Tuesday 21 April 2015

தாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை...... ( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும் ஓர் எத்தனம் கட்டுரைத் தொடர் -4

தாய்த் தெய்வத்திலிருந்து
போர்த் தெய்வம் வரை......
( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும்
ஓர் எத்தனம்
கட்டுரைத் தொடர் -..4....
________________________________________________
மௌனகுரு
________________________________________________
மானுடவியலும் வரலாற்றியலும்.மானுட வரலாற்று ஆரம்ப காலத்தை
வேட்டையாடி வாழ்ந்த காலம்,
விலங்கு வளர்த்த காலம்
வேளாண்மை செய்த காலம்
வணிகம் செய்த காலம்
எனப் படிமுறைப்படுத்தும்.
வரலாற்றியல் விளக்கம்
___________________________________
மாயோன் மேய காடுறை உலகம் எனப் பின்னாளில் தொல்காப்பியர் கூறியிருப்பினும்
காடுறை தெய்வமாக அன்னையே கொள்ளப்பட்டிருக்கிறாள்.
காடுகிழாள்,
காடுகிழவோள்,
கானமர் செல்வி
என ஆதித்தாய் அழைக்கப்பட்டாள்.
இனக் குழு மக்களாடும் வேட்டையில் வெற்றி தருபவளாக இவள் இருந்தாள்
. காடுகிழாள், உணவு கேசரிக்கும் காலத்தில் பயிர்த்தொழிற் தெய்வம்,
வேட்டையாடும் காலத்தில் வெற்றி தரும் தெய்வம்
தாயின் இரண்டு பாத்திரம்
இது. குறிஞ்சி நில காலத்தின் நிலை இது
.
இத் தாய்த் தெய்வமே பின்னர் கொற்றவை எனும் தெய்வமாக வளர்;ச்சி பெறுகிறது.
முல்லை நிலத்தில் மந்தை மேய்த்தல் ஆரம்பமானபோது மாடுகள் செல்வமாயின.
மாடுகளைக் கவர்வது முல்லை நிலப் போராகியது
. வெட்சிக்குப் புறனாக கொற்றவை நிலையைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
முல்லை நிலக்காலத்தின் நிலை இது.
முல்லை நில வளர்ச்சியில் மருத நிலம் உருவாகி வேளாண்மை நாகரீகம் வந்து வேந்தர்கள் உருவான போது கொற்றவை சேர மன்னர்களின் வழிபடு தெய்வமானாள்.
புதிற்றுப்பத்து இதனைக்; கூறுகின்றது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆரிய மரபுகள் தமிழகத்துக்குள் நுழைகின்றன.
முருகன் கொற்றவையின் சிறுவனானான். ( திருமுருகாற்றுப் படை)
கொற்றவை சிவனின் மனைவியானாள் ( பரி பாடல்)
தொடர்ந்து
காளி,
துர்க்கை
போன்ற தெய்வங்கள் தமிழகத்துக்கு அறிமுகமாகின்றன
. தமிழரின் போருக்குரிய தெய்வமான கொற்றவையும், ஆரியரின் போருக்குரிய தெய்வமான காளியும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
கொற்றவை காளியான கதை இது.
வடமொழி புராணங்கள் போருக்குரிய தெய்வத்தைத் தந்திருந்தன.
தமிழ் மரபிலும் போருக்குரிய தெய்வ மரபு ஒன்று இருந்தது
. பகைவர் மீது போர் தொடுத்து அவர்களின் இரத்தம் எடுத்து கொலைகள் புரிந்த மன்னர்கட்கு ஒரு தெய்வம் தேவைப்பட்டது
. காளி போர்த் தெய்வமானாள்.
தாய்த் தெய்வம் ஒன்று போர்த் தெய்வமான கதை இது.
மகேந்திர பல்லவன் மகிஸாசுரனை வென்ற துர்க்கையை சிற்பத்தில மாமல்ல புரத்தில் வடித்தான்
. துர்க்கைக்கு நிதம்ப சூதனி கோயிலை விஜயாலயச் சோழன் எழுப்பினான்.
மன்னர்கள் முன்வந்தும் மையச் சமயமாக அது ஆக முடியவில்லை.
சமூக அமைப்பு அதனைப் பெரும் தெய்வமாக மையத்துள் உள்வாங்கவில்லை.
