Tuesday 21 April 2015

பேராததனைப் பல்கலைக் கழக ஆய்வு மாநாட்டில் சங்க காலம் பற்றிய எனது உரையில் பரிணாம வளர்ச்சியில் நான் பாலை நிலம் பற்றிக் குறிப்பிடாதது பற்றிவசந்தன்வேலுப்பிள்ளை வினா எழுப்பியிருந்தார்.அதற்கான சிறு விளக்கம் இது

    பேராததனைப் பல்கலைக் கழக ஆய்வு மாநாட்டில் சங்க காலம் பற்றிய எனது உரையில் பரிணாம வளர்ச்சியில் நான் பாலை நிலம் பற்றிக் குறிப்பிடாதது
    பற்றிவசந்தன்வேலுப்பிள்ளை வினா எழுப்பியிருந்தார்.அதற்கான சிறு விளக்கம் இது
    வசந்தன் வேலுப்பிள்ளை தாங்கள் எழுப்பிய வினவுக்கு பதில் தர தாமதமாக்கியமைக்குமன்னிக்க வேண்டும்
    தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்த விதம்.
    பொருளதிகாரத்தில் அகத்திணையியலில் தொல்காப்பியர் பாடலுள் வரும் விடயங்களை மூன்றாகப் பிரிக்கின்றார்.
    அவையாவன முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், தொல்காப்பியம் அகத்திணையியல் சூத்திரத்தில்
    முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
    நுவலுங்காலை முறை சிறந்தனவே.
    பாடலுள் பயின்றவை நாடும் காலை
    என்பார் தொல்காப்பியர்.
    இவற்றுள் உரிப்பொருளே முக்கியமானது.
    உரிப்பொருள் என்பது அந்நிலத்தில் நிகழும் அகஒழுக்கமாகும். அதாவது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே (தலைவனுக்கும் தலைவிக்குமிடையே) வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் புணர்வு, பிரிவு, காத்திருப்பு, இரங்கல், ஊடல், ஆகிய மன உணர்வுகளாகும். இவ்வுரிப் பொருளைச் சிறப்பிக்கவே முதற்பொருளும், கருப்பொருளும் உதவும்
    .
    முதற்பொருள் என்பது அந்த ஒழுக்கம் நிகழும் நிலமும், பொழுதும் ஆகும். இவ்வண்ணம் நிலம் பற்றிக் கூறிய தொல்காப்பியர் அந்நிலத்தை
    காடுறை உலகம் (முல்லை)
    மைவரை உலகம் (குறிஞ்சி)
    தீம்புனல் உலகம்(மருதம்)
    பெருமணல் உலகம் (நெய்தல்)
    என நான்கு நிலமாகப் பிரிக்கின்றார்.
    பாலை நிலம்.
    பாலை நிலம் பற்றித் தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை
    . பாலை பற்றிக் கூறப்படுவது சிலப்பதிகாரத்திலே தான்.
    சிலப்பதிகாரத்தில் காடு காண்காதையில் 60-66வரையுள்ள வரிகளில்
    பாலை நிலம் பற்றிக் கண்ணகிக்கும், கோவலனுக்கும் கவுந்தியடிகள் கூறுவதாக இளங்கோவடிகள் இவ்வாறு கூறுகிறார்.
    கோத் தொழிலாளரொடு கொற்றவன் கோடி
    வேத்தியலிழந்த வியனிலம்போல
    வேனலங்கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
    தானலம் திருகத் தன்மையிற் குன்றி
    முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து
    நல்லியல்பிழந்து நடுங்கு துயர் உறுத்துப்
    பாவை என்பதோர் படிவம் கொள்ளும்.
    இவ்வரிகளுக்கு ந.மு வேங்கடசாமி நாட்டார்
    பின்வருமாறு உரை கூறுவார்.
    அரசியல் தொழிலினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் செங்கோல் செலுத்தாமல் விடுதலாலேயே அரசின் இயல்பை இழந்த அகன்ற நிலத்தைப் போல வேனிலாகிய அமைச்சனொடு வெல்லிய கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன் நலம் வேறுபடுதலால் தமது இயற்கை கெட்டு முல்லை குறிஞ்சி எனும் இரு திணையும் முறைமை திரிந்து தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோர் நடுங்கும் வண்ணம் துன்பத்தினை உறுவித்து பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும்.
    இதன்படி வேனிற் காலத்தில்
    குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் பாலை நிலமாக மாறுகின்றன என்பது தெரிய வருகிறது.
    வேனிற் காலம் வந்ததும் (சித்திரை வைகாசி) சூரியனுடைய வெப்பம் அதிகம் ஏற்படும். வேனிற் காலமும் சூரிய வெப்பமும் இணைய மழை ஏற்படாது நிலம் வரளும். இந்நிலையில் செழிப்பாயிருந்த குறிஞ்சி, நிலமும் பசுமை நிரம்பிய காட்டு நிலமான முல்லை நிலமும் தமது செழிப்பு, குளிர்ச்சி என்ற இயல்பினின்றும் மாறி வரட்சி மிக்க பாலை நிலமாகி விடும்.
