவை ஏன் இவை பெற்றன?
    என்பது முக்கியமான வினா.
    சோழர் கால நிலமானிய முறை எவ்வளவு தூரம் பொதுமக்களை, குறிப்பாக சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளோரைச் சுரண்டியது, அதற்கு எவ்வாறு அக்காலத்தில் எழுந்த சைவசித்தாந்தம் உதவியது என்பதனை தனது புகழ் பெற்ற 'பேரரசும் பெருந்தத்துவமும்' என்ற கட்டுரையிலே பேராசிரியர் கைலாசபதி விளக்கியுள்ளார்
    அக்காலத்து எழுந்த பெரிய புராணம் எவ்வாறு வர்க்க முரண்பாட்டினை தடுக்கின்ற ஒரு கலாசார மாயையை, பிரிந்து கிடந்த மக்களிடம் ஏற்படுத்தியது என்பதனை
    'பெரியபுராணமும் சோழர் காலமும்' என்ற தனது சிறந்த கட்டுரையின் மூலம் ராஜ்கௌதமன் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் வானமாமலையின் கட்டுரைகள் சில இந்த நிலமானிய முறையின் கீழ் மக்கள் வாழவில்லை. அடக்கப்பட்டார்கள், சிறுமைப்படுத்தப்பட்டார்கள் அவ்வடக்கு முறைக்கு எதிராகத் தம்மால் முடிந்தவரை போராடினார்கள் என்பதனை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் புலப்படுத்தும் கட்டுரைகளாகும்.
    இத்தகையதொரு பேரரசினை எதிர்த்துக் கம்பன் இராமாயணத்தினை உருவாக்கியமையை இக்கட்டுரையாசிரியரின் கம்பன் ஒரு கலகக்காரன் என்ற கட்டுரை விபரிக்கிறது.
    இவ்வண்ணம் சோழர்கால சமூக அமைப்பு நிலமானிய அமைப்பு எவ்வாறு பொதுவாகச் சாதாரண மக்களையும் குறிப்பாக அடிமட்டத்திலிருந்த பெருவாரியான உழைக்கம் மக்களையும் சுரண்டிக் கொழுத்த ஒரு சுரண்டல் அமைப்பாக இருந்தது என்பன பற்றிய பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
    நிலமானிய முறையினை அதாவது ஐரோப்பாவில் உருவான நிலமானிய முறையினை சோழர் காலத்திற்கு அப்படியே பொருத்திப் பார்ப்பார் பேராசிரியர் கைலாசபதி அவர்கள்.
    ஓரு காலச் சமூக அமைப்புக்கு அத்திவாரமாக அமைவது அக்காலப் பொருளாதார அமைப்பாகும் பொருளாதார பொருள் உற்பத்தியும், பங்கீடும், அச்சமுகத்தில் அமைந்திருக்கும் முறையினை பொருளாதார அமைப்பு என்றழைப்பர்.
    ஓவ்வொரு சமூகமும் வரலாற்றுப் போக்கில் பல்வேறு விதமான பொருளாதார அமைப்புகளைக் கண்டு வளர்ந்திருக்கும்.
    வுரலாற்றுப் போக்கின் ஒரு கால கட்டத்திலே நிலமானியப் பொருளாதார அமைப்புமுறை தோன்றியது. நிலமானிய முறை என்பது அச்சமூகத்தில் நிலவிய பொருளாதார அமைப்பில் நிலம் பிரதானம் பெறுகின்ற ஒரு ஒரு பொருளாதார அமைப்பாகும்
    . இங்கு பொருள் உற்பத்தி உறவானது நிலப்பிரபுவின் உடமையாக உற்பத்திச் சாதனங்கள் அமைந்திருப்பதில் தங்கியுள்ளது.
    உலகெங்கும் நிலவிய நிலமானிய முறையினை ஆராய்ந்தவர்கள் நிலமானிய முறையானது மன்னர்கள் தமக்குப் பணி செய்தவர்களுக்கு, முக்கியமாகப் போரிலே உதவி செய்தவர்களுக்கு மானியமாகக் கொடுக்கும் நில உரிமையினை குறிக்கும் என்பர்.