சமூகவியல் பின்னணி
____________________________
சோழச் சமூக அமைப்பையும் அரசையும் ஆராய்ந்த பேட்டன் ஸ்ரைன் அதனை
மையம்
விளிம்பு
என்ற கோட்பாட்டில் பிரித்து ஆராய்ந்தார்.
மையத்தில் பெரும் சமயங்களும், அரசர்களும், நிலப்பிரபுக்களும் பிராமணர்களும் இருந்தனர். வளமான நிலங்களும் உயர்கலைகளும் உயர் இலக்கியங்களும் மையம் சார்ந்தன
.
சாதாரண உழைக்கும் மக்கள் சாதியில் பின்னடைந்தோர் விளிம்பில் வளமற்ற நிலங்களில் வாழ்ந்தனர்.
ஆனால் சோழப் பேரரசின் எழுச்சியின் அடிக்கற்கள் இவர்கள்தான்.
சோழப் பேரரசுக்கு வெற்றி ஈட்டித் தரும் படை வீரர்களாக வயலிலே வேளாண்மை செய்து மைய மக்களுக்கு; உணவு தரும் உழைப்பாளிகளாக தம் உழைப்பை இவர்கள் ஈந்தனர்.
அச்சமூக அமைப்பு விளிம்பு மக்களை முற்றாகத் தள்ளி விடவுமில்லை.
முற்றாகத் தம்மோடு இணைத்துக் கொள்ளவுமில்லை
.
தேவையானபோது அணைப்பு தேவையில்லாத போது புறக்கணிப்பு
எனினும் விளிம்பு விளிம்பிலேயே இருந்தது.
விளிம்புநிலை மக்களின் தெய்வமாக காளியும் விளிம்பிலேயே இருந்தது.
காளி மையத்தின் மதிப்புக்குள் வந்தபோது விளிம்பு மக்கள் அது தமக்குக் கிடைத்த அரச அங்கீகாரமாக எண்ணியிருக்கவும் கூடும்
.விளிம்பின் ஆதரவை மையம் தேடிய போதெல்லாம் விளிம்பின் பல அம்சங்களை மையம் ஈர்த்திருக்கின்றது.
சிலப்பதிகாரத்தில இளங்கோவடிகள் வேடரையும் குறவரையும் மையத்தோடு இணைத்தது தொடக்கம்
சேக்கிழார் பெரியபுராணத்தில் பறையரையும் வண்ணாரையும் வேடரையும் மையத்தோடு இணைத்ததற் கூடாக
நாயக்கர் காலத்தில் பள்ளரும் குறவரும் இலக்கியத்துள் ஈர்க்கப்பட்டு முருகனும் அம்மனும் பெரும் தெய்வங்களாக மையத்துள் இணைக்கப்பட்டது வரை
இவ் போக்கிற்குள் பெரும் உதாரணங்கள் தமிழ் மரபிலுண்டு.
தமது படையில் பெரும் பகுதியாக இருந்த
கள்ளர்
மறவர்
நாடார் ஆகியோரின் மனங்கவர
அவர்களின் தெய்வமான காளியை மையத்தில் வாழ்ந்த மன்னர்கள் பிரதானப் படுத்தியிருக்கலாம்.
மெய்யியல் பின்னணி
_________________________
இந்துகுல மத வரலாற்றுpப்; பின்னணி நமக்கு இது சம்மந்தமாக மேலும் விளக்கம் தரும்.
ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இருந்த இரு பெரும் மார்க்கங்கள் யோகமும் தாந்ரிகமும் ஆகும்
இவ்விரு மத முறைகளும் உடலுக்கும் பிரகிருதி;களுக்கும்; (பிருதுவி அப்பு தேயு வாயு ஆகாயம்) முதன்மை தருவன
.இவ் உலக வாழ்வைப் போற்றுவன
.
இருமை கடந்த ஒருமை நிலையினை யோகம் மூலமும்
தாந்தரிகத்தில் புணர்ச்சி மூலமும் பெறலாம் என்று கூறுபவை
.
பின்னாளில் வேத நாகரீகம் இவற்றைக் கடன் பெற்றே உபநிடதங்களை உருவாக்கியது; என்ற கருத்தும் உண்டு.