    இப்பாலை மற்றவர்க்கு துன்பம் தரும் நிலமாகும.;
    இக்காலத்திலே தான் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொரு குடியிருப்புக்கு மக்கள் செல்வர். உடன் போக்கு (பெண்ணைக் ஆண் கூட்டிக் கொண்டு ஓடுதல்)
    பொருள், வயிற்பிரிவு என்பன இக்காலத்திலேதான் நிகழும்.
    இதனாலேயே பாலைக்கு பிரிவு என்பது வந்தது.
    மீண்டும் வேனிற் காலம் போய் மழைகாலம் தோன்றியதும் பாலை நிலம் மாற்றமடைந்து தன்னியல்பான குறிஞ்சி, முல்லை, நிலமாகி விடும்.
    இதன்படி பாலை என்ற ஒரு நிலமில்லை.
    அது காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் ஒரு நிலம் என்பது தெளிவாகிறது.
    பாலை என்ற மரம் இங்கு முக்கியமானது. (மட்டக்களப்பிலே பாலை மரம் உண்டு. சித்திரை மாதத்தில் பாலைப்பழம் இங்கு அதிகம்)
    பாலை மரம் பக்க வேர்களைக் கொண்டதல்ல. நீண்ட ஆணி வேரைக் கொண்டது. அதன் ஆணிவேர் மைல் கணக்கில் கீழே சென்று நிலத்தின் ஆழத்திலுள்ள அடி நீருடன் உறவாடும் தன்மை கொண்டது
    . எந்த வரட்சியும் பாலை மரத்தைப் பாதிக்காது
    . தாவரவியலுடன் இம் மரங்களை இணைத்துப் பார்க்கையில் தான் இத் தெளிவினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
    நிலத்தை நான்காக வகுத்தார் தொல்காப்பியர்
    . அந்நிலத்தில் வழங்கும் கருப்பொருள்களை
    தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி,யாழ் என்று பிரித்தார்.
    இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கியர்
    அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலத்திற்கும் உதாரணம் தந்தார். அத்தோடு கருப்பொருள்களுள்; பூ, நீர், ஊர், என்பனவற்றையும் சேர்த்துக் கொண்டார்
    மௌனகுரு
    .
    .
  • Abdul Haq Lareena அரிய பதிவுக்கு மனமார்ந்த நன்றி
  • Rasaratnam Krishnakumar //மீண்டும் வேனிற் காலம் போய் மழைகாலம் தோன்றியதும் பாலை நிலம் மாற்றமடைந்து தன்னியல்பான குறிஞ்சி, முல்லை, நிலமாகி விடும்.
    இதன்படி பாலை என்ற ஒரு நிலமில்லை.
    அது காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் ஒரு நிலம் என்பது தெளிவாகிறது.// நல்லபனுள்ளபதிவு sir
  • குலசேகரம் சஞ்சயன் இல்லாததைக் கூட வகுத்துக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள் இல்லையா - பூச்சியம். அந்தவகையில், அந்தந்த நிலங்கள் தமது தனித்துவத்தை இழக்கும்போது "பாலை" என்று அடையாளம் காணப்படுவதால், அதையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்பதே என் வாதமாக இருக்கும்.
  • Mohamed Razmi பனுள்ள பதிவு. மனமார்ந்த நன்றி Sir
  • Jawad Maraikar உங்கள் விளக்கம் முக்கியமானது . நிலம் நான்கு ( நானிலம் ) , திணை ஐந்து ( ஐந்திணை ) என்று கூறுவதுதானே மரபு. பாலை என்ற திணையைப் ' பாலை வனம் ' என்று தவறாக எண்ணிக்கொண்டு ' மணலும் மணல் சார்ந்த இடமும் ' என்று கற்பிப்போர் பலர் உள்ளனர். இந்தியாவின் தென்னாட்டி...See More
  • Mohamed Razmi Dear Maunaguru Sinniah Sir, Your posts carry vital information. In order to share them to others, relavant grops your sharing settings does not aloow. Therefore please change your sharing settings as 'Universal'. Thank you for your kindness!
  • Slm Hanifa நல்ல பதிவு.வாழ்த்துக்கள் .
  • Maunaguru Sinniah பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.காத்திரமான விடயங்களை வாசிப்போர் இன்னும் உள்ளனர் என்ற செய்தி
    மகிழ்ச்சி தருகிறது.இன்றிலிருந்து சோழர் காலம் சம்பந்தமாக நான் முன்னர்எழுதிய கட்டுரையொன்றை தொடர்ச்சியாப் பதியவுள்ளேன்
  • Murugesu Natkunathayalan அருமை ....அருமை
  • Kaneshalingam Thirugnanam
    Write a comment...

No comments:

Post a Comment