    நிலத்திலே உழவுத் தொழில் செய்த பண்ணையாட்கள் அரசரிடம் இருந்து மானியம் பெற்று பிரபுவின் ஆணைக்குள் இருந்தனர். ஆயினம் அவர்கள் பிரபுகளின் அடிமைகள் இல்லை.
    சில தேசங்களில் பண்ணை அடிமைகள் வாங்கி விற்கப்படும் சரக்காகக் கணிக்கப்பட்டனர். எனினும் நிலப்பிரபுத்துவ அமைப்பில் பண்ணையாட்களும், குடியானவர்களும், நிலத்துடன் பிணைக்கப்பட்ட நிலையிலிருந்தனரேயன்றிப் பெரும்பாலும் அடிமைகளாகக் கொள்ளப்படவில்லை.
    இந்தவகையிலே தான் நிலமானியத்தை பேராசிரியர் கைலாசபதி சோழர் காலத்திற்குப் பொருத்திப் பார்த்தார். சுருங்கச் சொன்னால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பிரபு, பண்ணையாள் ஆகியோருக்கிடையிலே தனிப்பட்ட உறவுநிலை நிலவும். கூர்நதிக் கோபுரமாக அமைந்திருக்கின்ற இந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிலே உச்சத்திலே அரசன் சர்வ அதிகாரம் பொருந்தியவனாக இருப்பான். அவர்களுக்கு கீழே நிலப்பிரபுக்கள் நிப்பிரபுத்துவத்தினைக் கட்டிக் காப்பவர்களாகக் காணப்படுவார்கள.; எல்லாவற்றிற்கும் கீழே குடிமக்கள் அந்த நிலப்பிரபுத்துவத்துக்குச் சேவகம் செய்பவர்களாக, அமைந்திருப்பார்கள்.
    இவ்வண்ணமாக ஒருபடி நிலை சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ முறைக்கு உரிய சமூக அமைப்பாக இருக்கும்.
    வசதி படைத்த நில பிரபுக்கள் ஆயிரக்கணக்கான தனி நிலங்களைத் தமக்கு உரிமையாகக் கொண்டிருப்பதுடன் தமக்கென தனிப்பட்ட படையும் வைத்திருப்பர். இவர்கள் அரசர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் போர்க் காலங்களிலே தமது படையினை மன்னர்களுக்கு உதவியாக அனுப்புவார்கள் அல்லது தாங்களே தலமைதாங்கி மன்னருக்காகப் போர் புரிவார்கள்.
    இவ்வண்ணம் போர் புரிகின்ற தலைவர்கள் அனைவருக்கும் நிலங்கள் மானியங்களாக வழங்கப்படும் இந்த நிலங்களிலே காணப்படுகின்ற உறவு (நிலப்பிரபுக்களுக்கும் அங்கு வேலை புரிகின்ற பண்ணை அடிமைகளுக்கும் உள்ள உறவு,) பிரபு பண்ணை அடிமை உறவாக இருக்கும். பண்ணை அடிமை முறையின் பிரதான அம்சம் இதுதான.;
    இவ்வண்ணமாக இருந்த ஐரோப்பிய நிலமானிய முறையினை தமிழ்நாட்டுச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்தவர்களாக நாங்கள் வானமாலை, கைலாசபதி போன்றோரைக் குறிப்பிடலாம்.
    இந்தியாவின் நிலமானிய முறைபற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புக்களில் இந்தியாவில் நிலமானிய பொருள் உற்பத்தி முறையினை ஆசிய உற்பத்தி முறை என்று குறிப்பிட்டார். நிலமானிய முறையினை இந்தியாவிற்கு இயந்திரமாகப் பொருத்;தக் கூடாது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி முறைகளுக்கேற்ப பொருத்திப் பார்க்க வேண்டும் என்று டி.டி கோசாம்பி சு.ளு சர்மா போன்றவர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு அவ்வகையில் ஆராயவும் முயன்றனர்
    . (நாளை தொடரும்)
  • Vimalathithan Vimalanathan A good one sir. Waiting for part 3.
  • Kaneshalingam Thirugnanam நன்றி. சமூக அமைப்பு முறை பற்றியவை நன்று.

No comments:

Post a Comment