இவற்றுள் பெண் தெய்வம் தாந்திரிகத்தோடு தொடர்பு படுத்தப் படுகின்றது.
குண்டலினி சக்தியினை சக்தியின் தெய்வமாக உருவகிப்பர் சிலர்.
பெண் தலைமை ஏற்ற புராதன காலத்தில் பெண் வணக்கமும் அவளின் முதன்மையும் தாந்திரீக நெறியில் இருந்தன
.
உலகமெங்கும் இது முன்பு இருந்தது.
பின்னாளில் சமூகத்தில் ஆண் தலைமை ஸ்தானம் பெற்ற போது யோகம் முதன்மை பெற்றது.
குண்டலினி சக்தியினைத் தனக்குள் அடக்கி மேலெழுந்த மகா யோகி முதன்மை பெற்றார். இதற்கான சான்றுகள் சிந்துவெளியிலுள்ளன.
தாந்திரிகத்தோடு கலந்து மகா சக்தியாக அடக்க முடியாது நின்ற பெண்மையை ஆண் தலைமை மதங்கள் தமக்குள் அடக்கிக் கொள்ள பல வகையில் முயன்றன.
ஆண் தெய்வங்களுடன் அவர்களின்
ஆக்கல்,
அழித்தல்,
அருளல்
என்பவற்றிற்கு சக்தியின் துணைகளைக் காட்டின.
சோழர் காலம,; ஆண் முதன்மை தாங்கும் சைவ சித்தாந்தம் உருவாகி தத்துவமாக எழுந்த காலமாகும்.
எனவே காளியினை சிவனுக்குள் அடக்கும் முயற்சிகள் தோன்றியிருக்கலாம் என்பதில் தவறில்லை.
சைவ சித்தாந்தம் சக்தி பற்றிக் கூறும் கருத்துக்களில் ஆணுக்கு அடங்கியது போல சக்தி இருப்பினும் சக்தியே பெரிதாகத் தெரிவதனைக் காணலாம்.
ஏற்கனவே இதற்கான கதைகளை வடமொழி புராண இதிகாசங்கள் தந்திருந்தன.
கலிங்கத்துப் பரணியில் காளியின் தோற்றமும் சக்தியும் பெரிதுபடுத்தப்படினும் அவள் சிவனின் காதலியாகக் கூறப்படுகின்றாள்.
அவர் பெற்ற பிள்ளைகளாக திருமாலையும், பிரமனையும் குறிப்பிடும் கலிங்கத்துப் பரணி
சிவனைக்குறிப்பிடாமை குறிப்பிடத்தக்கது.
எனவே மையத்தில், நின்ற பெரும் சமயத்திற்குள் சக்தியை உள்ளடக்கும் ஒரு முயற்சியாகக் கூட நாம் கலிங்கத்தப் பரணிக் காளி வழிபாட்டைக் கொள்ளலாம்.
உளவியல் பின்னணி
_________________________
1. வீரர்கள் தூண்டப்பட்டனர்:
______________________________
போரும், அழிவும், கொலையும், கொள்ளையும், வெட்டும், குத்தும், ரத்தமும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு சமூகத்தின் மனநிலை எவ்வாறிருந்திருக்கும்?
கோயில் கட்டுதலும்
, குளம் வெட்டுதலும்,
இலக்கியம் யாத்தலும்,
ஒருபுறம்,
படையெடுப்பும்,
பகைவர் அழிப்பும், மறுபுறம்.
ஒரு சாரார் இன்பம் துய்க்க
மறுசாரார் துன்பம் எய்தினர்.
தம்முயிர் ஈர்ந்து மன்னனுயிர் காக்கும் வேளக்காரப்படை களையும் களத்தில் மன்னனுக்காக உயிர்விடுதலே மகாபாக்கியம் என்று கருதிய சாதனை வீரர்களையும் மனதால் வெல்ல வேண்டியிருந்தது
.
சோழமன்னர்களின் வேளக்காரப்படைகளாக வட நாட்டினரே இருந்தனர்.
இவர்கள் காளி வழிபாட்டினர்.
பிரதான நம்பிக்கைக்குரிய அவர்களின் பிரதான தெய்வத்திற்கு முதலிடம் அளிப்பதன்மூலம் அவர்களின் உளமும் திருப்திப்படலாம் அல்லவா?
தன்னைப் பலியிடல், போரில் இறத்தல் என்பன வீர சுவர்க்கம் பெறும் வழிகளாகக் கூறப்பட்டன.
போருக்கென்று ஒரு தெய்வம் உள்ளாள்.
அவள் மாகாளி.
போரில் இறந்தபின் அவளின் பாதமடைதல் அவள் கணவன் சிவனின் பாதமடைதலாகக் கருதப்பட்டது.
இது படை வீரர்கட்கு போரில் பயமின்மையையும், போருக்கான ஒரு அர்த்தப்பாட்டையும் ஏற்படுத்த எடுத்த ஓர் உளவியல் முயற்சி எனலாம்.
யுத்தம் அநாகரிகமானது,
கொலை வெறுக்கப்படக்கூடியது.
இரத்தம் மோசமாமனது.
ஒருத்தரை வெட்டுதல், கொலை செய்தல் நாகரிகமான மனிதர்களின் செயலன்று.
எனினும் மக்கள் யுத்தத்திற்குத் தூண்டப் பட்டனர்.
மன்னனுக்காக் தம் தலைவர்களுக்காக மக்கள் படையிற் சேர்ந்தனர்.
படையில் இடைநிலை மக்களின் தலைவர்மார் பலர் தம்கீழிருந்த சிறுசிறு படையினருடன் இணைந்தனர்.
படையினராக இருந்து நிலக்கிழார்களான முல்லை நில மக்களான நத்தமான்,
சுருதிமான்,
மலையமான்,
பள்ளி
ஆகிய இனக்குழுமங்களை சுப்பராயலு குறிப்பிடுவார்.
2.போரை இயல்பாக்கியமை
:
போர் உகப்புரியதன்று
. எனினும் போரை மகிழ்வாக்கி, இயல்பாக்கி அதை ஓர் உணவு உண்ணும் உண்டாட்டாக மாற்றியதன்மூலம் போர் அவலம் தந்த உளவியற் தாக்கங்கள் நீக்கப்பட்டன.
3. மன அழுத்தத்திலிருந்து தப்பும் உளவியல்
பிரச்சனைகளுக்குத் தப்பும் ஒரு முறைதான் நகைச்சுவை
; கிண்டல் என்பன.
சமூக விமர்சனம் சிலவேளை கிண்டலாகவும் வெளிவரும்.
இதுவோர் உளவியல் வெளிப்பாடு.
கலிங்கத்துப் பரணியில் வரும் பேய்களின் கும்மாளம் பிரச்சனைகளுக்குத் தப்ப போரில் ஈடுபட்டு உளவியற் தாக்கம் அடைந்திருந்த வீரர்களுக்கு உதவியிருக்கலாம்.
. 4. நனவிலியின் அடக்கப்பட்ட ஆசை.
19ம் நூற்றாண்டின் பின் மனித மனம் பற்றியும் சமூக மனம் பற்றியும் ஆய்வுகள் வரத் தொடங்கி விடுகின்றன.
இதனைப்புதிய உளவியல் என்பர்.
சிக்மண்ட் பிராய்ட், யுங், லக்கான் இவர்களின் மனிதமனம் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை.
உளப்பகுப்பு ஆய்வியல் என்னும் பகுப்பாய்வு உளவியல் என்றும் இவற்றை அழைப்பர்.
மேற்குறிப்பிட்ட உளவியலாளரிடையே ஒற்றுமைகளும் வேறுபாடுகளுமுண்டு.
இவர்கள் நனவிலி மனம் பற்றிக் கூறுகின்றனர்.
நனவிலி மனம் நமக்கே தெரியாத மனம்.
மனிதர்களின் வித்தியாசமான நடத்தைகட்கு சிந்தனைகட்கான ஊற்றுக்கண் நனவிலிமனமே.
அடக்கப்பட்ட ஆசைகள் நனவிலி மனதை இயக்குகிறது என்பர் பிராய்ட. ;குழந்தைப் பருவத்தில் துன்பப்பாதிப்புக்களும் இன்பப் பாதிப்புக்களும் ஒருவருக்கு ஏற்படுகின்றன.
இன்பப்பாதிப்புகள் ஏக்கத்தையும்
துன்பப்பாதிப்புக்கள் வலியையும் ஆதாரமாகக் கொண்டவை.
நன்மையோடு தொடர்புடைய கடவுள் நனவிலியின் இன்பப் பாதிப்புக்களுடனும் தீமையோடு தொடர்புடைய கடவுள் நனவிலியின் துன்பப் பாதிப்புகளுடனும் இணக்கம் கொண்டிருக்கும்.
நனவிலினோடு நாட்டார் தெய்வங்கள்
கடவுள் என்ற கருத்தாக்கத்தில் நனவு மனக் காரணிகளுக்கும் அப்பால் நனவிலி மனக்காரணிகளும் அடங்கியுள்ளன.
செவ்விய தெய்வங்கள் நன்மை செய்யும் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.
நாட்டார் தெய்வங்கள் தீமை செய்யும் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.
மன்னிப்பு எனும் கருத்தாக்கம் செவ்விய தெய்வத்திடமுண்டு. தண்டிப்பு என்பதை நாட்டார் தெய்வங்கள் கொண்டுள்ளன.
உள்ளத்து உணர்ச்சிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில்
செவ்விய தெய்வங்கள் அச்சத்தோடும் நாட்டார் தெய்வங்கள் பதட்டத்தோடும் தொடர்புடையதாயுள்ளன என்பர்.
அச்சம், பதட்டம் என்பன ஒன்றுபோலத் தோன்றினும் இயல்பில் வௌ;வேறானவை.
அச்சத்திற்கான காரணத்தை உள்ளம் அறிந்திருப்பின் அதை அச்சமென்றும், அறியாதிருப்பின் பதட்டம் என்றும் உளவியல் கூறுகிறது.
நாட்டார் தெய்வங்களின் மீதான பதட்ட உணர்வு வெளிப்பாடுகளுக்கு அத்தெய்வங்களின் தோற்றம், கதைகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் ஆகியவையும் மூலக்காரணிகளாகும்.
அறிவு கோபம், மூர்க்கம், ரத்தம், கொடூரம் என்பன காளியிலும் காளி வழிபாட்டிலும் காண்கிறோம்
. நனவிலி மனதின் துன்பப் பாதிப்புகளோடு இவை தொடர்புறுகின்றன.
துன்பப்பாதிப்புகளுக்குள்ளான நனவிலி மனதிற்கு காளி வழிபாடு, அதன் தோற்றம் கதைகள் என்பன மாற்றீடுகளாக அமைந்திருக்க வாய்ப்புண்டு.
6. . நனவிலி மனதில் குரூரத்திற்கு வடிகால்
நனவிலி மனதில் புராதன மிருகக் குணங்கள், அதிகாரம் செலுத்தல் என்பன நிறையவேயுள்ளன.
ஈகோ இவற்றை வெளியில் வராமல் தடுத்து மனிதரை நாகரிக மனிதராக வைத்திருக்கும்.
எனினும் இந்த நனவிலி மனம் வேறு வகையில் தன் உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ளும்.
இதனை நாம் மாற்றீடுகள் எனலாம். குரூரமான காட்சிகளை ரசிக்கும் தன்மையை இதன் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். (இன்றைய அடிதடி, வெட்டுகுத்து சினிமாப்படங்களை வயது வந்தோhரும் ரசிப்பதற்குக்குக் காரணம் அவர்களின் நனவிலி மனதிற்குள் அவை உறைந்து கிடப்பதனாலேயே)
7.. கூட்டு நனவிலி மனதின் வெளிப்பாடு
ப்ராடிடமிருந்து பிரிந்து பகுப்பாய்வு உளவியலை நிறுவியர் யுங் ஆவார்.
தனியார் நனவிலி மனதிற்கும் அப்பால் கூட்டு நனவிலி மனம் பற்றி இவர் கூறினார்.
புராதன காலத்தில் கூட்டு வாழ்வு வாழ்ந்த குழந்தைச் சமூக காலத்தில் திரண்டிருந்த
பெண் வழிபாடும்,
பெண் வணக்கமும்
வளர்ச்சியடைந்தபின் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதுள் இருந்திருக்கும்.
அந்த நனவிலி மனம் குலோத்துங்க சோழனுக்கும் இருந்திருக்கும். ஜயங் கொண்டாருக்கும் இருந்திருக்கும்.
எனவே காளி வர்ணனையை அக்கூட்டு நனவிலி மனதினைத் திருப்தி செய்யும் செயல் என்றும் கூறலாம்.
காளியின் வியாபகமும் தன்மையும்
________________________________________
சுருங்கச் சொன்னால் காளி
பண்டைய குழுவாழ்க்கையின் கூட்டு மனதின் வெளிப்பாடாக மக்களைக் காக்கும் தாய்த் தெய்வமாக
அடக்க முயன்றபோது அடங்க மறுத்த மகா சக்தியாகக் காட்சி தருகிறாள்.
காளிவழிபாடு இன்று பிரதான போக்குகளில் ஒன்றாகிவிட்டது.
எல்லையிலே இருக்க விட்ட காளியை அவள் தன்மை குறைத்து ஊருக்குள் கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தன் கொடூர தோற்றம் குறைத்து. அருள் தரும் தெய்வமாக பல இடங்களிற் காட்சி தருகிறாள்.
யாழ்ப்பாணத் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் இதற்கு உதாரணமாகும்.
எனினும் நாட்டார் நிலையில் அவள் பழைய காளியாகவும் திகழ்கிறாள்.
இதற்கு மட்டக்களப்பு புன்னைச் சோலைக் காளியம்மன் உதாரணமாகும்.
சமஸ்கிருத சுலோகம் சொல்லி ராஜராஜேஸ்வரியாக, நாராயணியாக அவளைப் பிராமணர் பூசைபண்ண,
மந்திரம் மன்றாட்டு, தெய்வமாடல் என்பன மூலம் கிராமிய மக்களும், அடித்தட்டு மக்களும் அவளுக்கு வழிபாடு செய்கிறார்கள்.
தேரில் வைத்து ஆகம முறைப்படி அவளை ஒரு சாரார் ஊர்வலம் செய்ய,
தீப்பாய்ந்து தெய்வமாடி இன்னொரு சாரார் சடங்கு செய்கிறார்கள்
.
பிராமணரும் பிராமணரல்லாதர்கும் பூசை பண்ணும் ஒரு தெய்வம் காளியாகும்.
காளியின் தோற்றங்கள் முக்கியமானவை.
ஆண் ஒருவனின் (தாரகாகரன்) இரத்தம் வடியும் அறுத்த தலையைத் தாங்கி இன்னொரு ஆணின்(சிவன்) மேல் நின்று வீர கர்ஜனை புரியும.; பெண்மையின் உருவமாகக் காட்சிதரும் காளி விடுதலை வேண்டுவோருக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராகக் குரல் தரும் பெண் விடுதலை வேண்டுவோருக்கும் உகந்த குறியீடாகக் காட்சி தருகிறாள்.
காளி உபசகராக இருந்து அனுபூதி நிலைபெற்ற இராமகிருஷ்ணரையும் காண்கிறோம்.
காளிவாலயம் பெற்று கிராமத்தைக் கலக்கிப் பயமுறுத்தும் பூசாரிமாரையும காண்கிறோம்.
ஒன்று அனுபூதி மற்றது மந்திரம், கிரியை
.
காளி உபாசகர்களுள் ஒருவர் பாரதியாh.;
பெண்விடுதலையை முதலிற் பாடிய ஆண்மகன் அவர்.
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
திமிர்ந்த ஞானச் செருக்கு
என்று புதுமைப்பெண்ணுக்கு அவர் கூறும் இலக்கணம் காளியின் தோற்றத்தால் கவரப்பட்டமையினாலேயே என்பதிற் தவறிருக்காது.
சிவனின் ஊழிக்கூத்துப் போல
சிவனின் ஊழிக்கூத்துப் போல
சக்தியான காளி ஆடும் ஊழிக்கூத்துப் பற்றி அவர் பாடிய ஊழிக்கூத்து அவர் பாடிய பாடல்களுள் மிகச் சிறப்பான பாடலாகக் கொள்ளப்படுகிறது.
காளி
2000 வருட காலமாகப் பெண்களை அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தினருக்கு
ஒரு சவாலாக,
அடக்க முயன்றும் அடங்காத பெண்போல
இன்றும் நிற்கிறாள்.
அவளை அடக்கிவிடும் முயற்சிகளும்
தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன
.(கட்டுரைத் தொடர் முடிந்தது)

No comments:

Post a Comment